ஏன்..?





சிறிது நாட்களாகவே அமிஞ்சிக்கரை ஆறுமுகத்தின் பெயரை தின, வார, மாத பத்திரிகை, இதழ்களில் காணாதது கண்டு கணேசனுக்குள் ஏகப்பட்ட திகைப்பு, வியப்பு.
ஆறுமுகம் இவரின் சமகால எழுத்தாளன் மட்டுமல்ல. இருவரின் கதை, கட்டுரைகளில் குறை நிறைகள் இருந்தால் இருவரும் பேசி, கலப்பது வழக்கம்.
இப்போது பெயரே காணவில்லை என்பதால்…
‘ஏன்.., என்ன காரணம்..? உடல்நிலை சரி இல்லையா..? ஆளே இல்லை இறப்பா..? ‘ – கணேசனுக்குள் வண்டு குடைந்தது.
பொறுக்கமாட்டாமல் கைபேசி எடுத்தார்.
நண்பன் எண்களைத் தேடி எடுத்து அழுத்தினார்.
எதிர் முனை எடுக்கப்பட…
“நண்பா…?” அழைத்தார்.
“என்ன கணேசன்..?” ஆறுமுகத்தின் குரல்.
“நலமா..? ”
“நலம்..”
“என்ன சமாச்சாரம் பத்திரிக்கைகளில் உன் பெயரைக் காணோம்..? ”
“சொல்றேன். ரெண்டு மாதங்களுக்கு முன் என் மூத்த மகனுக்குத் திருமணம் முடிச்சேன். நான் வீட்டில் தனி அறையில் இருந்து எழுதினாலும் என் கண் விழிப்பு, அறை வெளிச்சம் என்பது புதுமணத்தம்பதிகளுக்கு சங்கடம், சங்கோஜம், தொந்தரவு. அதனால் என் எழுத்துப் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். விரைவில் அவர்கள் தனிக்குடித்தனம் சென்ற பிறகு என் பணி தொடரும். !”சொன்னார்.
“சரி” கணேசன் மனம் நிறைவாய் தன் கைபேசியை அணைத்தார்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |