என்ன தெரியும் இந்தச் சின்னப் பெண்ணுக்கு?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 6,278 
 
 

அதிகாலை நேரத்திலேயே வீடு இரண்டுபட்டது, பேத்தியின் அழுகையும் அதனைச் சமாதானப்படுத்த முடியாத தோல்வியில் அதன் தாயின் கத்தலுமாய் இரண்டு பட்டது வீடு!

‘ஆறுவது சினம்..!’ கோபத்தை அடக்கு என்று சொல்லிக் கொடுத்தார் ஆசிரியர். என்ன சொல்லியும் அதனை எத்தனை முறை சொல்லியும் ஆறுவது சினம் ‘கோபத்தை அடக்கு!’ என்பதை மாணவன் ‘ஆறாவது சினம்!’ என்றான்.

கோபம் வந்த ஆசிரியர் கொதித்தார். எத்தனை தடவை சொல்றது?! ஆறுவது சினம் என்று…?! நீ ஆறாவது சினம் என்றே சொல்கிறாய் அறிவில்லாமல்! என்று சொல்லி, மாணவனைக் கடுமையாகக் கோபித்தார். ஆசிரியர் எங்கே கோபத்தை அடக்கப் போகிறார்?

‘அப்படித்தான் ஏன் கத்தி அழறே?’ குழந்தையைக் கேட்ட தாய் தான் கத்தினாள் காரணத்த அறிந்து கொள்ளும் நோக்கில்.

குழந்தை மாதக் கணக்கில் கோடை விடுமுறையை அனுபவித்த திளைப்பில் பள்ளிக்கு மறுபடியும் திரும்ப மறுத்து அழுதது!.

தாத்தா காரணத்தைப் புரிந்து கொண்டார். கத்தும் தன்மகளுக்கு அறிவுறுத்துவதா? பள்ளி திரும்ப மறுக்கும் பேத்திக்கு எடுத்துரைப்பதா? குழப்பம்.

படக்கென ஒரு ஞானோதயம் பேத்தியைப் பார்த்துச் சொன்னார்: ‘இத பாரு, தாத்தாவுக்கு ஐம்பது வயசாச்சு! நானே இன்னும் பள்ளிக்கூடம் போறேன். நீ இன்னும் சுட்டிக் குழந்தைதான். நீ போக மறுத்தால் எப்படி?’ குழந்தை யோசித்தது… தான் போக மறுப்பது தப்புத்தானே?! என்று.

தாத்தா யோசித்தார்.. ‘பேத்தியைப் பள்ளிக்கு அனுப்ப, ரிடையர்டு ஆகும் வயதை நெருங்கும் தான் பள்ளிப் போவதாக சொன்னதை எதோ தன்னைப் போலவே தாத்தாவும் படிக்கத்தான் போகிறார் என்று நினைக்கும் பேத்திக்கு. தான் கற்றுத்தரத்தான் போகிறேன்!. ‘என்ன தெரியும் இந்த சின்ன பெண்ணுக்கு? ஒண்ணும் தெரியாத வண்ணக் கண்ணுக்கு?’ கல்வி கரையில்.. எந்த வயதிலும் படிக்கலாம். படிப்புக்கு ஏது வயது?

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *