உழைப்பும் உயர்வும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 50 
 
 

தன் வாலிப வயதில் கஷ்டப்பட்டு உழைக்காதவன் தன் முதிர் வயதில் கண்ணீர் சிந்துவான்.

காவலூர் என்ற ஒரு சிறிய கிராமம் இருந்தது அதில் மகேஷ் என்ற ஒரு எட்டு வயது மகன் இருந்தான். அவன் வீட்டு எதிரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது அந்த குடும்பத்தில் தந்தை தாய் மற்றும் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்.

மகேஷ் எப்போதும் அந்த எதிர் வீட்டு பிள்ளைகளையும் அவர்கள் தந்தையையும் பார்ப்பது வழக்கம். ஏனென்றால் அந்த தந்தை எப்போதும் கண்டித்துக் கொண்டே இருப்பார் படி படி என்று “இப்பொழுது கஷ்டப்பட்டால் தான் முதிர் வயதில் நிம்மதியாக இருக்க முடியும்” என்று சொல்வார்.

அந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் தன் தகப்பன் சொல்வதை கடினமாக பார்ப்பார்கள். ஆனால், மூத்த மகன் மற்றும் தகப்பன் கண்டிப்பை ஏற்றுக் கொள்வான் இளைய மகன் தன் தகப்பன் கண்டிப்பை அசட்டை பண்ணுவான்.

இவைகளையெல்லாம் மகேஷ் பார்த்துக்கொண்டே வளர்ந்தான்.

அந்த எதிர் வீட்டுப் பிள்ளைகளிள் மூத்த மகன் கடினமாக படிக்க தொடங்கினான். இளைய மகன் சோம்பேறியாகவே இருந்தான்.

மூத்த மகன் பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரியில் இலங்களை மற்றும் முதுகலை பட்டத்தையும் பெற்று நல்ல ஒரு நிலையில் ஒரு பெரிய நிறுவன அதிகாரியாக அமருகிறான்.

ஆனால் இளைய மகன் பத்தாம் வகுப்பில் தோல்வியை சந்தித்து அதற்கு மேல் அவன் படிப்பை வேண்டாம் என்று தன் வாலிப நண்பர்களுடன் நாட்களை வீண் செய்தான். ஒரு மூன்று வருடம் கழித்து அவனுக்கு வாழ்க்கை பயம் வரத் தொடங்கியது அவன் ஒரு முயற்சி செய்தான். ஏதாவது, ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கேட்க வேண்டும் என்று வேலை கேட்க தொடங்கினான் எங்கும் கிடைக்கவில்லை செல்லும் இடமெல்லாம் படிப்பும் பட்டமும் கேட்கிறார்கள் இவனுக்கு ஒரே மன கஷ்டம் என்ன செய்வது என்றே தெரியவில்லை கடைசியில் லாரி (Mechanic)பொறிமுறையாளர் கடையில் வேலைக்கு சேர்ந்து தினமும் மன வருத்தத்துடன் வேலை செய்து வந்தான்.

இவை அனைத்தையும் மகேஷ் பார்த்துக் கொண்டே இருந்தான்.

மகேஷ் மனதில் ஒரு தீர்மானம் எடுத்தான்.

“தன் வாலிப வயதில் கஷ்டப்பட்டு உழைக்காதவன் தன் முதிர் வயதில் கண்ணீர் சிந்துவான்”

என்று எண்ணி நாம் இப்பொழுது இருந்தே கடினமாக உழைக்க வேண்டும், அப்பொழுது தான் பிற்காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும் என்று தீர்மானித்தான்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *