உன்னைப் போல் பிறனையும்…?
கதையாசிரியர்: கே.ஆர்.டேவிட்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 154
(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘உன்னைப் போல் பிறனையும் நேசி’ சீமெந் தால் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் அந்த வாக்கியம் பளிச்சிட்டுத் தெரி கிறது. அந்த எழுத்துக்களின் மேல் அதைக் கருத்தரித்துப் பிரசவித்த யேசுவின் சிலை…
….. சிலுவையில் இருகைகளும் அறையப்பட்டு இரு கால்களும் அறையப் பட்டு… முள் முடியோடு கூடிய தலை கீழ் நோக்கித் தொங் கியபடி….. இரத்தந் தோய்ந்த உடலாக… வைக்கப்பட்டி ருக்கின்றது.
சிலுவையின் அடியில் எழுத்துக்கள், எழுத்துக்களின் கீழ் சுவரோடு சேர்த்து, முன் பக்கம் மறைக்கப்பட்ட நிலையில் உதிக் கின்ற சூரியன் போல் ஒரு மின்சார ‘பல்ப்’ ஒளி வீசிக் கொண்டி ருக்கின்றது. பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணுவதற்கும், இரவு நேரத்தில் இந்த மின்னொளியில் இதே காட்சியைக் காணுவதற்கும். மனதில் ஏற்படுகின்ற உணர்வு நிலையைப் பொறுத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.
அதிகம் கடவுள் நம்பிக்கையுடையவன் நான்.
இப்போதைக்கு எனது நிலை இதை ரசிக்கும் சூழ்நிலையில் இல்லாவிட்டாலும் தவிக்கின்ற என் மனத்திற்கு கடவுள் நம்பிக்கை ஒரு பற்றுக் கொடியாகி விடலாம்…. என்றொரு நம்பிக்கை இந்த எண்ணம் எனது தவிப்புக்குத் தீனியாக… மானசீகமாக நான் வணங்குகிறேன்.
தனிப்பட்ட டாக்டர் ஒருவரால் நடத்தப்படும் வைத்திய சாலையிது வாசல் கேற்றைத் தாண்டி, முன் ‘கோல்’ வாசலில் நின்று கொண்டிருக்கிறேன் சுருக்குக்கேற் பூட்டப்பட்டிருக்கின்றது.
இரவு ஒன்பது மணி.
இறந்து போன என் மனைவியின் சீலையில், அவள் இறக்கும் போது விட்டுச் சென்ற என் குழந்தையை சுற்றி வைத்திருக்கிறேன். ஒரு வயது நிரம்பாத குழந்தை.
கண்கள் மேல் சொருகி மூன்றாம் பிறைபோல் வெள்ளை முளி தெரிகின்றது. வாயால் வெண்ணுரை வழிந்து கொண்டிருக்கின்றது… இடையிடையே வலிப்பால் ஏற்படும் துடிப்பு…. விக்கல்!
நான் இங்கு பல தடவை வந்திருக்கின்றேன். இதே எழுத்துக்களையும் இதே வாக்கியத்தையும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கின்றேன்…. ஆனால் இன்று மட்டும் எனதுள்ளம் இந்தக் காட்சியில் நிலைக்குத்தி நிற்கிறது… எனது நம்பிக்கையின் ஆணி வேரிலும் ஏதோ ஒரு வித பிடிப்பு.
கடவுளுக்கு அடுத்தது வைத்தியன் என்று தெரியாமலா சொன்னார்கள். அதே கடவுளின் திரு உருவச்சிலை வைத்திய சாலை வாசலில்….
…ஆண்டவரே.. இந்தத்தாயில்லாக் குழந்தையைக் காப் பாத்தும். ஆண்டவரே… என்னையும் குழந்தையையும் பிரிச்சுப் போடா தேயும்… ஆண்டவரே… மானசீகமாக வணங்கிய நான் வாய்விட்டுக் கூறுகின்றேன்.
பிள்ளைப்பாசம் கடவுள் நம்பிக்கையோடு சங்கமிக்க எனது வறுமை நிலையின் தூண்டலால்… நான் ஆண் என்பதையும் மறந்து கண்ணீர் சிந்துகிறேன்..
வைத்தியசாலையில் பெரும் அமைதி நிலவியிருந்தாலும் உள்ளே பேச்சொலி மந்தமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றது.
சுருக்குக்கேற்றின் இடைவெளியூடாக டாக்டரின் அறை தெரிகிறது. அதுவும் பூட்டப்பட்டிருக்கின்றது.
அறைவசலில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் பிரத்தியேகமாக இணைக்கப்பட்ட மின்னொளியில் ஒரு பாவைப்பிள்ளை தெரிகிறது… பவுண் சங்கிலி, காப்பு, மோதிரம்… சட்டை… ஒரு பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு…! அந்தப் பாவைப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எனது கைப்பிடிக்குள் அடக்கிக் கிடந்த குழந்தையைப் பார்க்கிறேன்… மரத்திலிருந்து ஒடிக்கப்பட்ட தளிர் போல் வாடிவ தங்கி குளிர்ந்து போய் கிடக்கிறது..
‘யாராவது வருவார்களா.. என்ற நம்பிக்கையில் எட்டி யெட்டிப் பார்க்கிறேன்.. பெல்லை அழுத்தி அதிகாரமாகக் கூப்பிட்டு மருந்தை வாங்கி விடலாம். ஆனால் எனது கை… வெறுங்கை…!
…..கொட்டாவி… புளிச்சல் ஏவறையாகுமா…? ஆக்க முடியுமா…?
மறுபுறம் தவிப்பு… என்ன செய்வது…?
பெல்லை அமர்த்துகிறேன். வேலைக்காரன் வருகிறான். “என்னண்ணை இந்த நேரம்…”
“இந்தப் பிள்ளைக்குச் சுகமில்லைத் தம்பி….”
“என்ன செய்யிது…”
“வலிப்பு…:”
“எப்ப கூட”
“இப்ப தான்”
“உள்ளை வா…” சுருக்குக் கேற்றைத் திறந்து விடுகின்றான். நான் டாக்டரின் அறைக் கதவோடு போடப்பட்டுள்ள வாங்கில் அமர்கிறேன்.
வேலைக்காரன் உள்ளே போகிறான்.
“என்ரை புள்ளையை விட்டிட்டு போறன்.. உன்ரை சீவன் இருக்கிறது வரையிலை அதைக் கைவிட்டிடாதை…” எனது மனைவி இறக்கின்ற நேரத்தில் இப்படித்தான் கூறினாள்.
வாழ்க்கைத் தளத்தில் வெறும் சகதியில் பிறந்தவன் நான். அவளும் அப்படித்தான். வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதில் எனக்குப் பக்கதுணையாக இருந்து வந்தவள். நான்கு குழந்தைகளை எனக்குக் கொடுத்து விட்டுப் போய்விட்டாள். “குஞ்சும் குறுமனுமான” குழந்தைகளுடன் தனியே நான் படும் அவலம்! தகப்பனாகவும் தகப்பனுக்குள் தயாகவும்…
எந்த நோய்க்கும் நான் அரசாங்க ஆஸ்பத்திரிக்குத் தான் செல்வேன். நம்பிக்கைதான் காரணமென்று ஒரு பொய்யைக் கூறுவ தால் எனக்கென்ன பெரிய கௌரவம் வந்து விடப் போகின்றது… ‘வசதியின்மைதான் காரணம்…!
இங்கிருந்து ஐந்து மைல்களுக்கப்பால்த்தான் ஆஸ்பத்திரி. கார் பிடித்துப் போக வசதியில்லை இரவு நேரம்… சைக்கிள்…., அது கூட இல்லை… கையில் காசும் இல்லை….
‘தெரிந்த டாக்டர் தானே’… என்ற நம்பிக்கையில் இங்கு வந்து விட்டேன்.
இரண்டு மணித்தியாலயங்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று கண்ணைச் சொருகி, வெண ‘ணுரை கக்கி, கைகால்களைக் குறட்டி… மயக்கமாகி விட்டது!.
வலிப்பு.
இப்போது விக்கல்!.
குழந்தையை இறுக அணைத்துக் கொள்கிறேன்.
…..அதோ… அந்தப் பாவைப் புள்ளை… பவுண் சங்கிலி, காப்பு, மோதிரம், சட்டை… வெறும் பொம்மைக்கு…?
உயிரோடு போராடும் என் குழந்தையின் விக்கல் ஒலி அதிகரிக்கின்றது.
“….காரிலை வந்திறங்கினால் தான் நல்ல மருந்து.
…செருப்புப் போட்ட கால்சட்டைக்காரருக்குத் தான் நல்ல மருந்து.
…காப்புப் போட்ட கைகாரருக்குத் தான் நல்ல மருந்து. …
…மற்றவை எல்லாம் ஓடும் புளியம்பழமுந்தான்…”
இப்படி இந்த டாக்டரைப் பற்றி ஊருக்குள் மௌன மொழியில் பேசிக் கொள்ளப்படுவதும் எனக்குத் தெரியும். பெரிய இடத்து விஷயம் என்ற நிலையில் நான் இதை இதுவரை ஆராய்ந்ததில்லை!. இப்போது அதே டாக்டரோடு தொடர்புகொள்ள வேண்டி தொரு சூழ்நிலை ஏற்பட்டதால் அதைப்பற்றிச் சிந்திக்கிறேன்.
‘வாசல்லை யேசுவின்ரை சிலை… அந்தக் கருணையிலை… ஒரு சொட்டுக் கருணையாவது இருக்காதே… ஊர் உப்பிடி எத்தினை யைக் கதைக்கும்…” எனது மனச் சாந்திக்காவோ, என்னவோ…. எனது மனம் கூறிக்கொள்கிறது.
‘பாவைப்புள்ளைக்கு பவுண் போட்ட மனிசன்… காசில்லை எண்டதுக்காக, இந்தப் புள்ளையை விட்டிடுவரே அவருக்கென்ன இரும்பு இதயமே…” மனக்கொதிப்பு, இப்படி எனக்குச் சாதமாகவே எண்ணிக் கொள்கிறது.
டாக்டரின் அறையிலுள்ள லைற் எரிகிறது. கதவு திறக்கப்பட, டாக்டர் வருகின்றார்.
“ஆரது…”
‘அது நான்…. ஜயா…’
“என்ன செய்யிது…” “வலிக்கிது…”
“மத்தியானம் என்ன திண்டது…”
“நான் வேலைக்குப் போகேக்கை.. இடியப்பம் குடுத்தனான்… அதுக்குப் பிறகு என்னத்தைத் திண்டுதுகளோ… சின்னஞ் சிறுசு கள்… கண்டபடி எதையும் திண்டிருக்குங்கள்…” டாக்டர் கையைப் புடிச்சுப் பார்க்கின்றார். கண் இமைகளை மேலு யர்த்திப் பார்க்கின் றார்.. இதய வடிப்பைப் பார்க்கின்றார்….
“ஐயா ….”
“குழந்தையள் எண்டால் கவனமாக இருக்க வேணும்…
கவனம் இல்லாட்டி இப்படித்தான்…..” நான் டாக்டரின் வாயையே பார்த்தபடி இருக்கிறேன். ஏதாவது ‘நல்ல வார்த்தையைக் கூற மாட்டாரா… என்றெண்ணம்.
“ஐயா…. என்ன வருத்தம்…”
“குளிர் சுரம்….”
“ஏதாவது செய்யுமே…’
“எந்தச் சின்ன வருத்தத்தையும்…. நல்ல முறையிலை பரிகரிக்காட்டி ஏதாலும் செய்யும் தானே…”
“இந்தப் புள்ளை….”
“இதுவும் அப்பிடித்தான்…..
டாக்டர் உள்ளே போகிறார்.
‘ஆண்டவரே… என்ரை புள்ளையைக் காப்பாத்தும்… ஆண்ட வரே… என்ரை புள்ளை இதிலையிருந்து மீண்டிட்டால் இந்தப் புள்ளையளவு மெழுகுதிரி வாங்கிக் கொழுத்திறன்… காப்பாத்தும் ஆண்டவரே…
அறையை விட்டு வெளியே வந்த டாக்டர், ஒரு துண்டைக் கொடுக்கின்றார்.
“இந்த மருந்தை வாங்கிக் கொடு..’ கூறி விட்டு அவர் உள்ளே செல்கிறார். கதவு பூட்டப்பட, உள் லைற் அணைக்கப்படுகிறது. பாவைப் பிள்ளைக்குப் போடப்பட்டிருக்கும் அந்தச் சிறிய வெளிச்சத் தில் நான் நிற்கிறேன்… பவுண் சங்கிலி, காப்பு, மோதிரம்… தெளிவாகத் தெரிகின்றது…
குழந்தையின் விக்கல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது…!. அந்த விக்கல்… இந்த உலக வாழ்வை முடித்துக் கொள்ளும். ஒரு உயிர் பூச்சியின் இறுதிக் குரலொலி சேடமா?..
சேடமா?.. இருக்கோ இல்லையோ… என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
“ராசா… ராசா…’
பழைய நிலைதான்.
மருந்தின் பெயர் எழுதிய துண்டு கையில் குழந்தையின் உயிர் எப்படி வாங்குவது… பணம்..? வெளிவந்த நான் அந்தச் சுருக்குக் கேற் வாசலில் நிற்கிறேன்.
‘உன்னைப் போல் பிறனையும் நேசி…’ அந்த வாக்கியம், யேசுவின் சிலை… முன்பு போல தெளிவாகத் தெரிகின்றது… அச்சிறு ஒளிக்கீற்றில் எனது பிள்ளையின் முகத்தைப் பார்க்கின் றேன்.. முகமெல்லாம் வியர்ந்து மினுங்குகிறது.
விக்கல் ஓயவில்லை!.
ஏதோவொரு துணிவு வாசலில் பொருத்தப்பட்டிருந்த பெல்லை அமர்ந்துகிறேன். வேலைக்காரன் வருகிறான்.
“எண்ணண்னை…”
“ஐயா… எங்கை”
“உள்ளை இருக்கிறார்…”
“மருந்து எழுதிக் குடுத்திருக்கிறார்.. இப்ப எப்படி நான் வாங்கிறது… அது தான் ஐயா விட்டை…”
“நீ என்னண்ணை உலகம் புரியாத ஆளாக இருக்கிறாய்… உன்னைப் போலை, எங்களைப் போலை ஆக்களுக்கெண்டுதான் அரசாங்க ஆஸ்பத்திரி கட்டப்பட்டிருக்கு… எறும்பு கடிச் சாலென்ன.. சன்னி வந்தாலென்ன அங்கைதான்… இஞ்சை வாறதுக்கு ஒரு தரம் வேணுமண்ணை… நான் அப்பவே சொல்லியிருப்பன்.. நீ உணர்ந்து கொள்ள வேணுமெண்டதுக்காகத் தான் விட்டன்…”
“ஆஸ்பத்திரிக்கு போக முடியாமல் தானே இஞ்சை வந்தனான்..”
“உது எனக்குப் புரியிதண்ணை ஒருக்கா ஐயாவை வரச் சொல்லுறியா…” வேலைக்காறன் உள்ளே போய் சில நிமிடங் களில் டாக்டர் வெளியே வருகிறார்.
“ஐயா.. என்னைத் தெரியாதா உங்களுக்கு… இது தாயில் லாத புள்ளையையா… இந்த மருந்துத் துண்டைக் குடுத்திருக் கிறியள்… இந்த நேரத்திலை நான் என்னையா செய்யிறது… ஏதா வது வழி செய்யுங்கோ நான் எப்படியும் திருப்பிக் குடுத்திடுவன்..”
சிலுவைக்காகப் போடப்பட்டிருக்கும் அந்தச் சிறு வெளிச் சத்தில் நாங்கள் நிற்கின்றோம்.
இஞ்சை மருந்து… இல்லாட்டி மருந்துக்குரிய துண்டு தான் குடுட்பம்…. காசு குடுக்கிறதில்லை. டாக்டர் உள்ளே போகிறார்…
‘உன்னைப் போல் பிறனை அந்த எழுத்துக்கள், அதைப் பிரசவித்த யேசுவின் சிலை… இப்போதும் தெரிகிறது.
நான் அங்கிருந்து புறப்படுகின்றேன்.
அந்த மருந்தின் பெயர் எழுதிய துண்டு அந்த வாசலில் கிடக்கின்றது.
– வானொலி மஞ்சரி 1974
– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026
