இனிப்பு – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,553
சுந்தர் தனது நண்பன் சரவணனின் திருமணத்திற்கு வந்திருந்தான். அங்கு சுந்தரின் அப்பாவும் வந்திருந்தார்.
சுந்தர் காதலித்து கல்பு மணம் புரிந்து தனிக்குடித்தனம் சென்றதால் சுந்தருக்கும் அவன் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
சுந்தர் மதிய உணவு பரிமாறிக்கொண்டிருந்தான். அங்கு வந்த சரவணன் உனக்கும் உன் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கலாம். அதுக்காக இப்படியா நடந்துக்குறது? என்று கேட்டான்.
என்னடா சொல்றே? சுந்தர் புரியாமல் கேட்டான்.
எல்லா இலைக்கும் ஒழுங்கா உணவு பரிமாறின நீ. உன் அப்பா இலையில மட்டும் ஜாங்கிரி, ஐஸ்கிரீம், பழம் வைக்கலையே? என்று கேட்டான் சரவணன்.
என் அப்பா சுகர் பேஷண்ட். அதனால இனிப்பு ஐட்டங்களை தவிர்த்தேன். என் அப்பா நல்லா இருந்தால் தானே நாங்க சந்தோஷமா இருக்க முடியும். அதான் வைக்கல என்றான்.
சுந்தரின் பேச்சை கேட்ட அப்பா நெகிழ்ந்து போனார்.
– எஸ்.முகம்மது யூசுப் (ஜூலை 2012)
தொடர்புள்ள சிறுகதைகள்
உறுதி
மா.வீ.தியாகராசன்
September 18, 2026
விரல்கள்
செம்பியன் செல்வன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026