ஆயிரம் முட்டாள்கள்
கதையாசிரியர்: பீர்பால்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,114
பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான் உடல் வலிமையுள்ள ஆயிரம் ஆட்களை அழைத்து வந்தார்.
வரும்போது, அரசர் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வது? உணவு, உடை, சம்பளம் இவற்றை எல்லாம் எவ்வாறு கொடுப்பது? என்ற கவலை சூழ்ந்தது பீர்பாலுக்கு.
அரண்மனைக்கு வந்த பீர்பாலை அக்பர் வரவேற்று உபசரித்து, ”நமக்காக என்ன கொண்டு வந்தீர்?” என்று கேட்டார்.
”ஆயிரம் முட்டாள்கள்” என்றார் பீர்பால்
”ஆயிரம் முட்டாள்கள் என்று எப்படிக் கூறுகிறீர்?” என்று கேட்டார் அக்பர்.
”நான் கூப்பிட்டவுடன் என் பின்னே ஓடி வந்து விட்டார்களே, இந்த பீர்பால், நமக்கெல்லாம் உடை, உணவு, சம்பளம் எவ்வாறு கொடுப்பார் என்று யோசிக்க வேண்டாமா? நானோ அரசரின் ஊழியன்; நான் எப்படி இவர்களைப் பராமரிப்பேன்? அதனால்தான் அவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறேன்.
”நீர் கவலைப்படவேண்டாம். நாட்டின் பாதுகாப்புக்குப் பட்டாளம் அவசியமான தேவை அல்லவா? நீர் கூட்டி வந்திருப்பவர்கள் எல்லோரையும் நமது ராணுவத்தில் சேர்த்துக் கொள்வோம்” என்று கூறி, அதற்கான உத்தரவு போட்டார் அக்பர்.