ஆண்மை





புஷ்பராஜ் அலுவலக வேலையாய் மதுரையிலிருந்து சென்னை வந்தவன், சிற்றப்பா வீட்டில் பத்திரிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தான். சட்டென்று கண்ணில்பட்டது, கவிதா தோன்றிய விளம்பரம் ஒன்று.

கவிதா அவனது ப்ளஸ் டூ நாட்களை சுகந்தப்படுத்திய அடுத்த வீட்டு இளம் பெண். திடீரென்று அவளது தந்தை இறந்துவிட, அவர்கள் குடும்பம் இடம் பெயர்ந்தது.
அதன் பின், புஷ்பராஜ் வாழ்விலும் வயதிலும் வளர்ந்து கொண்டிருந்த அவளை மறந்து போனான்.
சில ஆண்டுகளுக்குப் பின், இப்போது பத்திரிகையின் வண்ண விளம்பரத்தில்…
கவிதா, புஷ்பராஜைக் கண்டதும். அடையாளம் புரிந்து பரவசமானாள்.
முகவரி எப்படி கிடைத்தது என்று வியந்தாள். வாழ்வில் அவள் கடந்து வந்த சூறாவளியைச் சொன்னாள். எந்த விதத்திலும் போஸ் கொடுக்கும் மாடலாகி ஜீவிதம் நடத்தும் சோகத்தைச் சொன்னாள்.
கேட்கக் கேட்க புஷ்பராஜ் இடிந்து போனான்; இரக்கப்பட்டான்.
கவிதாவின் அண்மையில் வந்தான்.
அப்போது தொலைபேசி ஒலித்தது. கவிதாவை ஆங்கிலத்தில் அழைத்தார்கள்.
இவன், அவள் மாடலிங் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக ஆங்கிலத்தில் அறிவித்து தொலைபேசியை வைத்தான்.
காதலுடன் அவள் கவிதா கரம் பிடித்தான்.
கவிதா கண்ணீர் பயமானாள்.
– நவம்பர் 1995, குடும்ப நாவல்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |