ஆசிரிய ஹிருதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 81 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“முத்து, அழாதேடா! பள்ளிக்கூடம் போ. நாளைக்குக் கட்டாயம் காசு தருகிறேன். இன்று ஒரு நாளைக்கு மட்டும் வாத்தியாரிடம் சொல் லிக்கொள்” என்றாள் தாயம்மாள். 

முத்து ஒரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொண்டு புஸ்தகங்களைக் கையில் தூக்கினான். 

“அம்மா! போய் வருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பினான். 

பத்திரமாய் போய்விட்டு வா, கண்ணே!” என்று தாயம்மாள் படுக்கையிலிருந்தபடியே ஈனக் குரலில் சொன்னாள். 

முத்துவின் தந்தை இறந்து மூன்று வருஷம் ஆயிற்று. தாயம்மாள் பிரியமாக வளர்த்து வரும் எருமை ஒன்றுதான் அவர்களுடைய குடும்பச் சொதது தன் மகனை நன்றாகப் படிக்க. வைத்துவிட வேண்டுமென்பது தாயம்மாளின் விருப்பம். அதற்காக அவள் எவ்வளவோ கஷ்டப்பட்டாள். பால் விற்கும் பணத்திலிருந்து தான் அவர்கள் குடும்பச் செலவும் பையனின் படிப்புச் செலவும் நடக்கவேண்டும். 

தன் குடும்பக் கஷ்டங்களை முத்து நன்றாக உணர்ந்திருந்தான். படிப்பிலும் கெட்டிக்காரன். அவன் மற்றப் பையன்களைப் போலல்லாமல் தாய்க்கு உதவியாக இருந்ததால் தாயம்மா ளுக்குத் தன் மகன் மேல் அளவில்லாத பிரியம். 

முத்து ஆறாவது வகுப்பிலிருந்து ஏழாவது வகுப்புக்கு மாற்றப்பட்டான். புதுப் புத்தகங்கள் வாங்குவதற்குக் குறைந்தது பதினைந்து ரூபாயா வது ஆகும். பள்ளிக்கூடச் சம்பளம் வேறு. பலரிடம் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி யில்லை. இன்னும் இரண்டொரு புத்தகங்கள் தான் பாக்கி. 

இந்தச் சமயத்தில் திடீரென்று மாடு கறவை நின்று விட்டது. தாயம்மாளும் நோய்ப்பட்டாள். கையிலும் தம்பிடி கிடையாது. கடன் கேட்காத இடம் இல்லை. கேட்டபொழுதெல்லாம் கடன் கிடைக்குமா? முத்து என்ன செய்வான்? பள்ளிக்கூடப் பாடங்கள்; தாயின் நிலைமை; வரட்டெருமையைப் பாதுகாக்க வேண்டிய தொந்தரவு; இவற்றிற் கிடையே கடன்காரர்களின் தொல்லை! ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே முத்து பள்ளிக்கூடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். 

டிராயிங் நோட்டுக் கொண்டு வராததற்காக முதல் நாள் உபாத்தியாயர் அவனைத் தண்டித் தார். அன்றும் டிராயிங் பாடம் உண்டு. நோட்டுக் கொண்டு போகாவிட்டால் உபாத்தியாயர் என்ன சொல்வாரோ என்று கவலைப்பட்டான். டிராயிங் நோட்டு வாங்குவதற்காகத்தான் அவன் தன் தாயிடம் காசு கேட்டான். கையில் இருந்தால் அவள் கொடுக்காமலிருப்பாளா? 

முத்துவின் நிலைமை உபாத்தியாயருக்கு எப்படித் தெரியும்? அவருக்கு முத்துவின் மேலேயே வெறுப்பு. அதற்குக் காரணம் அவன் ஏழைப் பையனாக இருந்ததுதான்! 

வகுப்பிற்குப் போவதா வேண்டாமா என்று பல தடவை யோசித்தபின் முத்து தன் இடத் தில் போய் உட்கார்ந்தான். உபாத்தியாயர் வழக் கம் போல் “நோட்டுக் கொண்டு வராதவன் எழுந்து நில்” என்று கர்ஜித்தார். ஒருவரும் எழுந்திருக்க வில்லை. முத்துவின் கையிலும் நோட்டு இருந்தது. அதே சமயத்தில் சீனிவாசன் என்னும் பையன் “ஸார், என் நோட்டைக் காணவில்லை” என்றான். பின்பு அவன் ஒவ் வொருவர் நோட்டாக வாங்கி அடையாளம் பார்த்துக் கொண்டு வந்தான்.முத்துவின் நோட் டைக் கையில் வாங்கினது ஸார், இதோ இருக்கிறது என் நோட்டு! முத்து திருடி வைத் திருக்கிறான்” என்று சத்தமிட்டான். 

முத்து திகைத்து நின்றான். அவன் உடம்பெல்லாம் வியர்த்தது. என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் டிராயிங் உபாத்தியாயர் அவன் காதைப் பிடித்துத் திருகி னார். கன்னத்திலும் நாலைந்து அடிகள் விழுந்தன. “திருட்டு நாயே! ஏண்டா நோட்டைத் திருடி னாய்? சொல்” என்று அதட்டினார். 

தன்னைத் ‘திருட்டு நாய்’ என்று சொன்னது முத்துவுக்குப் பொறுக்க முடியவில்லை. அவன் தேம்பித் தேம்பி அழுது கொண்டே, “சார், நோட்டு வாங்கப் பணமில்லை. நோட்டுக்கொண்டு வராவிட்டால் நீங்கள் அடிக்கிறீர்கள். நான் என்ன செய்வது?” என்று கெஞ்சினான். 

“கையிலே காசில்லாத போனால் ஏண்டா படிக்க வருகிறாய்? பேசாமல் மாடு மேய்க்கப் போகிறதுதானே! திருடியும் விட்டுச் சமாதான முமா சொல்கிறாய்?” என்று இன்னும் நாலைந்து அடிகள் கொடுத்தார். 

முத்து தன் தரித்திரத்தைப் பற்றிச் சொன் னதைக் கேட்டதும் சீனிவாசன் கண்களில் கண் ணீர் ததும்பிற்று. அவன் உபாத்தியாயருக்குத் தெரியாமல் வகுப்பை விட்டு வெளியே போய் விட்டான். 

உபாத்தியாயர் ஒரு கடிதத்தை எடுத்து ஹெட்மாஸ்டருக்கு முத்துவைப் பற்றி ரிப்போர்ட் எழுதினார். ஒரு சேவகனைக் கூப்பிட்டு அவனிடம் அதைக் கொடுத்து இவனைக் கொண்டு போய் ஹெட்மாஸ்டரிடம் விட்டு இந்தக் கடிதத்தையும் கொடு” என்று சொல் லிக் கொண்டிருந்தார். அப்பொழுது வெளியே சென்றிருந்த சீனிவாசன் வந்து விட்டான். அவன் கையில் ஒரு புது நோட்டு இருந்தது. 

அவன் சேவகனை நிறுத்திவிட்டு உபாத்தியா யரிடம் போய், ‘சார், நான்தான் என் நோட்டை அவனிடம் கொடுத்து வைத்திருந்தேன். ஞாபக மறதியினால் அவன் எடுத்ததாக உளறி விட் டேன். அவனை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். பின்பு அவன் முத்துவி னிடம் போய், “கோபித்துக் கொள்ளாதே முத்து. அப்போதே இப்படித் தெரிந்திருந்தால் நான் வாத்தியாரிடம் சொல்லியிருக்க மாட் டேனே! இந்த நோட்டை எடுத்துக் கொள்” என்று ரகசியமாய்ச் சொல்லி நோட்டையும் அவன் கையில் கொடுத்தான். 

மேலே சொன்ன சம்பவங்கள் நடந்து இருபது வருஷங்களாயின. முத்து உள்ளூரில் ஒரு சின்னக் கடை வைத்திருந்தான். சீனிவாசன் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் நாலாவது வகுப்பு உபாத்தியாயராக வேலை பார்த்து வந்தான். முத்துவின் மகன் சோமுவுக்கு சீனிவாசன் தான் உபாத்தியாயர். 

சரஸ்வதி பூஜைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. ஒவ்வொரு பையனும் இரண்டணா. காண்டுவர வேண்டுமென்பது தலைமை உபாத் தியாயர் சீனிவாசனின் கட்டளை. அநேகமாக எல்லாப் பையன்களும் இரண்டு நாளில் கொடுத்து விட்டார்கள். சோமு மட்டும் “நாளை நாளை ” என்று காலம் கடத்தி வந்தான். “நாளைக்குக் கொண்டு வராவிட்டால் உதை”என்று சீனிவாசன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தான். 

முத்துவின் கடையில் தினம் இரண்டணா விற்கு விற்பதே கஷ்டம். அவன் எப்படி ஒரு காளைய விற்ற முதலை சரஸ்வதி பூஜைக்காகக் கொடுக்க முடியும்? ஆகவே சோமு மறு நாளும் வெறும் கையோடு பள்ளிக்கூடம் போனான்.  “காசு எங்கே?” என்றான் சீனிவாசன். “எங்க. அப்பா, ‘துட்டுக்கு வழியில்லை, போ’ என்று துரத்தி விட்டார்” என்றான் சோமு. 

சீனிவாசனுக்குக் கோபம் வந்து விட்டது. “போடா பள்ளிக்கூடத்தை விட்டு! தரித்திரம்! இரண்டணாவுக்கு வழி யில்லையாம். பின்னே ஏண்டா படிக்க வருகிறாய்?” என்று சோமு. வைக் கோபித்து வீட்டுக்குப் போகச் சொன்னான்!

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *