ரா.நீலமேகம்
சுயமாக ஏற்படும் எண்ணங்கள் தவிர மனிதர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நிறைய எண்ணங்களையும், மனதில் பதியும் அளவுக்கு சில நினைவுகளையும் உண்டாக்குகிறது. இவைகளை எழுத்து வடிவில் கொண்டு வர என் போன்ற சிலர் ஆசைப்படுவார்கள்.ஆனால் தனியே நாட்குறிப்பு போல் எழுதுவதை விட சில கற்பனைகள் சேர்ந்த கதை வடிவில் எழுத விழையும் எனைப் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து ஒரு இணையதள மேடை அமைத்து தந்திருக்கும் ‘சிறுகதை.காம்’ நிறுவனர், அதற்கு துணை இருப்போர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. அவர்கள் இப்பணியில் மேலும் பல உயர்வுகளையும், வெற்றிகளையும் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். எனது வாழ்த்துகள்.