அன்பழகன்ஜி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 32 
 

இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கள் புத்தத்தை தாங்களே அச்சிட்டு இலவசமாக நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு கொடுத்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுகதைகள் (sirukathaigal.com) என்ற இணைய தளம் மூலம் படைப்பாளிகள் தங்களது சிறுகதைகளை வெளியிட்டு அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எளிதில் நிறைய வாசகர்களை சென்றடைவதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை என்னிடம் இல்லாத எனது அபிமான முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது.

Print Friendly, PDF & Email
அன்பழகன்ஜி