கதையாசிரியர் தொகுப்பு: வ.சா.நாகராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

உயிர் மேல் ஆசை

 

 வைகறை ஞாயிற்றின் முதல் கீற்று அந்த ஊரில் பாட்டிமீது தான் முதலில் விழும். வெண்ணாற்றில் குளித்து முடித்து ஈரப்புடவை சொட்டச்சொட்ட நின்றபடியே அந்த முதல் ஒளியை எதிர்நோக்கி ஜபத்தையும் அங்கேயே முடித்துக்கொண்டபின் குடத்தை எடுத்துக்கொண்டு ஆள் உயரம் உள்ள படுக்கைக் கரையில் ஏறி இறங்கி, படு வேகமாகக் கண் மண் தெரியாமல் லாரிகள் பறக்கும் மெயின் ரோடைத் தாண்டித் தெருவுக்குள் அந்த இறக்கத்தில் பாட்டி இறங்கும் போதுதான் பல் துலக்கவே ஆற்றுப் பக்கம் போகும் பலர் எதிரில்