கதையாசிரியர் தொகுப்பு: வீயெஸ்வி

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்திகை

 

 வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லாத தருணங்களில், வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மோட்டு வளையத்தை உற்றுப்பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். அந்த நேரங்களில், ஏதேதோ சிந்தனைகள் எனக்குள் வட்டமடிக்கும்; கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும். அப்படி ஒருநாள், மோட்டு வளையத்தை அதன் மீது படிந்திருந்த ஒட்டடையின் ஊடே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பகல் வேளையில் தோன்றிய கற்பனையில் நான் மரணித்தேன். அது அநாயாச மரணம். காபி குடித்துக் கொண்டிருந்தேன். அப்படியே நாற்காலியில் சரிந்தேன். தலை தொங்கிப்போயிற்று. சுவாசம்


பாஸ்போர்ட் வாங்கலியோ

 

 எண்பதை எட்டிவிட்ட என் அம்மா, வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினாள். அமெரிக்காவில் சாண்டியாகோவில் இருந்து மகன் மெயில் அனுப்பி இருந்தான் – ‘ஆல் த பெஸ்ட் டாடி!’ லண்டனில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். என் ஒரே மகளிடம் இருந்து. ‘kavalai vaendam. vettri ungalukkae’ அப்ளிகேஷன் கொடுக்க நானும் என் மனைவியும் பாஸ்போர்ட் ஆபீஸ் போகும் செய்தி உலகம் முழுவதும் பரவியிருந்தது. 10 நாட்களாகத் தூக்கத்தையும் தியாகம் செய்து பாரத்தைப் பூர்த்தி செய்தாகிவிட்டது. ஒன்றுக்கு இரண்டாக போட்டோ ஒட்டி,