கதையாசிரியர் தொகுப்பு: வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

உடம்பெல்லாம் உப்புச்சீடை

 

 மாலை மணி 5.25. கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தேடி ஓடி, முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகளைக் கண்டுபிடிக்கவும், ரயில் வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது. தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒருமுறை எண்ணிப்