கதையாசிரியர் தொகுப்பு: வானம்பாடிகள் பாலா

3 கதைகள் கிடைத்துள்ளன.

கேரக்டர்: வைத்தி மாமா

 

 வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட்


கேரக்டர் – அப்துல்லா குட்டி

 

 அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று கூடத் தோணலாம். எனக்குமே கூட அந்த வயதில் அவரின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததாக உணர்வில்லை. ஆனாலும் அவரில் ஏதோ ஒன்று இருந்தது. இல்லையெனில் பதவிக்காகவேயன்றி ஒரு மனிதனாக அத்தனை பேரின் நேசிப்புக்கும் ஆளாயிருக்க முடியாது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு குட்டியை நான் வேறு விதமாக புரிந்துக் கொள்ள முடிகிறது. குட்டி அப்படி ஒன்றும் கவர்ச்சியான


கேரக்டர் – சித்ராங்கி

 

 அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை பெய்து கொண்டேயிருக்கும். எப்போதாவது ஒரு நாள் விட்டு சில மணி நேரம் சூரியன் தலைகாட்டும். அப்படி ஒரு நாளில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு அபூர்வமான குடியமைப்பு அந்தப் பகுதி. காஃபி, ஏலக்காய் தோட்ட அதிபர்கள், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்யும் கூலிக்காரர்கள் என்று மலையும் மடுவுமான குடிகள். தோட்ட அதிபர்களின் வீட்டுப் பெண்களை வெளியில் காண்பதே