கதையாசிரியர் தொகுப்பு: ராஜவேல்

1 கதை கிடைத்துள்ளன.

அழிக்கமுடியாதவன்

 

 இரவு எட்டு மணி, கூட்ட நெரிசல்மிக்க மதுரை போத்திஸ் கடையில் இருந்து வெளியே வருகிறான் கார்த்திக்(இவன் ஹீரோ இல்லீங்க). மூத்த மகள் ரம்யாவுக்கு கார் வடிவில் ஆன உண்டியலை இலவசமாக வாங்குவதற்காகவே ரெண்டாயிரம் ரூபாய்க்கு சுடிதார் எடுத்திருந்தான். அந்த உண்டியலை வெளியே தனியாக வாங்கிருந்தால் கூட ஐம்பது ரூபாயில் முடிந்திருக்கும். இலவசம் என்ற சொல்லை கேட்டாலே இங்கு சிலர் மனதில் சந்தோஷம் வந்துவிடும். இளைய மகள் நித்யாவுக்கு தனக்கு உண்டியல் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், புது சுடிதார்