கதையாசிரியர் தொகுப்பு: யுவராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

துளிர்

 

 சங்கத்து ரூமிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுக்கும்போது, கொடியில் காயப்போட்டிருந்த முனியம்மாளின் கைலியில் முகம் மோதியது. பழைய சாமான் வாசனை நாசியைத் தாக்கியது. கூரையை ஊடுருவிய வெயிலின் வெப்பத்தை நெற்றியில் உணர முடிந்தது. மணி மூன்று இருக்கும். நாளைக்குப் போகலாமே என்று மனம் சோர்ந்தது. ஏற்கனவே சமையல் சாமான்களெல்லாம் தீர்ந்து விட்டதாக முனியம்மா நேற்றே சொன்னாள். `பெலாஞ்சா’ அதற்கு முன் தினமே வாங்கியாகிவிட்டது. தோட்டத்து சீனக்கடையில் சாமான்கள் வாங்கினால் மீத பத்து நாட்களை சமாளிக்க முடியாது. கோலகெட்டில் `தை