கதையாசிரியர் தொகுப்பு: மு.மேத்தா

2 கதைகள் கிடைத்துள்ளன.

விடுகதை கவிதையாகிறது

 

 குழந்தைகளின் தேவசபை கூடியிருக் கிறது. விடுகதைகளைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். அவர்க ஞடைய உலகத்திற்கு என்னையும் அழைக்கிறார்கள். ‘முள்ளு முள்ளு முள்ளு எல்லா இடத்திலும் இருக்குதென்று சொல்லு! கால்களிலே தைக்காது-ஆனால் கண்கண விட்டு வைக்காது’ என்றேன். குழந்தைகள் குழம்பிப் போனார்கள், “நீ விடுகதை போடவில்லை. ஏதோ பாட்டுச் சொல்லுகிறாய்”- என்று குற்றம் சாட்டினார்கள். “இல்லை விடுகதைதான்” என்று விவாதித்தேன், அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அதை இப்படி மாற்றிச் சொன்னேன்: ‘காணும் இடமெல்லாம் முள்ளாக


கிழித்த கோடு

 

 வீட்டின் வெளிப்புறத்துத் திண்ணை. நாற்காலி ஒன்றில் சாய்ந்துகொண்டு ஆறுமுகத் தேவர் அமர்ந்திருக்கிறார். கண்கள் தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்காகக் கொண்டு வந்த காபியை ஸ்டூலின் மேல் வைத்து விட்டு, அவருடைய மகள் மீனாட்சி நிமிர்கிறாள். ”ராவுத்தர் வரட்டும்” – பார்வையை மாற்றா மலேயே ஆறுமுகத் தேவர் கூறுகிறார். அந்த வார்த்தைகளின் அர்த்தம் மீனாட்சிக்கு தெரியும். அவள் கொஞ்சம் படித்தவள்; நாகரிகமும் நாசூக்கும் தெரிந்தவள். அதோடு அவள் ஆண்டிபட்டியில் வாழ்க்கைப்படுவதற்கு முன்பும், வாழ்க்கைப்பட்ட பிறகு – இங்கு வந்து