கதையாசிரியர் தொகுப்பு: மனுபாரதி

4 கதைகள் கிடைத்துள்ளன.

மண் பிள்ளையார்

 

 இன்று விநாயகச் சதுர்த்தி நாள். என் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரும் நேற்றே அவரவர்களின் கூட்டைத் தேடிப் பறந்துவிட்டார்கள். தனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான். எனக்குப் போக இஷ்டமில்லை. ‘பரவாயில்ல, கிளம்பி வாயேன்டா. ‘ – என்று பலமுறை அப்பா கூப்பிட்டார். அவாின் கெஞ்சலுக்கு நான் பதிலாக வெளிப்படுத்திய மெளனத்தின் அர்த்தத்தைப் புாிந்துகொண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அதற்குமேல் அவர் வற்புறுத்தவில்லை. காலையிலிருந்தே ஏதோ ஒரு சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது என் மனம். என்னவென்று ஆய்ந்தறிய எனக்கு விருப்பமில்லை. மனத்தின்


சூரியனைத் தேடும் இலைகள்

 

 வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம். கருப்பு வானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த நட்சத்திரப் பூச்சிகள் திமிறிக்கொண்டிருந்தன. கீழே அந்தக் கட்டடத்திலிருந்து பத்தடி தள்ளி, ‘கோங்கா ‘ (கங்கை) நதியின் ஒரு படித்துறை. அருகே மங்கலாக எரிந்து கொண்டிருந்த ஒரு மின்சார விளக்கொளியில் கோங்கா நீர் மஞ்சளாய்த் தெரிந்தது. அந்தப் படித்துறையில் மோதும் நீரலைகளில் பலவிதமான அசுத்தப் பொருட்கள் மிதந்து கொண்டிருந்தன. சாம்பல் நிற


சிகரத்தை நோக்கி….

 

 அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. இரயில் வந்து சேர இன்னும் நேரமிருந்தது. ஸ்விஸ் இரயில்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வந்துவிடும் என்பது அவளது இரண்டு மாத வாசத்தில் உணர்ந்து ஆச்சர்யப்பட்ட விஷயம். அவளைத் தவிர யாருமே இல்லாமல் அந்தத் தடமே வெறிச்சோடிப் போயி ருந்தது. அவள் உதட்டில் திடீரென ஒரு விரக்திச் சிரிப்பு. அவளுடைய வாழ்க்கையும் வெறிச்சோடிப் போய் விடக்


சிறகுபலம்

 

 “பெரியப்பா எப்பொழுது விழித்துக்கொள்வார்?” இந்தக் கேள்வி எங்கிருந்தோ திடீரென்று முளைத்தது. எட்டரை மணி காலை வகுப்பில் நடத்தப் போகும் இன்றைய பாடப்பொருள் மனதில் நடை போட நடக்கையில் பெரியப்பாவின் ஞாபகம். பாவம் பெரியப்பா! இங்குள்ள குளிர் அவரை எட்டு எட்டரை மணி வரை போர்வையின் கதகதப்பிற்குள் முடக்கி வைத்திருக்கிறது. எப்பொழுதிலிருந்தோ அழைத்துக்கொண்டிருந்தும் அவரால் பிப்ரவரி பாதியில் தான் கிளம்பி வர முடிந்தது. அதுவும் தனியாக. இப்பொழுது பழக்கமில்லா பனியிலும், குளிரிலும் அவர். அவரது இளமைப் பருவத்தில் வட