கதையாசிரியர் தொகுப்பு: பு.செல்வராசன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

இறைவனில்லா இடம் எது?

 

 இறைவன் எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் என்றே உலக அறிஞர்கள் எல்லாம் கூறுகின்றனர். அத்தகைய இறைவன், மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைகின்றான் என்பதும், மக்கள் தொண்டு ஆற்றுவதே இறைவன் பணி ஆற்றுவதாகும். என்பதும் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய: தொன்றாகும். இதனை விளக்க உருசியப் பேரறிஞர் தால்ஸ்தாய் கூறியுள்ள கதையொன்றினைத் தழுவிப் பின்வரும் கதை கூறப்படுகிறது: பொன்னூரில் வாழ்ந்த சின்னப்பர் நெசவுத். தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்; “நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை” என்றபடி


ஆறடிக்கு மேல் நிலமேன்?

 

 உலகில் துன்பம் இல்லாமல் வாழவேண்டு மானால் ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசை குறையக் குறையத் துன்பம் குறையும் என்பது அறிஞர்கள் கருத்து. ஆனால் உலகில் மக்களுட் பெரும்பாலோர் ஆசைக்கு அடிமையாவதால், தந்நலக்காரர்களாகவும், பல பாதகச் செயல்களுக். குரியவர்களாகவும் மாறி உலக வாழ்க்கையைக் கெடுப்பதுடன், தாங்களும் கெட்டு ஒழிகின்றார்கள். ஆசையினால் ஏற்படும் அழிவை விளக்கவே உருசிய மூதறிஞர் தால்ஸ்தாய் பின்வரும் சிறு கதையைத் தீட்டியுள்ளார். பாலூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள வளம் நிறைந்த ஒரு சிற்றூர். அதில்


நீயே உன்னை எண்ணிப்பார்!

 

 மணிமங்கலம் என்னும் சிற்றூரில் மணி வண்ணன் எனும் பெயருடைய குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் உழைப்பைப் பெரிதென மதிப்பவன்; வீணிற் பொழுது போக்கு வதை விரும்பாதவன். அவனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். மூத்த புதல்வனுக்கு மணமாகியிருந்தது. இரண்டாம் மகன் மணப்பருவத்தை அடைந்திருந் தான். மூன்றாம் மகன் படித்துக் கொண்டிருந்தான். மணிவண்ணன் வீட்டில், உழைக்காமல் உண் பவர் அவன் தந்தை ஒருவரே. அவருக்கு வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. காசநோய் அவரைப் பீடித்திருந்தது. வேளாவேளைக்கு உண்பதும் உறங்குவதுமாக அவர்


அறிவின் பெருமை

 

 விசய நகரப் பேரரசு தென்னாடு முழுவதும் பரவி இருந்தது. விசய நகர அரசர்களுள் புகழ் பெற்ற வர் கிருஷ்ண தேவராயர். இவர் நீதி தவறாமல் நல் லாட்சி செய்தார். இவர் ஆட்சியில் மக்கள் குறைகள் இல்லாமல் இன்பமாக வாழ்ந்தார்கள். கிருஷ்ண தேவராயருடைய முதல் அமைச்சர் பெயர் அப்பாஜி. அப்பாஜி கூர்மையான நுண் ணறிவு மிகுந்தவர். ஒரு நாள் அரசரும் அமைச்சருமாக மாறு. வேடம் அணிந்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.. அந்தக்