கதையாசிரியர் தொகுப்பு: பிருந்தா சேது

2 கதைகள் கிடைத்துள்ளன.

கோவிந்தசாமி

 

 அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாமியறை. அடுத்து உக்கிராண அறை. பிறகு தட்டு முட்டு சாமான்கள் வைக்கிற அறை. வலப்புறம் படுக்கை அறை. படுக்கையறையை அடுத்து சுவரில்லாமல் மேடை போல் மேலேறிய காற்றும் வெளிச்சமுமாய் இருக்கும் சமையலறை. காற்று விறகடுப்பை அணைத்து விடாதபடி இடுப்புயரம் கட்டப்பட்ட ஒற்றைச் சுவர். கீழே தரையில் அடுப்பு.திண்ணைக்கு கம்பிக் கிராதி போட


ஒரு காதலின் கதை

 

 இந்தக் கதை நடக்கிற காலம் டெலிபோன்கள் மட்டுமே இருந்த காலம். பேஜர் அறிமுகமாயிருந்த காலம். அவளுடைய சில கவிதைகள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. அவளுக்கு நிறைய கடிதங்கள் வரும். பெரும்பாலான கடிதங்கள், ஒரு பெண் பெயரைப் பார்த்தாலே, பெண் பெயருடன் ஒரு முகவரியைப் பார்த்தாலே வருகிறவை. சில, ‘உங்கள் கவிதை இப்படியிருந்தது அப்படியிருந்தது’ ரகம். சில மிரட்டும் ‘நீ என்ன பெரிய இவளா..? ரதியா? நல்லா எழுத மாட்டியாடி நீ…’ இப்படி. இவை எதிலும் சேராமல், எங்கிருந்து