கதையாசிரியர் தொகுப்பு: பாட்டாளி

2 கதைகள் கிடைத்துள்ளன.

காலச் செரிமாணம்

 

 மூலக்குறிப்பேட்டிலிருந்து………. அப்ப காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறின நேரம். மதுரையில எம்.எஸ்.ஓன்னு மாணவர் சங்கம் ஆரம்பித்திருப்பதாகவும், உதவிக்கு தோழர்கள் தேவைப்படுவதாகவும் ஜில்லா கமிட்டித் தோழர் சொல்லியிருந்தாராம். நான் போனால் நல்லது என்று உள்ளுர் கமிட்டித் தோழர் சொன்னார். ‘நானோ நாலாங் கிளாஸ் தாண்டாதவன். படிப்பை ஏறக்கட்டி விட்டு ஏரைப் பிடிச்சவன்.நம்மைப் போய் மாணவர் சங்கத்தில வேலை பார்க்கச் சொல்கிறாரே. என்ன கேணத்தனமான மனுஷன்’ என்று அவர் மேல் கோபம் வந்தது எனக்கு. பின்னாட்களில்தான் தெரிந்தது அந்த வாய்ப்பு


வதம்

 

 மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது. பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த சிஎன்சி மிஷின் லேசான அதிர்வோடு நின்றுவிட, பதற்றத்தோடு ஓடி வந்தான் கல்யாணசுந்தரம். இயந்திரத்தின் மேனி பெரும் கொதிப்பெடுத்துச் சூடாய் இருந்தது. உற்பத்தியாகி வெளித் தள்ளப் பட்டிருந்த குவியலைப் பார்த்தான். பேனல் போர்டுக்கு ஓடினான். ஏகத்துக்கும் சிவப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. “அடடா. என்னமோ ஆயிடுச்சு மிஷினுக்கு. என்னான்னு தெரியலையே” என்று பயத்தோடும், பதற்றத்தோடும் அங்கும் இங்கும்