கதையாசிரியர் தொகுப்பு: தி.செங்கல்வராய முதலியார்

6 கதைகள் கிடைத்துள்ளன.

கிருஷ்ணன்

 

 பெங்களூரில் ராமசாமி முதலியார் என்பவர் ஒருவர் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு மாணிக்கம் மரகதவல்லி என்றிரண்டு பெண்பிள்ளைகளும், கிருஷ்ணன் கோவிந்தன் என்றிரண்டு ஆண்பிள்ளைகளும் உண்டு. மரகதவல்லி நால்வரிலும் இளையவள்; நான்கு வயதானவள். ஆண்பிள்ளைகள் இருவரும், சென்னையில் தங்கள் அத்தையம்மாளுடைய வீட்டில் இருந்துகொண்டு, ஒரு பாடசாலையில் படித்துவந்தார்கள். ஒருமுறை அவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கிடைத்தது. கிடைக்கவே, பெங்களூரில் தங்கள் தாய் தந்தையரைப் பார்க்கும் பொருட்டுப் புகைவண்டியேறிச் சென்றார்கள். அன்னையும் பிதாவும் அவர்களைக் கண்டவளவில், அதிக பரிவுடனே அன்னம் படைத்து, சென்னையில்


ஆஷாடபூதி

 

 I சென்னையில் ஜெனரல் ஹாஸ்பிடலிலிருந்து வண்ணாரப் பேட்டைக்குப் போகும் தங்கசாலை வீதியும் கடற்கரையிலிருந்து ஆனைகெவுனிக்குப் போகும் கொத்தவால்சாவடி வீதியும் கலக்கிற நாற்சந்தியில் உள்ள அடிபட்ட பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்கே கால் பர்லாங்க் தூரத்தில் ஒரு சிறிய சந்து உண்டு. அந்தச் சந்து கோமுட்டி வர்த்தகர்கள் வசிப்பது. சந்தின் கீழண்டை வாடையில் வடகோடி வீடு ஒன்றுண்டு: அது ரங்கையசெட்டியார் என்னும் ஜவளிவர்த்தகருடைய பிதுரார்ஜிதம். வீட்டின் வாயில் வடக்கு நோக்கியது. அந்த மாடிவீட்டின் படிக்கட்டு, தெருநடையை யடுத்த சரக்காரில் தேக்கமரத்தால்


ஸுப்பையர்

 

 I கிழக்கில் பெத்துநாய்க்கன் பேட்டைக்கும், மேற்கில் வேப்பேரிக்கும், வடக்கில் உப்பளத்துக்கும், தெற்கில் பூந்தமல்லி சாலைக்கும் இடையில், சென்னைக்கு நடுநாயகமாய் ஒரு பூங்காவனம் உண்டு. ஸாதாரண ஜனங்கள் அதை ராணி தோட்டம் விக்டோரியா தோட்டம் சிங்காரத் தோட்டம் என்றும், இங்க்லிஷ் படித்தவர்கள் பீபில்ஸ் பார்க் என்றும் வழங்குவர். சில இடங்களில செய்குன்றுகளும் சில இடங்களில் தாமரைத் தடாகங்களும் சில இடங்களில் தீவுகளும் சில இடங்களில் பர்யாயத்தீவுகளும் அமைத்து, இடைவெளிகளில் பலதேசத்திலிருந்து கொண்டுவந்த பலவித மரங்களை வளர்த்து, நகரபரிபாலன ஸபையார்


தனபாலன்

 

 I யூரொப்பிலிருந்து ஆப்ரிகாவைச் சுற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வருவதும் போவதுமான கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்கு முன்னே, இந்தியாவுக்கும் யூரோப்புக்கும் நடந்திருந்த வர்த்தகமெல்லாம் நிலவழியாகவே நடந்துவந்தது. அக்காலத்தில் அவ்வழியில் இடையிடையில் சில உள்நாட்டுப் பட்டணங்களும் சில துறைமுகப் பட்டினங்களும் செல்வம் பெருகிச் செழித்தோங்கியிருந்தன. இடலிதேசத்தில் பாட்யுவா என்கிற பட்டணமும் வெனிஸ் என்கிற பட்டினமும் இப்படிப்பட்டவை. உள்நாட்டுப் பட்டணமான பாட்யுவாவில் காசிப்பட்டும் காஸ்மீர் சால்வையும் ஸரிகை வஸ்திரங்களும் ஸல்லாவகைகளும் அணிவடங்களும் அணிகலங்களும் காடுபடுதிரவியங்களும் மலைபடுதிரவியங்களும் விலை ஸரஸமாக விற்பனைசெய்யும் வ்யாபாரிகள்


கற்பலங்காரம்

 

 1 காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத் தோட்டத்தினின்றும் புஷ்ப வாஸனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக் குட்டிகள் துள்ளியோடின. மான் கூட்டங்கள் மிரண்டு மிரண்டு தாவிப் பாய்ந்து கொண்டிருந்தன. எதிரில் ஏரிகரையில் கொக்குகளும், நாரைகளும் மீன்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. ஏரியின்மீது பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கொக்குகளும் நாரைகளும் தின்ற மிகுதியைக் காகங்கள் கூட்டங்கூடி, உனக்கோ எனக்கோ என ஒன்றோடொன்று சண்டையிட்டு, இங்கும் அங்கும் குதித்துப் பொறுக்கிக் கொண்டிருந்தன. கத்தரி முதலான கீழ்ப்


கோமளம்

 

 தமிழ்நாடு முற்காலத்தில் சேரமண்டிலமென்றும் பாண்டி மண்டிலமென்றும் சோழமண்டிலமென்றும் மூன்று பிரிவினையுடையது. திருவாங்கூர் மலையாளம் கொச்சி குடகு கோயமுத்தூர் முதலியவை சேரமண்டலத்தைச் சேர்ந்தவை. மதுரையும் திருநெல்வேலியும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தவை. திருவேங்கடம் முதல் திரிசிரபுரம் வரையில் சோழமண்டிலம் பரவியிருந்தது. காவிரியாறு கடலொடு கலக்கின்ற சங்கமுகத் துறையில் காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழராஜர்களுக்குத் தலைநகராயிருந்தது. அந்தப் பட்டினம் ஆற்றங்கரையில் கிழக்கு மேற்காய் ஐந்து மைல் தூரமும் தெற்கு வடக்காய் நான்கு மைல் தூரமும் பரவியிருந்தது. அந்தப் பட்டினத்தை இங்கே வர்ணித்துப் பொழுதுபோக்குவதில் பலனில்லை.