கதையாசிரியர் தொகுப்பு: திலீப்குமார்

7 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் எனும் தோணி பற்றி…

 

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் கடற்கரையில் அமர்ந் திருக்கிறான். இன்று அவன் வாழ்க் கையின் கடைசி தினம். இன்று அவன் தற்கொலை செய்துகொள்ள இருக்கிறான். உங்கள் ஊகம் சரிதான். அவன் ஒரு கலைஞன். உங்களுக்கு நிச்சயம் தெரிந் திருக்கும், உன்னதக் கலைஞர்கள் யாரும் நோய்வாய்ப்பட்டு சாவ தில்லை என்று. அவர்கள் தற் கொலைதான் செய்து கொள்வார்கள். அவன் அப்படி ஒன்றும் உன்னதக் கலைஞன் இல்லை. என்றாலும், தற்கொலை


தீர்வு

 

 இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும். வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளி607030110cல்


அக்ரகாரத்தில் பூனை

 

 ”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள். சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” என்று தன் மருமகளைப்


கடிதம்

 

 ‘மதியம் மூன்று மணிக்குச் சரியாக வந்துவிடு” என்று நேற்றே சொல்லியிருந்தார் மிட்டு மாமா. வழக்கம் போல் கண்ஷியாம் மாமாவுக்குப் பணம் கேட்டு உருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். மிட்டு மாமா என் பாட்டியின் சகோதரர், பரம ஏழை. கண்ஷியாம் மாமா மிட்டு மாமாவின் ஷட்டகர், பெரிய பணக்காரர். பொதுவாக மிட்டு மாமா எழுதும் கடிதங் கள் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால், வயது காரணமாக மிட்டு மாமாவின் கைவிரல்கள் நடுக்கம் கண்டுவிட்டதால் அவருக்கு மாதம் ஓரிரு கடிதங்கள் எழுதித்தர


கண்ணாடி

 

 அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது. பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. பழனியம்மாள், அருகிலிருந்த பெட்டியிலிருந்து ஒரு மூட்டையை எடுத்து அதிலிருந்த ஒருகிழிந்த கவுனைக் குழந்தைக்கு மாட்டினாள். காலை நேரத்து இதமான வெயிலில் குழந்தை சுகித்துச் சிரித்தது. மரத்தைச் சுற்றி அரைவட்டமாகப் படுத்திருந்த மாரியப்பனுக்கு அப்போதுதான் விழிப்புத் தட்டியது. மூட்டையை முடிந்து வைத்தபடியே பழனியம்மாள் அவனைப் பார்த்தாள்.


தடம்

 

 கடுமையான தலைவலியுடன் நினைவு திரும்பியது. நினைவு திரும்புவதற்குச் சற்று முன்பிருந்தே வலி துவங்கியிருக்க வேண்டும். இருள் மண்டிய அந்த குறுகலான சிறைக்குள் கிடப்பதை நான் மெல்ல உணர்ந்தேன். கண்களை மெதுவாகத் திறக்க முயன்றேன். இமைகள் அசைய மெதுவாகத் திறக்க முயன்றேன். இமைகள் அசைய மறுத்தன. மீண்டும் முயன்று இமைகளை இறுக்கிக் கண்களைத் திறந்த போது நரம்புகள் இழுபட்டுக் காதோரங்களில் கடுமையான வலி ஏற்பட்டது. கொட்டடியெங்கும் பூண்டும், சிறுநீரும் கலந்தாற் போன்ற குமட்டலெடுக்கும் நெடியடித்தது. தரை முழுதும் ஈரமாகப்


மூங்கில் குருத்து

 

 கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான். வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்dilipkumar5க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம்