கதையாசிரியர் தொகுப்பு: டாக்டர் என்.லட்சுமி அய்யர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

புரட்சி விடியல்

 

 பசுமை நிறைந்த நிலங்களையும் ,கிராமங்களையும் சந்தோஷமாய் பார்த்தபடி அவைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு ,டைரியில் நோட் செய்தபடி டாட்டா சுமோவில் பொள்ளாச்சி அருகில் உள்ள தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாள் மீடியா ஸ்டடீசில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவி சுமன் . கார் வேகமாய் சென்றுக்கொண்டிருந்தது.சாலைக்கு இருபக்கமும் பச்சை பட்டு கம்பளி விரித்து வரவேற்று கொண்டிருந்தாள் இயற்க்கை அன்னை .”’டிரைவர் .!கொஞ்சம் வண்டியை நிறுத்துங்களேன்.”என்றாள்”சுமன் .எதுக்கும்மா..?ஸ்பீடை குறைத்தபடி கேட்டார் வயதான டிரைவர் ரங்கண்ணா.”அங்கே பாருங்க


குடியிருந்த கோவில்

 

 நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. “”யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும் முருகா” கட்டிலில் படுத்திருந்தபடி முருகப்பெருமானின் காலண்டரைப் பார்த்தபடி தன் வேண்டுதலை முணுமுணுத்தாள். கணவன் இருந்தவரை சந்தோஷமாய் வாழ்க்கையைக் கழித்தாள். மூன்று பெண்கள். கணவனுக்கு மத்திய அரசில் நல்ல உயர்பதவி. மூன்று பெண்களையும் கரை சேர்த்து நிம்மதியாய் ஐந்து வருடம் கணவனுடன் இருந்தாள். இறைவனுக்கு அது பொறுக்கவில்லை போலும் கணவனைப் பறித்துவிட்டார். இரண்டாவது மகள் வீட்டில் தான்


மன கண்ணாடி

 

 “என்ன நான் கேட்டது நிஜம்தானா ? …பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி. “என்ன கேட்டீங்களாக்கும் .? எதையும் கண்டுகொள்ளாமல் பாத்திரத்தைப் சிங்கில் துலக்கியபடி கேட்டாள் லட்சுமிபாட்டி.’’ “உங்கள் கணவர் இறந்துவிட்டாராம், நீங்க ஆஸ்பத்திரிக்கு போய் பிணத்தை கூட பார்க்கமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிட்டீங்ளாம்’’!? “ அதுகடக்கு வுடுமா..!இருக்கும் போதே நிறைய அழுதுட்டேன் ,இனி கண்ணீர் இல்லை .. வேற ஏதாவது சொல்லுங்க………என்று ..சொன்னாள் பாட்டி .”… . பெண்ணிய எழுத்தாளர்கள்,….