கதையாசிரியர் தொகுப்பு: ஜி.ஆர்.

1 கதை கிடைத்துள்ளன.

செல்…செல்… செல்லல்லா!

 

 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்திருந்தது. என் மொபைல் கிடைத்துவிட்டதாம். வந்து வாங்கிக்-கொண்டு போகச் சொன்-னார்கள். இந்த மொபைல் தொலைந்து திரும்பக் கிடைப்பது இது ஐந்தாவது முறை. இப்போதெல்லாம் இதற்கு நான் ஆச்சர்யப்படுவதில்லை. முதல் முறை தொலைந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. எங்கள் கம்பெனியிலேயே உரக் கிடங்கு இன்சார்ஜின் ரூமில் சார்ஜ் போட்டுவிட்டு அக்கவுன்ட்ஸ் பார்க்க ஆரம்பித்தேன். சாப்பிட்டு விட்டுப் போய்ப் பார்த்தால், சார்ஜர் மட்டும் தொங்கிக்கொண்டு இருந்தது. பக் என்று இருந்தது. ஐயாயிரத்து ஐந்நூறு ரூபாய்