கதையாசிரியர் தொகுப்பு: சு.மணிவண்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

கானல் நீர்

 

 அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடிந்ததும் நானும் ஸ்ரீதரும் பக்கத்திலிருக்கும் பெட்டி கடைக்குச் செல்வோம். வழக்கம்போல் அவர் வாழைப்பழம் வாங்கிக்கொள்வார், நான் “புகை’ வாங்கிக் கொள்வேன். அன்று கடைக்கு போகின்ற வழியில், “”முத்து, ஒரு குட் நியூஸ்…” என்றார். “”ஆஸ்துமாவுல அவஸ்தைப்படறியே ஒரு வைத்தியம் கேள்விப்பட்டேன். அதை சொல்லலாம்னு நெனைச்சேன்….” என்றார். “”என்ன ஸ்ரீதர்… நெனைச்சேன் காய வைச்சேன்னு… நான் படற அவஸ்தையை நீ தினமும் பார்த்துக்கினுதானே இருக்கிறே? சொல்லு ஸ்ரீதர், என்ன வைத்தியம்? எந்த வைத்தியன்?” நான்