கதையாசிரியர் தொகுப்பு: சுப்பிரமணியன் ரமேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

கண்டடைதல்

 

 இளநீல நிறத்தில் படிகம் போல தெளிந்த நீர், மர்மங்கள் ஏதுமற்று ஆழ்ந்த மோனத்தில் இருப்பதாகத் தான் இருந்தது. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்திருந்தனர். ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவரின் மீது நீரின் விளிம்பு அவ்வப்போது பாம்பு நெளிவதான தோற்றம் கொண்டது. மேலிருந்து கதிர்களாய் கசிந்த சூரியன் அலைகளுடன் விளையாடி, ஒளியும் நிழலும் கலந்த ஜால விநோதங்களாய் பரவசப்படுத்தியது. ஒரு மலாய் குழந்தை தன்னுடைய கோதுமைக் கரங்களால் எட்டிப் பிரதிபலித்த ஒளிக் கோலத்தைத் தொட முயன்ற கணத்தில் கூட அடுத்த