கதையாசிரியர் தொகுப்பு: சிவஸ்ரீ

3 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவும் கடந்துபோகும்

 

 ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும்போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று சீசாவில் எழுதியிருந்ததைப் படித்ததும் நறுநறுன்னு புதுசு புதுசாத் தலை முழுக்க முடி முளைவிட்டு சர்ருன்னு நீளமா வளர்வது போல் இருந்தது. இமைகளில் வழிந்த நுரையை வழித்து விட்டுக் குமிழைத் திருக, பூப்பூவாய்க் கொட்ட ஆரம்பித்தது வெந்நீர் சுகமாய். அருணின் பார்வையைவிடவா இது சுகம்? பாடிக்கொண்டே பூத்துவாலையைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் அமுதா. அலமாரியில் அந்துருண்டை மணம்


செத்தாலும்

 

 அம்மாஆஆஆ… ஆ… அவ அலறுனா. படார்னு கதவத் திறந்துக்கிட்டு ஓடி வரலை யாரும். அவ அலறுனது வெளியில கேக்கலபோல. மறுபடியும் கத்தப் பிரயத்தனப்பட்டப்பத்தான் அவளோட தொண்டைக்கு அவ்வளவு பக்கத்துல இருந்த அவளோட காதுக்கே தொண்டை அலறுனது கேக்கலைன்னு அவளுக்குப் புரிஞ்சிச்சு. க்ரேன் எழும்புற மாதிரி கைகளத் தூக்கிக்கிட்டு வந்து, தண்ணிக்குள்ள முக்கி வச்ச இலவம்பஞ்சைப் போல ஊறிக் கனத்து ஒட்டிக்கிட்டிருந்த உதடுகள ஒருவழியாப் பிரிச்சுவிட முடிஞ்சிச்சு. ஆனாலும் தடிச்சு மரத்திருந்த நாக்கக் கையால அசைச்சு வளைச்சுப் பேச


பொழப்பு

 

 அப்பவெல்லாம் நான் பேசுவேன். ரொம்பப் பேசுவேன். பேசிக்கிட்டேயிருப்பேன். தூக்கிப் புழியிறதுக்குள்ளக் கையொடிச்சுப் போடுற ஜீன்ஸ் பேன்ட்டுகள மூச்சப் புடிச்சு ஒதறி காலாக் கம்புல போட்டுக் க்ளிப்புப் போடுறப்பக்கூடப் பேசுவேன். சன்னல் க்ரில்ல சாவி போட்டுத் தெறந்து, நாலு ஈரப் பேன்ட்டுமா சேந்து ஒராளு கனங் கனக்குற காலாக் கம்ப அலாக்காத் தூக்கி வெளிச்சுவத்துத் துளையில சொருகப் போறப்பக்கூடப் பேசுவேன். ஊரணில எறங்கி, கொண்டாந்த துணிமணியந்தா அப்டி இப்டி ரெண்டு தப்பு தப்பிப்புட்டு, கட்டாந்தரையில காயப்போட்டுப்புட்டு நாலு முங்கு