கதையாசிரியர் தொகுப்பு: சாந்தினி ஜோன்ஸ்

1 கதை கிடைத்துள்ளன.

குளிரெழுத்தின் வண்ணங்கள்

 

  பொன்வண்டுகளுக்குக் குளிரடிக்காது. குளிரடிப்பதாக இருந்தால், அவை மழைக் காலத்தில் தோன்றுமா? ‘அம்மா’ என்று ஆசையுடன் அழைக்கும் மூன்றரை வயது மகளை என் மாமியாரின் வீட்டில் விட்டுவிட்டு வந்தபோது, பொன்வண்டின் ஞாபகம்தான் வந்தது. எனக்கும் தனசேகரனுக்கும் திருமணம் முடிந்து, அவருடைய ஊரான பட்டத்திபாளையத்தில்தான் அவள் பிறந்தாள். அமராவதி ஆறு, கரை நாணல்கள், காட்டுப் புற்கள், புல் மேயும் எருமை, ஆட்டினங்கள், நால் ரோட்டில் பால் ஊற்றும் சொஸைட்டி, மிஞ்சிய பாலில் மத்துக் கடையும் தயிரரவம், நெய் மணக்கும்