கதையாசிரியர் தொகுப்பு: சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

1 கதை கிடைத்துள்ளன.

சங்கு

 

 செய்தாமு சாயபும் சேமீரா வாத்தியாரும் சிங்களத்-தில் பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தனர். இடம்தான் கொஞ்சம் இடித்தது! அது, அவர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த இலங்கை-யிலுள்ள பதுளையோ, பண்டாரவிளையோ அல்ல; சாத்து மாநகரின் மீன் சந்தை. ‘‘அப்புறம்… நேத்து என்னதான் செய்தீர்?’’ & திடீரென்று தமிழுக்குத் தாவினார் சேமீரா. ‘‘என்ன ஓய்… இம்பிச்சிக்காணும் ஒரு மாவுளாவை வெச்சுக்கிட்டு இருபது ரூவான்னான். சோலியப் பாருவேன் னுட்டு, கடையிலே போயி நாலு முட்டை வாங்கிக் கொடுத்து ஆக்கச் சொன்னேன். பகல் முற ஒப்பேரிட்டா