கதையாசிரியர் தொகுப்பு: சபிதா இப்ராகிம்

1 கதை கிடைத்துள்ளன.

பூந்தளிர்க் காலம்

 

 அலாரம் அடிக்கும் ஓசை நன்றாகவே கேட்கிறது. ஆனால் கண்களை திறந்து கொள்ள துளியும் விருப்பமில்லை. வழக்கமாக 5 மணிக்கு அலாரம் வைத்து விட்டு நான்கு மணிக்கே எழுந்து கொள்வது வழக்கம் தான். ஆனால் இன்று மிக களைப்பாக இருக்கிறது. இத்தனை அதிகாலையில் எழுந்து உலகை புரட்டிப் போடப் போகிறானா என்ற சலிப்பும் படுக்கையை விட்டு எழவிடாமல் தடுத்தது. விசுவை திரும்பி பார்த்தேன். நேற்றிரவு நான் கண்ட விசுவா இது ? சலனமில்லாமல் ஒரு குழந்தையைப் போல உறங்கிக்