கதையாசிரியர் தொகுப்பு: சத்யானந்தன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

துண்டிப்பு

 

 ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே குறுஞ்செய்தி இருந்தது. இன்று முதல் வேலையாக அதைச் செய்ய நினைவுட்டல். இன்று எப்படி இருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும், நேற்று புரசைவாக்கத்தில் அலைந்து


குரல்

 

 மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது தான். ஆனாலும் கடைசி வண்டியைப் பிடிப்பதே பழக்கமாகிவிட்டது. எதோ நினைவு வந்தவன் போல U வளைவு வரை ஓரமாகவே நடந்தான். வளைவில் ஏதேனும் ஒரு வாகனம்


சிறை

 

 மேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் இப்படி நிகழ்கிறது? குளியலறையில் நுழைந்த போது கதவைத் திறந்து தானே வந்தேன்? மின்விளக்கும் எரிந்ததாகவே நினைவு. இப்போது வெளிச்சம் இல்லாதது மட்டுமே சவால் என்று