கதையாசிரியர் தொகுப்பு: க.நவசோதி

1 கதை கிடைத்துள்ளன.

வாழ்க்கைத் துணை

 

 திறந்திருந்த ஜன்னலின் வழியாகக் குளிர் காற்று வீசியது. அந்த அறைக்கு அது குளிர்ச்சியைக் கொடுத் தது. கட்டிலிலே படுத்திருந்தாள், உமா. அவளைத் தவிர அந்த அறையில் வேறு எவருமே இல்லை. கட்டிலிலே படுத்திருந்தாலும் அவள் நித்திரை கொள்ளவில்லை. அது ரித்திரை கொள்ளும் நேரமுமல்ல. அந்த அறையிலே இருந்த குளிர்ச்சியை அவளின் உள்ளத்திலே காண முடியவில்லை. அவளின் கண்கள் எதிரேயிருந்க மணிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தன. என்றுமேயில்லாத வகையில் அவளின் பார்வையிலே ஒரு புதுமை. ‘டிங்…டாங்…’ மணிக்கூட்டிலிருந்து புறப்பட்டது ஒலி.