கதையாசிரியர் தொகுப்பு: கே.செந்தில்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

காலை நேரத்து கற்பகத்தம்மாள்

 

 கதவை திறந்து வெளியே வந்தார் கற்பகத்தம்மாள்.. ஆள் நடமாட்டமில்லாத அதிகாலை நேரம். மரத்தில் ஒட்டிய பூச்சிகளின் கீச்சு சத்தம் நிக்காமல் இருந்தது. நேற்று மாலையே எடுத்து வைத்திருந்த சாணத்தை வாளியில் இட்டு கரைத்து …..ச்சட… ச்சட…. என்ற சத்தத்துடன் தெளித்து முடித்தார். “இந்த காலத்துல எந்த பொம்பள எந்திரிச்சு வாச தெளிக்கிறா…… கேட்டா….. “வாசலே இல்ல, வாச எங்க தெளிக்கிறது”ன்னு வக்கனையா எகத்தாளத்தோட கேக்கறாளுங்க…… ம்ம்……..என்ன ..செய்யறது…” என்று தனக்கு தானே புலம்பியவாறே முந்தானை மரைப்பை எடுத்து