கதையாசிரியர் தொகுப்பு: கீழை நாடன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசி வரை

 

 மகாதேவன் மேல வாங்க.. என அழைத்த குரலைக் கேட்டு தலையை உயர்த்தினான் மகாதேவன். நான்கு பேர் நின்றிருந்தார்கள். நம்ம க்ளாஸ் ரூம் இதுதான் என்றான் ஒருவன் அருகிலிருந்த வகுப்பறையை சுட்டிக்காட்டியபடி மகாதேவன் படிகளில் ஏறி வகுப்பறையை அடைந்தான். அங்கிருந்த நீளமான பெஞ்ச்களை பார்த்தபடியே “எங்க எக்ஸாம் நம்பரையே டேபிள்ல காணோம். அதெல்லாம் அப்படித்தான்.. சிரித்தபடி சொன்னான் ஒருவன் யார் வேணா எங்க வேணா உட்காரலாம் என்றான் இன்னொருவன் அந்த அறை முழுவதும் மாணவர்களின் பேச்சுக்களால் இரைச்சலாய் இருந்தது.


அழகான அப்பா

 

 “என்னப்பா வண்டி கெடைக்குமா” என்றார் டிராவல்ஸ் கடைக்குள் நுழைந்த நடராஜன். தடித்த உருவம். பெரிய தொப்பை. இந்திய கருப்பு நிறம். மூக்கு மட்டும் கொஞ்சம் பெரியது. இளவயதில் வந்த அம்மை நோயின் மிச்சமாக உடல் முழுவதும் ஆங்காங்கே மிளகு அளவு புள்ளிகள். சராசரியை விட குறைந்த உயரம்.. தலையில் கருப்புமுடியும் நரைச்ச முடியும் சமபங்கில் இருந்தது. தாடியிலும் மீசையிலும் கூட நரைமுடி படர்ந்த்திருந்தது. இடது காதுக்கு கீழே கண்ணத்தில் புளியங்கொட்டை அளவில் ஒரு மரு. ஆங்…காலைல போன்


ஒரு வீடும் சில மனிதர்களும்

 

 தெருவிலே சில கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் இருந்தன. ஜமுனாவின் வீட்டுக்கு அவர்கள் வந்த போது அவர் துணி துவைத்துக்கொண்டிருந்தார். இடுப்பில் சொருகியிருந்த சேலையை எடுத்து விட்டு சரி செய்து கொண்டு கட்சி காரர் கொடுத்த நோட்டீஸை வாங்கிக்கொண்டார். வயது ஐம்பதுகளில் இருக்கலாம். கட்சிக்காரர்களுடன் வந்தவர்களில் ஏழுமலையும் இருந்தார். அவரை பார்த்தவுடன் வாண்ணா.. உள்ள வா.. என்றார் ஜமுனா. கட்சிக்காரர்கள் அடுத்த வீடுகளுக்கு போனார்கள்.


உதாசீனம்

 

 மலை மேல் உள்ள முருகன் கோயிலில் கிண்..கிண் என மணி ஒலித்தது. அந்த மலையும் கோயிலும் ஊருக்கே அழகை கூட்டியது. மலை அடிவாரத்திலிருந்து மேலே செல்ல படிகட்டுகள். படிகட்டுகள் துவங்கும் இடத்தில் ஒரு கல்மண்டபம். எந்த அரசனின் கைங்கர்யமோ.. இன்று பலர் தங்குவதற்கும், ஓய்வெடுக்கவும் பயண்படுகிறது. உழைக்க திராணியில்லாமல் கையேந்தும் ஒரு கூட்டம் அலுமினிய தட்டுகளையோ, குவளைகளையோ, வெறும் கைகளையோ ஏந்துகிறார்கள். காலை பதினொரு மணிக்கு மேற்பட்ட நேரம். சூரிய ஒளியில் உஷ்ணம் கூடிக்கொண்டிருந்தது. சாமுண்டிஸ்வரியும் பிரேமாவும்


தேடல்

 

 இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். ஒரு சுருட்டை எடுத்து உதட்டில் பிடித்து நடுங்கும் விரல்களினாலே தீப்பெட்டியை உரசி பற்ற வத்துக் கொண்டான். சூடான புகையை உள்ளுக்குள் இழுத்தான். குளிர் இப்போது தேவலாம் போல் இருந்தது. இறைமகன் தன் நரைத்த தாடியை வாஞ்சையாய் தடவினான். அவன் படுத்திருந்த சிமெண்ட் குழாய் சில்லிடுகிறது. ஆனாலும் கிழவன் வேறு ஜாகைக்கு செல்வதில்லை. ஆற்றின் கரையில் பதிக்கப்பட்டிருந்த