கதையாசிரியர் தொகுப்பு: கலைச்செல்வம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அனகன்

 

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களுக்கு குரல் கொடுத்தவனை போலொரு முகபாவத்துடன் தன் காரில் ஒலித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அகிலன். அவன் குரலை அவனே கேட்கா வண்ணம் அவன் காதுகளை கவசமிட்டது அந்த பாடலின் ஓசை. இதயம் துளைக்கும் புல்லாங்குழல் இசை காதை துளைத்துக் கொண்டிருந்தது அந்த காரில். கார் பயணத்தில் இசையை இப்படி உரக்க கேட்டு ரசிப்பது அவன் வழக்கம். அவன் கார் அந்த சாலையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, அவன் எண்ணமோ எங்கோ அலைமோதிக்


யார் அவள்?

 

 சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள் திரையிடப்பட்ட அந்த அறையில் சூரிய ஒளியின் ஊடுருவல் தென்பட்டது. கண்களைத் திறந்த அடுத்த நொடி அவன் தேடியது அவனது கைதொலைபேசியைத்தான். வழக்கமாய் அவனது கட்டிலின் வலதுபுறம் அமைந்து இருக்கும் மேசையை அங்குக் காணவில்லை, அதன் மேல் இருக்க வேண்டிய கைதொலைபேசியையும்தான். அளவுக்கு அதிகமான உடல் சோர்வுடன் அவனின் இடதுபுறம் திரும்பியவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி,