கதையாசிரியர் தொகுப்பு: கலா விசு

2 கதைகள் கிடைத்துள்ளன.

கன்னித்தாய்

 

 முதலமைச்சரின் “விருது வழங்கும் விழா” வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பரிசை பெறப்போவது கவிதா என்ற அறிவிப்பு வெளியானதும் கரகோஷம் விண்ணைப் பிளக்க, சக்கர நாற்காலி உருளும் சத்தம் மென்மையாக… முதலமைச்சரை வணங்கி பரிசை பெற்றுக் கொள்கிறாள். அவள் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்! இப்படி ஒரு மகளைப் பெற்றதற்கு இவளுடைய அம்மா என்ன தவம் செய்தாரோ…? ஒவ்வொரு பெண்ணும் கவிதாவைப் பார்த்து நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! “சாதனைப் பெண்மணி” இவர் சாகித்யம் பெற்றவர்! என்று


கடவுள் சொன்ன ரகசியம்…

 

  கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற உறுத்தலும் இல்லாம இல்லை… அம்மா..! சொல்றதைக் கேட்டு நல்லா படிச்சிருந்தா.. இன்னிக்கு இப்படி அல்லாட வேண்டியிருக்குமா..? அம்மாவோட கண்ணீர் புரிய வைக்காததை நேர நேரத்திற்கு வருகிற பசி புரிய வைச்சிடுச்சி..! எந்த வேலைக்கும் போகமுடியல மூட்டை தூக்கிறது, கூலி வேலைன்னு போனா..! சரியான சாப்பாடு இ்ல்லாததால செய்ய முடியமாட்டேங்குது. இரண்டு மூட்டைக்கு மேல தூக்க முடியலன்னா…