கதையாசிரியர் தொகுப்பு: எழிலி

1 கதை கிடைத்துள்ளன.

தோப்புத் தெருவும் ஆலமரமும்

 

 இன்னமும் சில விஷயங்கள் ஞாபகத்திலிருந்து மறையவில்லை. முதன் முதலாய் அந்தப் பள்ளிக் கூடத்தில் அடியெடுத்து வைத்தது. பழைய வீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரம். நானும் தம்பியும் பஸ்ஸிலேறித் தோப்புத் தெருவிலிருந்து இறங்கி பதினைந்து நிமிடம் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஊரின் எல்லையில் அமைதிச் சூழலில் சுற்றிலும் மணல் வெளியின் நடுவில் கூரை வேய்ந்த பள்ளிக்கூடம். ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும் நடுவில் தட்டிகள் தடுப்புச் சுவர்கள் . இவற்றைக் கடந்து பெரிய ஆலமரம். மயில் தோகை