கதையாசிரியர் தொகுப்பு: இளவல் ஹரிஹரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

குறையொன்றுமில்லை

 

 “ஐயா.குழந்தை பசியால அழுவுதுய்யா..கையிலே துட்டு இல்லே.கொஞ்சம் பாலு ஊத்தினீங்கன்னா..உங்களுக்குப் புண்ணியமாப் போகும்” ராமராஜ் ஏற இறங்க அந்தப் பெண்ணைப் பார்த்தார். இடுப்பில் பெண்குழந்தை.இரண்டு வயதிற்குள் இருக்குமா..மூக்கொழுக அழுது கொண்டு இருந்தது. தாயின் முகத்தைப் பார்த்தபடி. “டே சம்முவம்.அந்தம்மாவுக்கு ஒரு கிளாஸிலே பாலக் கொடு..நல்லா ஆத்திக் குடு..குழந்த குடிக்கற பதத்துக்கு. அப்படியே அந்தம்மாவுக்கு ஒரு டீ குடு.வேற எதுனாத் துன்றியாம்மா.” அந்தப் பெண் அவசர அவசரமாகத் தலையாட்டி மறுத்தாள். “அண்ணே..இன்னும் போணியாகலேண்ணே.” “ஏன்..இது போணியில்லியா..அடச் சும்மாக் குடுடா..” குழந்தை


இரண்டு இட்லியும் ரத்னா கபேயும்

 

 எழிலகம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினான் சுந்தர். இந்த எழிலகக் கட்டடம் பின்புறமுள்ள பழங்கால அரசு கட்டடத்தில் தான் விஜி வேலை பார்க்கும் அலுவலகம் உள்ளது. விஜி தான் வரச் சொல்லியிருந்தாள் சுந்தரை. சுந்தரும் விஜியைப் பார்க்கும் ஆவலில் இருந்தான். அதற்காகவே முகநூலிலெல்லாம் அவள் பெயரைத் தேடி, ஒருவழியாக அவளது முகநூல் அடையாளம் கண்டறிந்து அவளது உட்பெட்டியில் செய்தி அனுப்பியிருந்தான். “சுந்தர்…..ஓ மை காட்…..எங்கேடாபோயிட்டே….. உன்னை எங்கெல்லாம் தேடி….அப்பா ஈஸ்வரா….நல்ல வேளை….நீயே தொடர்பில் வந்திட்டே……சரியா வெள்ளிக்கிழமை வந்திரு….நான் அதே