கதையாசிரியர் தொகுப்பு: ஆதி பிரகாசு

1 கதை கிடைத்துள்ளன.

நெஞ்சோடணைத்து…

 

 துப்பாக்கியை நெஞ்சோடணைத்து ஒருமரத்தின் மேலே அமர்ந்து கிளைமேல் காலைநீட்டியவாறு உறக்கத்தில் இருந்தார் தலைவர்; “தலைவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் கண்ணயர்ந்தார் இப்போது எழுப்பவேண்டாம்” என்றார் தலைவரின் மெய்க்காப்பாளர்; “முக்கியமான செய்தி” என்றேன்; “நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்து கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் எதுதான் முக்கியமல்லாத செய்தி” என்று பதிலளித்தார்; பத்துநிமிடங்கள் மௌனமாக இருந்தோம்; பிறகு தலைவர் அருகில் சென்று அழைத்தேன் “தலைவரே” என்று. அவர் விழித்துக்கொண்டார்; சிவந்த கண்களுடன் என்னை நோக்கினார்; மெய்க்காப்பாளரோ “சீக்கிரம் சொல்”