கதைத்தொகுப்பு: மல்லிகை

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ் வரலாற்றில் மல்லிகை எனும் சிற்றிதழ் முக்கியமானது. 1966 ஓகஸ்ட் மாதம் முதலாக, 47 ஆண்டுகள் வெளிவந்து, இலக்கியச் சாதனை நிகழ்த்திய இந்த மாதாந்த இதழின் ஆசிரியர், எழுத்தாளர் டொமினிக் ஜீவா. ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இவ் இதழ், பின்னர் கொழும்பிலிருந்து வெளியாகியது.

சுதந்திர இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பல்வேறு படைப்புகளூடாக வெளிப்படுத்தியதுடன், இலங்கைத் தமிழ் இலக்கியத்தைத் தமிழக எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் மல்லிகை மேற்கொண்டது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பலரும் மல்லிகையில் எழுதினர். தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் மல்லிகையில் எழுதியுள்ளனர்.

இலங்கையின் முற்போக்கு இலக்கிய முக்கியஸ்தர்கள் மல்லிகைக்கூடாகவே நன்கறியப்பட்டனர். அவர்களின் எழுத்துக்களை அறிவதற்கு மல்லிகை பயன்படும். இன்னும், கருத்துநிலை ரீதியில் மாறுபட்ட எழுத்தாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் முதலியோரின் எழுத்துக்களையும் மல்லிகையில் காணலாம். பிற்காலத்தில் வரலாற்றில் நன்கறியப்படும் பலரும் மல்லிகையூடாகவே அறிமுகம் பெற்றனர். மல்லிகையின் பெரும்பாலான இதழ்களின் அட்டைப்படங்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள் முதலியோரில் ஒருவரின் ஒளிப்படத்தைத் தாங்கியிருந்ததுடன், அவர் பற்றிய அறிமுகம் கட்டுரையாகவும் இதழினுள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கியச் சர்ச்சைகள், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் முதலிய பலவும் மல்லிகையில் வெளியாகின. மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் படைப்புகள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியாகின. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள எழுத்தாளர்களில் பெரும்பாலானோரின் படைப்புகள் மல்லிகையில் வெளியாகின. மல்லிகையில் வெளிவந்த இவர்களது படைப்புகள் பலவும் பின்னர் மல்லிகைப் பந்தல் வெளீயீடாக வெளிவந்தன. ஒவ்வொரு வருடமும் தைமாத இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.

தமிழ் இலக்கியம் என்ற பெருவெளியில், இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தக்கவைத்ததிலும், விரிவாக்கி வளர்த்ததிலும், நவீன இலக்கியத்தைச் சனநாயக மயப்படுத்தியதிலும், பிரதேச இலக்கியத்தளத்திற்கு முதன்மையளித்ததிலும் தமிழ் உலகில் மிக நீண்டகாலம் வெளிவந்து பணியாற்றிய ஒரே இதழ் என்றவகையிலும் மல்லிகைக்கு முக்கிய பங்குண்டு. 04.07.2001 இல், இலங்கைப் பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில், பாராட்டுடன் கூடிய பதிவைப் பெற்றது.

185 கதைகள் கிடைத்துள்ளன.

நான் ஆளப்பட வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 3,991

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இவன் எதிர்பார்த்துக் கொண்டு வந்தது போலவே...

ராம்ஸே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 3,215

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என் பிறப்புத் தீவு இருபத்து மூன்று...

ஆகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 3,631

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீதிவலம் சுற்றி வந்த சுவாமி கோயில்...

ஆழ்ந்த அநுதாபங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 6,626

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருளும் ஒளியும் மரணத்தைத் தழுவி விட்ட……...

தெரிவு அந்தரத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 10,231

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெனிதுடுமுல்ல ரோட் திரும்புகிற வழியிலே நின்று...

சர்ப்ப வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 5,311

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அனல் பறக்கும் வயல் வெளியை உற்று...

க்ஷணப்பித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 5,896

 (1973 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் மக்கள் ஓடிச்...

பொட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 8,545

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பொட்டு வச்சிக்கிட்டு வாங்க….?’ ஷேவ் செய்து...

பந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 8,064

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அந்த சின்னஞ் சிறிய சந்துக்குள்தான் இவர்கள்...

இறுமாப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 6,851

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பூந்தோட்டத்தில் நிற்கின்றேன். பூஞ்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டு....