கதைத்தொகுப்பு: குங்குமம்

139 கதைகள் கிடைத்துள்ளன.

உன்பேர் எழுதிய உணவு…

 

 மினாரில் இன்னும் விளக்குகள் துளிர் விட்டு இருக்கவில்லை. காசிம் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அமீரை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான். அந்த வளர்பருவத்திற்கு உண்டான ஆர்வம் மிகுதியாயும் அந்தக் கண்ணில் மிதந்துகொண்டு இருந்தது. அத்தனையும் அவனுக்கு வேடிக்கையாய் விசித்திரமாக இருந்தது. முக்காடிட்டு கடந்துபோன பெண்களும், மற்றேனைய மனிதர்களும், அவர்களின் முகக்குறிப்பும், கொஞ்சமும் புரியாத அவர்களதுமொழியும் அவனுக்கு அத்தனை விசித்திரமாக இருந்தது. ஜந்தர் மந்தரைத் தாண்டி கொஞ்சம் உள்ளே நடக்கவேண்டும் அவர்கள் தேடி வந்த பள்ளிக்கு.குறுகலான சந்துகளில்


மனைவி – ஒரு பக்க கதை

 

 அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்துகொண்டிருந்தார். எனது டூவீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. “என்னங்க ஆச்சு..?” – கேட்டேன். “வேகமா வந்த ஆட்டோ சக்கரம் கால்ல ஏறிடுச்சு தம்பி…” “வாங்க… எனக்குத் தெரிஞ்ச டாக்டர் பக்கத்துலதான் இருக்கார். கட்டு போட்டு ரத்தம் கசியறதை முதல்ல நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்ஷனும் போட்டுக்கலாம்!” – என்றேன். வேண்டாம் என்று விலகியவரை விடாப்பிடியாக அழைத்துப் போனேன். எல்லாம்


பௌணர்மி புன்னகை!

 

 பிரகாரத்தில் வீசிய காற்று இதமாக இருந்தது. சித்திரை மாதத்து வெயில் உக்ரமாக பார்வைக்கு தென்பட்டாலும், வெப்பத்தில் கடுமை இல்லை. வடபழனி சிவன் கோயில் பிரகாரம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இன்னும் மண்டபத் தூணில் முகுது சாய்த்து அமர்ந்தால் வசதியாகவும் இதமாகவும் இருக்கும். சுற்றிலும் பார்த்தேன். எல்லா தூண்களிலும் முதுகு சாய்த்திருந்தார்கள். கையில் மொபைலோடு பேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ இணைந்திருந்தார்கள். சமூக வலைத்தளப் பிரியர்களுக்கு கோயில் வசதியான இடம். கும்பிடு போட்டுவிட்டு பிரகாரத்தில் அமர்ந்தால் மணிக்கணக்காக பிக்கல் பிடுங்கல் இல்லாமல்


நெருப்பு வேர்கள்

 

 நங்கூரமிட்ட கப்பலாக நகராமல் நிற்கிற பஸ், நிம்மதியை பங்கம் பண்ணியது. மகளைப் பார்க்கப் போகிற பேரார்வத்தில் சொக்கிக்கிடந்த இதயம் சக்கையாகப் பிழியப்பட்டது போல் அதிருப்தி அடைந்தது. ‘நம்பக்கிட்ட கடன் வாங்குன அந்தாளு பரமசெவமும், அவெம் பொஞ்சாதியும் தீய வெச்சுத் தற்கொலை பண்ணியிருக்கலேன்னா, ஒரே மக வெண்ணிலாவப் பிரிஞ்சு… ஜெயிலுக்குப்போயி… நம்ப பொழப்பு இப்டி நாறிப்போயிருக்காதே…’ வலுத்த விரக்தியுடன் அலுத்துக்கொண்ட ராசேந்தின் அடுத்த கணமே வேகமாக ஏறிய டிரைவர் பேருந்தை ஸ்டார்ட் பண்ணவும் புத்துயிர் பெற்றான். ‘இந்த ஒலகமே


அம்சவேணியின் சாமர்த்தியம்

 

 “உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும் யோசனை பண்ணிப் பார்த்துட்டு நேரா உங்கிட்டயே ஒரு வார்த்தை கேட்டுப்போடலாம்னுதான் கேக்குறேன். என்னெக் கட்டிக்கிறியா மஞ்சு?” செல்வம் விஜயமங்கலத்தில் மேக்கூர்க்காரன். சொந்தமாக தறிக்குடோன் வைத்திருக்கிறான். குடோனில் ஒரு டஜன் தறிகள் இரவு பகலென்று ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா காலமாகி எழு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. குடோனை ஒட்டி இருந்த வீட்டில் இவனும் இவன் அம்மாவும் மட்டும்தான்.


ஆரூரா தியாகேசா!

 

 சமீபத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை நந்தினி பார்த்ததில்லை. சிலவருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் டிஐஜி ஆக இருந்தபோது பூரம் திருவிழாவில் அடர்த்தியான ஒரு கூட்டத்தைப் பார்த்ததாக நினைவு. கூட்டமிருந்ததே தவிர இவ்வளவு ஆரவாரம் இல்லை. இங்கு வேறு மாதிரியாக இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருக்க… ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகத் திரண்டிருந்தார்கள். தெருவில் இருக்கும் வீடுகளை மறைத்து இரண்டு பக்கமும் ஏராளமானவர்கள் நின்றிருந்தார்கள். மொட்டை மாடிகள் எங்கும் மனிதத் தலைகள். தேர் வடத்திற்கு இரண்டு பக்கமும்


காதல் போயின் மோதல்

 

 இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம் ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப்


குயில்களும் கழுகுகளும்

 

 மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்… டி.எம்.செளந்தரராஜனுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். “சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க…” பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை…’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான


காதலிக்கப்படுதல் இனிது

 

 “வாவ். ரொம்ப அழகா இருக்கு…”பரவசமாகக் கூவினாள் சுபா. இரண்டு புறமும் குடை போல் கவிந்த மரங்கள் அடர்த்தியாக சாலையை மூடியிருந்தன. உதிர்ந்து கிடந்தன மஞ்சள் நிறப் பூக்கள். லேசான மழைமூட்டம் போட்டிருந்த வானத்தில் அவ்வப்போது ஒரு வெள்ளி இழை மின்னி மறைந்தது. சாலையை ஒட்டியிருந்த வறண்ட நிலத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியது தெவிட்டாத காட்சியாக இருந்தது. தன்னை மறந்து சுற்றுப்புறத்தை ரசித்தபடி வந்த அவளைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தான் கேசவன். அவ்வப்போது அவளைத் திரும்பிப்


அழியாக் கோலம்

 

 “பார்த்தவுடனே டெலீட் பண்ணிடணும். ” “பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்!” மௌனம். அந்த டிஎம்மின் (Direct Message) மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவை பார்த்து வரலாம். அவள் அப்ஸ‌ரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம்.ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸ‌ரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ