இதயம் கனக்கிறது
கதையாசிரியர்: கே.ஆர்.டேவிட்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 152
(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று ஆசிரிய கலாசாலை வாழ்வின் இறுதி நாள் ஆசிரிய மாணவர்கள் பெட்டிகளுடன் புறப்பட்டு விட்டனர். நானும் புறப்பட்டு விட்டேன். கண்ணிறைந்த கணவனுடன் மனம் நிறைந்த வாழ்க் கையை நடத்தியவள். கணவனை இழந்து தலைவிரி கோலமாகி விதவையாகி நிற்பது போல்… எண்ணற்ற மனித சீவன்களின் தொழிற்பாட்டின் சங்கமத்தில் சோபையுடன் விளங்கிய நமது விடுதிச்சாலை சோபை இழந்து போய்க்கிடக்கின்றது. துாவானம் போல் ஆங்காங்கே சிலரின் குரலொலி மட்டும் கேட்டுக் கொண் டிருக்கின்றன.
அதிபரிடம் விடை பெற ஒரு பகுதி மாணவர்கள் அதிபரின் காரியாலயத்தை நிரப்பி நிற்கின்றனர். இன்னெரு பகுதியினர் விரி வுரையாளர்களைச் சூழ்ந்து நிற்கின்றனர். இன்னும் சிலர் கடந்த இரவு நடந்த விருந்துபசாரம் பற்றிய வர்ணனைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் மனதோடு ஒட்டிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டு நிற்கின்றனர். இப்படிப் பலரகத்தினர்.
நான் விடுதியை விட்டுப் புறப்பட்டு “அசெம்பிளி” கோலுக்குச் எனது செல்லும் நீண்ட விறந்தையின் முனையில் தூணோடு பெட்டியை வைத்து விட்டு நிற்கிறேன். நான் நண்பர் பண்டிதர் பரந்தாமனின் வருகையை எதிர்த்துக் காத்திருக்கிறேன். ஆசிரிய கலாசாலையைப் பொறுத்து எனக்கு வேண்டாதவர்களென்று யாருமே இல்லை ஆனால் பரந்தாமனுக்கும் எனக்குமிடையில் நெருக்க மாதொரு உறவிருந்தது.
“ஐயா….” பின் பக்கத்திலிருந்து இந்த அழைப்பொலி வரு கின்றது. குரலொலியும். அந்தக் குரலொலியில் பொதிந்திருக்கும் உணர்வும் அடக்கமும் அந்தக் குரலொலிக்குரியவரை எனக்கு இனங்காட்டிவிடுகின்றது..
அவன் – ஸ்ரீஸ்கந்தராசா. இவன் புத்தளத்தில் உடப்புக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அவன் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். எல்லோரையும் “ஐயா” என்று அழைக் கும் பழக்கமும் இவனிடமுள்ள அடக்கமும் எல்லோருக்குமே வளைந்து கொடுக்கின்ற சுபாவமும் அவனுக்கு அளவு கோலாகி … எல்லோருமே அவனிடம் அன்பாக இருக்க வைத்தது.
“.. என்ரா ஸ்ரீ… வயதுக்கு மூத்தவையாக இருந்தாலென்ன… வயதுக்குக் குறைஞ்சவையாக இருந்தாலென்ன.. எல்லோரையும் ‘ஐயா’ எண்டுதானே சொல்றாய். இந்தப் பழக்கம் உனக்கு எப்பிடி வந்தது…?. இப்படி ஒரு நாள் ஸ்ரீஸ்கந்தராசாவிடம் நான் கேட்டேன். நான் கேட்டதும் அவன் முதலில் சிரித்தான்… சிரித்து விட்டு அவன் பேசினான்.
”ஐயா… என்ரை குடும்பம் மிகவும் வறுமைப்பட்டது… நான் பிறந்ததிலிருந்து… இன்று வரையும் அந்த வறுமைக் குள்ளைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறன்….. அந்த வறுமை தானையா இந்த “ஐயா” எண்ட சொல்லை எனக்குக் கற்றுத் தந்தது… ஸ்ரீ கூறுகிறான்.
நான் அதிர்ந்து போய்விட்டேன் நான் பகிடியாகக் கேட்ட கேள்விக்குள் இப்படியொரு வெக்கையான பதில் இருக்குமென்று எதிர் பார்க்கவில்லை.
“…ஸ்ரீ… வா மச்சான்…” நான் ஸ்ரீயை வரவேற்கிறேன். “என்ன தனிமையாக நிக்கிறியள்..”
“நான் பண்டிதர் பரந்தாமனைப் பார்த்துக் கொண்டு நிக்கிறன்..”
“நான் போயிற்று வரப்போறன்… எங்கையோ பிறந்தம். எப் பிடியோ சேர்ந்தம். இரண்டு வருடங்கள்… துன்பமறியாத வாழ்க்கை. திரும்பவும் பிரியப் போறம்.. திரும்பவும் நாங்கள் சந்திப்பமோ… இல்லையோ…” இப்படிக் கூறிய ஸ்ரீ… எனது கைகளைப் பற்றிக் கொள் கிறான்…. அவனது கண்களில் கண்ணீர் பனித்திருக்கின்றது.
நான் எனக்குள் அவிகிறேன்.
“உங்கடை எதிர்காலம் நிட்சயமாக நிறைவுள்ளதாகவே அமையும்… நாங்கள் திரும்பவும் நிட்சயமாகச் சந்திப்பம்.. கவலைப் படாமல் போயிற்று வாருங்கோ. நான் அவனை ஆறுதல் படுத்தி வழியனுப்புகிறேன்.
ஸ்ரீஸ்கந்தராசா பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்படுகின்றான்.
எங்கோபிறந்து எப்படியோ வளர்ந்து இங்கு சந்தித்துப் பழகி அந்தப் பழக்கத்தில் புதியதொரு உணர்வையும், உறவையும் காண்கின்றோம்… பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடாகக் கற்றுக் கொண்ட அந்தப் புதிய பாடத்தைத் தொடரத்தான் நமது மனம் விரும்புகின்றது… ஆனால் காலத்தின் நகர்வுகள் அதற்கு இடங்கொடுக்க மறுக்கின்றது…?
ஸ்ரீஸ்கந்தராசாவின் மீது நங்கூரமிட்டு நின்ற எனது சிந் தனையிலிருந்து விடுபட்ட நான் அங்குமிங்கும் பார்க்கிறேன். பரந் தாமனைக் காணவில்லை… மனத்தளத்தில் அரிப்பு ஏற்பட அங்கிருந்து புறப்பட்டு விறந்தையால் நடந்து அசெம்பிளி கோல் விறந்தையில் இறங்கி முன் பக்கம் வருகிறேன்… வழமையான கடற்கரைக் காற்று வழமையான ஆசிரிய மாணவர்களின் பேச்சொலி….. சிரிப்பொலி… ஆரவாரங்கள்…
எனது சிந்தனை இறந்த காலத்தை நோக்கி விரைகின்றது….
அன்றுதான் நமது ஆசிரிய பயிற்சியின் முதல் நாள்…..
சில புதிய ஆசிரிய நண்பர்களோடு யாழ்ப்பாணம் பஸ் நிலை யத்திலிருந்து கொழும்புத்துறை பஸ்ஸில் ஏறி அந்தோனியார் கோவில் சந்தியில் இறங்கி கடற்கரை வீதியில் இராச நடை போட்டு ஆசிரிய கலாசாலையை நோக்கி வருகின்றோம்.
அதோ ஆசிரிய கலாசாலை கொழும்புத்துறை என்று எழுதப் பட்ட பெயர்ப்பலகை முதல் முறையாக ஆசிரிய கலாசாலைக் கட்டி டங்களையும் சூழலையும் மெலெழுந்த வாரியாகப் பார்க்கின்றேன்.
இன்னும் இரண்டு வருடங்கள் இதற்குள்தான் எனது வாழ்க்கை ….
கேற்றைத் தாண்டி நாமனைவரும் உள்ளே கால் வைக் கின்றோம். எத்தனையோ ஆசிரியர்களைக் கருத்தரித்துப் பிரசவித்த இந்தக் கலாசாலையின் வயிற்றில்… நாங்களும் கரு வாகுகின்றோம்…
எங்களைப் போன்ற எத்தனையோ புதிய மாணவர்கள் அசெம்பிளி கோல் முன்றலில் குவிந்து நிற்கின்றனர்… புதிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலின் படி மொத்தம் நூற்றியேழு மாணவர்கள் பழைய அறிமுகங்கள் பாலூட்டப் படுகின்றன. புதிய அறிமுகங்கள் பிரவசமாகிக் கொண்டிருக்கின்றன. பேச்சொலி, சிரிப்பொலி.. ஆரவாரம்.
நான் தனிமையாக நிற்கிறேன்.
“எல்லோரையும் அசெம்பிளி கோலுக்குப் போகட்டாம்” இக்கல்லூரியின் பியூனாக இருக்க வேண்டும். உரத்த குரலில் கூறுகின்றான். நாமெல்லோரும் முண்டியடித்துக் கொண்டு அசெம்பிளி கோலுக்குள் சென்று அமர்கிறோம். நமது இருக்கை களுக்குப் பின்னல் போடப் பட்டிருக்கும் ஆசனங்களில் இக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வந்தமர்கின்றனர். இரண்டாம் வருட மாணவர்களுக்குப் பின்னால் போடப்பட்டிருந்த ஆசனங்களில் இக்கல்லூரியின் விரிவுரையாளர்கள் வந்த மர்கின்றனர்.
அதிபரின் வரவேற்புரை வாழ்த்துரைகளைத் தொடர்ந்து அறிமுக நிகழ்வு ஆரம்பமாகுகின்றது. புதிய மாணவர்கள் ஒவ் வொருவராக மேடையேற்றப்பட்டு இரண்டாம் வருட மானவர்களால் கேள்வி கேட்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் அறிமுக விழா நமது மனத்தில் ஒருவித பீதியை ஏற்படுத்தியிருந்தாலும் அது போகப் போக சுவையானதொரு நிகழ்ச்சியாகவே மாறிக் கொண்டிருந்தது. நடிப்பு, பாட்டு, பேச்சு, சிரிப்பு எனது முறை வருகின்றது. நான் மேடையில் ஏறுகிறேன். கேள்வி கேட்கப்படுகின்றன.
“நீர் கடமையாற்றிய இடம்…” முதலாவது கேள்வி.
“பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயம்”
“சேவை செய்த காலம்”
“கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்..”
“உம்மிடமுள்ள விஷேச திறமைகள்…”
“எதுவுமில்லை..”
“ஆசிரியன் என்றல் யார்…”
“கல்வி கற்பிப்பவன்..” இந்தக் கேள்வி எனக்கு உள்ளுர ஒரு அதிர்வைக் கொடுத்திருந்தது. என்பது உண்மை… ஏதோவொரு பதில் கூற வேண்டுமே…. வாயில் வந்ததைக் கூறிவிடுகிறேன்.
இரண்டாம் வருட மாணவர்களுடன் விரிவுரையாளர்களும் சிரிக்கின்றனர்….
“போகப் போகத் தெரியும்… நீங்கள் போகலாம்…” நான் மேடையால் இறங்கி எனது ஆசனத்தில் வந்தமர்கிறேன்.
“ஆசிரியன் என்றல் யார்…” கிட்டத்தட்ட இரண்டு வருடங் களாக நான் பார்த்த தொழில்..அர்த்தம் தெரியாத நிலையிலா நான் இதுவரை எனது தொழிலைச் செய்திருக்கிறேன்…? எனது சிந்தனைத் திரிகை வேகமாகச் சுழல… நான் எனக்குள் வெட்கப் பட்டுக் கொள்கிறேன்….!.
அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து இரண்டாம் வருட மாண வர்களின் வரவேற்புரைகள் நடை பெற்று புதிய மாணவர்களின் நன்றியுரைகள் இடம் பெற்று… தொடர்ந்து தேநீர் விருந்தும் நடை பெற்று அத்தோடு முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைகின்றன…..
மறுநாள் வகுப்பு அனைவருக்குமான பொது வகுப்பாகவே நடைபெறுகின்றது. நூற்றியேழு மாணவர்களும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். நான்கு வகுப்புகளுக்குமுரிய நேரசூ சிகளும் தரப்பட்டு விரிவுரையாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். அதிபர் இக்கல்லூரியின் ஒழுங்குமுறைகள் பற்றி விபரிக்கின்றார். அதிபரை அடுத்து ஒரு விரிவுரையாளர் பொதுவான விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடுகின்றார்…
“ஆசிரியன் என்றல் யார்…?” நேற்று நடந்த சம்பவம்… எனது மனப் பறிக்குள் நண்டாய்த் துடிக்கின்றது… இவரிடம் கேட்பமா… சீ….. வந்தன்றே. அதுவும் முதல் வகுப்பிலேயே கேள்வி கேட்பதா?… அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்…
“இவரிட்டைக் கேள்வியள் கேட்கலாமா….?” எனக்குப் பக்கத்தில் இருந்த ஆசிரிய மாணவனிடம் நான் கேட்கிறேன்.
“கேள்வி கேட்கிறதிலை பிழை இல்லை….. அது சரி, என்ன கேள்வி கேட்கப்போறியள்…” அந்த ஆசிரிய மாணவன் திருப்பி என்னிடம் கேட்கிறான்.
“ஆசிரியன் என்றல் யார்…?”
“இதென்ன கேள்வி சேர்…. குழந்தைப்பிள்ளை மாதிரி…. பிள்ளையளுக்குப்பாடங்களைச் சொல்லிக் குடுக்கிறவைதான் ஆசிரியர்…”
“உந்தக் கருத்துப் பிழையானதெண்டு நேற்று இதே மேடை யிலைதானே சொன்னவை. அதாலைதான் நான் கேக்கிறன்….” நான் கூறுகிறேன்.
“அப்படியா…” அவரது முகத்தில் ஆச்சரியமும், சந்தேகமும் மாறிமாறிப் பிரதிபலிக்கின்றன… நெற்றியைச் சுருக்கித் தனது சிந்தனையை வலுப்படுத்துகின்றார்.
“பிள்ளையளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிறவன்தான் ஆசிரியர் என்றுதான் நானும் நினைச்சுக் கொண்டிக்கிறன். நேற்று அதைப் பிழையெண்டு சொன்னது… எனக்கு ஞாபகம் இருக்கு ஆசிரியர் என்டால் யார் என்ற உங்கடை கேள்விக்கு எனக்கும் பதில் தெரியேல்லை. அப்பிடியெண்டால் லெக்சரரிட்டை நீங்கள் கேளுங்கோ…” அந்த ஆசிரிய மாணவன் கூறுகின்றான்.
எனக்குமொரு பக்கத்துணை இருக்கு என்ற துணிவோடு நான் எனது இருக்கையை விட்டு எழுந்து நிற்கிறேன். அனைவரது கண்களும் என்னையே நோக்குகின்றன…. பாலரது பார்வையில் ஏளனமும், சிலரது பார்வையில் ஆச்சரியமும் இழையோடிப் போயிருப்பதையும் நான் உணர்கிறேன்.
“சேர்…. ஒரு கேள்வி…”
“கேளுங்கோ…..” லெக்சரர் எனது வேண்கோளை அங்கீ கரித்தது எனக்கு ஆறுதலாக இருக்கின்றது.
“ஆசிரியன் என்றல் யார்…. அதை ஒருக்கா விளங்கப் படுத்துங்கோ சேர்….”
நான் இப்படிக் கேட்டதும் வகுப்பில் ஒரே சிரிப்பொலி….
“சரி இருங்கோ…”
ஆசிரியன் என்றல் யார்…? நான் கேட்ட அதே கேள்வியைச் சபையை நோக்கி வீசுகிறார் விரிவுரையாளர்.
“கல்வி கற்பிப்பவன்….” ஒரு ஆசிரியமாணவன் கூறுகிறான்.
“அப்பிடியென்டால்…” விரிவுரையாளர் விளக்கம் கேட்கிறார்.
“மாணவர்களுக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுப்பவன்…” இந்தப் பதில் சபையின் ஏக மனதான பதிலாக அமை கின்றது…!
“உது பிழையான கருத்து…” விரிவுரையாளர் அக் கருத்தை மறுதலிக்கிறார். சபையில் பெரும் அமைதி…’ என்னைப் போலதான் இந்த நூற்றியேழு மாணவர்களுமா…” எனது மனம் திருப்தியடைகின்றது..
“அப்ப சரியானதைச் சொல்லுங்கோ சேர்…”
“சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு… அதே போல சமூகத்துக்கும் பாடத்துக்கும் உள்ள தொடர்பு…. பாடத்துக்கும் மாணவனுக்குமுள்ள தொடர்பு… இந்தத் தொடர்பு களை விளங்கிக் கொண்டால்… ஆசிரியன் என்றல் யார்? என்ற கேள்விக்கு விடை புரியும்…. இவைகளைக் கற்றுக் கொள்ளத் தான் இஞ்சை வந்திருக்கிறியள்… உங்களுக்கு இரண்டு வருஷப் பயிற்சி இஞ்சை வந்திருக்கிறியள்… உங்களுக்கு இரண்டு வருஷப் பயிற்சி இஞ்சை நடைபெறும்…. இன்று இரண்டாம் நாள்… இந்தக் கேள்விக்குரிய விடை போகப்போக உங்களுக்குப் புரியும்….” வகுப்பு முடிகின்றது… விரிவுரையாளர் செல்கிறார்.
எல்லோரும் அசெம்பிளி ‘கோலை’ விட்டு வெளியே வருகின்றனர். நானும் அங்கிருந்து புறப்பட்டு அசெம்பிளி கோலின் நீண்ட விறந்தையில் நடந்து விறந்தை முனைக்கு வருகிறேன். அந்த முனையிலிருந்து ஒரு பாதை நமது விடுதிச்சாலைக்கும் இன்னெரு பாதை அதிபரின் அலுவலகத்தை நோக்கிச் அலுவலகத்தை நோக்கிச் செல்வ தாயும் அமைந்துள்ளன. சிறியதொரு முற்சந்தி என்று கூறலாம். அந்த முற்சந்தியில்த்தான் நான் நிற்கிறேன்.
“ஆசிரியன் என்றல் யார் என்ற கேள்வியை விரிவுரையாள ரிடம் கேட்டது நீங்கள் தானே..?” அந்த ஆசிரியமாணவன் என்னிடம் கேட்கிறார்.
”ஓம் சேர்….. நான்தான் கேட்டன்… கடந்த இரண்டு வரு டங்களுக்கு மேலாக இந்த ஆசிரிய தொழிலைத்தான் செய்தன்… அதற்கான சம்பளத்தையும் வாங்கினனான்… இப்ப செய்த தொழி லின்ரை அர்த்தம் தெரியாமலிருக்கு…. பெரிய வெக்கமாயிருக்குச் சேர்… அதைப் பற்றி உங்களிட்டை ஏதாவது அபிப்பிராயங்கள் இருக்கா சேர்…” நான் அவரிடம் கேட்கிறேன்.
அவர் சிரிக்கிறார். சிரித்து விட்டு பேசுகிறார்……
“சேர்… உங்கடை நிலையிலைதான் நானும் இருக் கிறன்….. எது புரிஞ்சிருக்கு எது புரியாமல் இருக்கெண்டதைக் கண்டு கொள்ளமுடியாமல் இருக்குச் சேர்…
…..இதிலை ஒண்டை மட்டும் நாம் நிதானப்படுத்திக் கொள் ளலாம்…. இந்த ஆசிரிய பயிற்சிக் கல்லூரி வாழ்க்கை எங் களுக்குப் புதிசு…. ஆனல் இங்கு கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்களுக்கு மிகப் பழக்கப்பட்டதொரு விஷயம்… எங்களைப் போன்ற எத் தனையோ புதியவர்களோடு ஒட்டிப் பழகிய அனுபவங்கள் அவர் களுக்குண்டு…. இன்னும் இரண்டுவருடகாலம் இவர்களோடுதான் நாம் பழகப்போகிறோம்… புரியாமலா போகும்…” சிறுத்த அவரது நெற்றி யில் தோன்றி மறையும் சுருக்கங்களும். அவரது நிதானமான பார்வையும் அவரது பேச்சின் அமைதியும்… எனது மனதில் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
“உங்கடை பெயர்”
“பரந்தாமன்..” ”ஊர்….”
“புலோலி…”
“நாங்கள் இனி அடிக்கடி சந்திக்கலாம்…” நான் கூறு கின்றேன். இருவரும் பிரிகின்றோம். வாரங்கள் மாதங்கள் வருடங் களாகி… இந்தக் கல்லூரிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தி யாகின்றன… இரண்டு வருடங்களுக்கு முன்பு… எறும்புகள் கொடி விட்டு வருவது போல்… பெட்டி படுக்கைகளோடு இங்கு வந்தவர்கள்… இன்று அதே பெட்டி படுக்கைகளுடன் கல்லூரியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்…
நாங்கள் இங்கு வரும்போது…..’ ஆசிரியன்’ என்ற பெயரோடு மட்டுந்தான் வந்தோம்… இன்று ஆசிரியத்துவத்தின் உள்ளீடுகளை முழுமையாக உள்வாங்கியவர்களாக…. கனக்கின்ற இதயங்களு டன் வெளியேறிக் கொண்டிருக்கின்றோம்…
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஆசிரியமாணவனாக இங்கு வந்து…. பரந்தாமனை எந்த இடத்தில் சந்தித்தேனே… இன்று அவனிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக… அதே இடத்தில் காத்து நிற்கிறேன்…
பரந்தாமன் வருகின்றான்…
“என்ன முகஞ்சரியில்லை…” பரந்தாமன் என்னிடம் கேட்கின்றான்.
“சில உறவுகளின் வலிமைகள் அந்த உறவின் பிரிவினில்த் தான் வெளிப்படும் என்று கூறுவார்கள்… அது தான்” நான் கூறு கிறேன். பரந்தாமன் சிரிக்கிறான்.
“பரந்தாமன் நாங்கள் இந்தக்கல்லூரிக்கு வந்து முதன் முதலாக நாங்கள் இருவரும் எந்த இடத்திலை சந்திச்சனாங்கள் எண்டது உங்களுக்கு நினைவிருக்கா?” நான் கேட்கிறேன்.
“அதை மறக்க முடியுமா…?. இதே இடத்திலைதான் சந்திச் சம்..” பரந்தாமனின் வாய் மட்டுமல்ல அவனது கண்களும் சிரிக்கின்றன.
“இந்த இடத்திலை நாங்கள் முதன்முறையாய் சந்திச்ச போது என்ன கதைச்சம் எண்டது நினைவிருக்கா?” நான் கேட்கிறேன்.
“அதை மறக்க முடியுமா…? ஆசிரியன் என்றால் யார்…?”. இது தானே கூறிவிட்டுப் பரந்தாமன் சிரிக்கிறான்.
“ஆசிரியன் என்றால் யார் என்பதற்கு இப்போது உங்களுக்கு அர்த்தம் புரியுதா…”
“நல்லாய் புரியுது… ஆசிரியன் என்பதற்கு தமிழ் அகராதிப் படி குற்றமற்றவன், “ஆசு இரியன்”…. என்ற பொருள் கூறப்படுகின்றது… அதே பொருளை இன்றைய கல்வி ஆய்வாளர்கள் தர்மம் நிறைந்த ஒரு சமுதாயத்தை நோக்கி மாணவர்களை வழிநடத்துபவர்கள் என்று கூறுகின்றனர்”
இருவரும் சிரித்தப்படி அங்கிருந்து புறப்படுகின்றோம்.
– கலைக்கண், 23.01.1974.
– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026
