கைவிட்ட கடவுள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 100 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2026ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அழகான குட்டி குண்டு பையன் பெயர் முகுந்தன். முகுந்தனுக்கு பத்து வயசு . ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவன் படிக்கும் பள்ளிக்கூடம் மதுரையில் சிறந்த CBSE பள்ளி. ரொம்ப பாப்புலரான பள்ளிக்கூடம். நீளமான கார் வைத்திருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பள்ளிக்கூடத்தித்தான் படிக்கவைப்பார்கள். அப்பா சாப்ட்வேர் என்ஜினீயர் அம்மா கல்லூரி பேராசியர் இருவருக்கும் முகுந்தன் ஒரே பையன். செல்லம் கொஞ்சம் அதிகம்தான்.

முகுந்தனை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். குண்டு பையன், உப்பிய கன்னங்கள், சிறிய கண்கள், கொழுக் மொழுக்கென்று இருப்பான். முகுந்தன் நன்றாக வாய் பேசுவான், அவன் அம்மாவை போல. அவனிடம் பேசி அலையமுடியாது. அவன் கொஞ்சம் புத்திசாலிதான் ஆனால் படிப்பில்தான் சற்று கோட்டைவிடுவான். எண்பது மார்க் எடுக்க சொன்னால் 30 மார்க்தான் எடுப்பான். அம்மாதான் அவனுக்கு பாடம் சொல்லி கொடுப்பாள். புத்தகத்தை எடுத்தால் அவனுக்கு இமைகள் கனத்துப்போய் இமைகள் மூட ஆரம்பித்துவிடும். தூக்கம் அவனுக்கு பிடித்தவொன்று.

ஒருநாள் வீட்டில் சண்டை முற்றிவிட்டது. முகுந்தனுக்கும் அவன் அம்மாவிற்கும் இடையில் வாக்குவாதம். கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருவரும் கண்களை உருட்டி முறைத்து கொண்டு இருந்தார்கள். முகுந்தனை வேறு பள்ளிக்கு மாற்ற முடிவெடுத்தல் அம்மா அதுவும் ஹாஸ்டல் இருக்கும் பள்ளிக்கு. அவனுக்கு ஹாஸ்டல் பிடிக்காது. ஹாஸ்டல் வேண்டாம் என்று சொல்லிப்பார்த்தான், பிறகு கெஞ்சிப்பார்த்தான், பிறகு கத்தினான். கடைசியாக அம்மா ஒரு வாய்ப்பு கொடுத்தால். வரும் அரையாண்டு தேர்வில் எல்லா படத்திலும் எண்பது மதிப்பெண் எடுக்கவேண்டும் இல்லை என்றல் ஹோஸ்டேல்தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டால். முகுந்தன் ஒருநொடி யோசித்தான் எண்பது மதிப்பெண் முடியாத காரியம்தான் என்று தோன்றியது. இருந்தாலும் சரி என்று மண்டையை ஆட்டி ஒப்புக்கொண்டான்.

அவனுக்கு எப்படி பாஸ் மார்க் எடுக்கவேண்டும் என்று தெரியவில்லை. படித்துவிடலாம் என்று புத்தகத்தை கையில் எடுத்தால் இமைகள் கனத்து கொட்டாவி வந்து விடும். என்ன செய்வதென்று புலம்பிக்கொண்டு இருக்கும் போதுதான் சட்டேன்று கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுள் தான் பேராற்றல் கொண்டவன், அவன் நினைத்தாள் எல்லாமே சாத்தியம் என்று நம்பினான். அன்றுமுதல் முகுந்தன் கடுவுளை கும்பிட ஆரம்பித்தான். அவன் பக்திக்கு எல்லையே இல்லாமல் போனது. காலையும் மாலையும் விடாமல் கும்பிட்டான். பூக்கள் தூவி பிரார்த்தனை செய்தான். பூஜையறையை அலங்கரித்தான். அவனுடைய பக்தியை பார்த்து அம்மா அப்பா இருவரும் மகிஷ்ச்சி அடைந்தனர்.

பாஸ் மார்க் எடுக்க வேண்டும் என்று கடவுளை கெஞ்சினான். அரையாண்டு பரிச்சை நெருங்கிவிட்டது. முகுந்தன் தைரியமாக பரிச்சைக்கு தயார் ஆகிவிட்டான். பரிச்சைக்கு முந்தய நாள் அவன் படித்துக்கொண்டு இருந்தான்.

அம்மா அவன் அருகில் சென்று பாஸ் மார்க் வங்காள அப்ரோ ஹோஸ்டேல்தான் நல்ல படிச்சிக்கோ என்றால். முகுந்தன் வெற்றி சிரிப்பை சிரித்தான். கடவுள் என்கூட இருக்காரு அம்மா, பாஸ் மார்க் வாங்கி காட்டுற பாரு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

பத்து நாள் விடாமல் கடுவுளை கும்பிட்டு பரிச்சையை எழுதி முடித்தான். சவாலில் வென்றதுபோல காண்பீராமாக வீட்டுக்குள் சுற்றித்திரிந்தான். பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் நடத்தப்பட்டது. எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் அரையாண்டு மதிப்பெண்ணை பார்க்க சென்றார்கள். முகுந்தன் தைரியமாக இருந்தான். தான் கும்பிட்ட கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை. அம்மா ரிப்போர்ட் கார்டை வாங்கி பார்த்தால். ஒரு நிமிடம் கண் இமைக்காமல் சிலைபோல நின்றாள். அவனுக்கு ஒரே பதற்றம். அம்மா பார்த்துவிட்டு முகுந்தனிடம் கொடுத்தால். அவன் வாங்கி பார்த்ததும் ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் சிலை போல உறைந்து நின்றான். வழக்கம் போல எல்லா படத்திலும் பைல்.

அம்மா எதுவும் பேசவில்லை இந்தமுறையும் அவளுக்கு ஏமாற்றம்தான். ஆனால் அவன் மிக கோபமாக இருந்தான். அந்த கோவம் கடவுள்மீதுதான். வீட்டுக்கு வந்ததும் வேகமா பூஜைஅறைக்கு நுழைந்தான். அங்க இருந்த கடவுள் படங்களை பார்த்து முறைத்தான். மூச்சு பலமாக வீசியது. பற்களை நர நறவென்று கடித்தபடி நின்றான் பிறகு பேசினான். நீ எல்லா ஒரு கடவுளை. டாய் உன்னபோய் பெரிய ஆளுன்னு நம்புனேன். நாக்கை கோபமாக கடித்தான். நீ எல்லா வெஸ்டு கடவுளோ கிடையாது. என் மானதே வாங்கிட்டியேடா பாவி என்று சபித்தான்.

அவன் திட்டியதை பார்த்துக்கொண்டு இருந்த கடவுள் சிரித்த முகத்துடன் இருந்தார். குழந்தைகள் திட்டினாலும் அழகுதான். குழந்தைகளின் கோபம் கடவுளுக்கு மிகவும் பிடிக்கும் கடவுள் அதை இரசிப்பார். குழந்தைகள் தெய்வங்களை திட்டினால், தெய்வங்கள் அவர்களை அன்போடு அரவணைத்து கொள்வார்கள்.

மூன்று மாதங்கள் கழிந்தபின் முழுஆண்டு தேர்வு வந்தது. முகுந்தன் முடிவெடுத்தான் இந்த முறை பக்தி வேலைசெய்யது படித்தால் மட்டுமே பாஸ்மார்க் எடுக்கமுடியும் என்ற முடிவுதான் அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *