முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 504
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4. அபாயத்தை நோக்கிச் செல்லும் ஆரணங்கு!
நடிப்பில் சிவாஜி கணேசனை வீழ்த்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றுவிட்ட ராஜாமணி வீதிக்கு வந்ததும் அவளுடைய கையை விட்டான்
அவள் இன்னும் நடுநடுங்கிக்கொண்டிருந்தாள். அது மனித முகம் போல் இல்லை.
”யாரம்மா நீ? எப்படி இந்த ஆசாமிகளிடம் வந்து சிக்கிக் கொண்டாய்? இவர்கள் எதுவேண்டுமானாலும் செய்யும் அயோக்கியர்கள் ஆயிற்றே!” என்று அவன் அன்பு முழுவதையும் வார்த்தைகளிலேயே தேக்கிறான். “நான் கண்ணபிரான் வீட்டில்தான் வாடகைக்கு இருக்கிறேன்.” என்று சொன்னான்.
அவள் இமைகளைப் பெரிதாக விரித்துக்கொண்டு பார்த்தாள். “நீங்களும் இந்த வீட்டிலேயா?” என்று கேட்டாள்.
“இல்லை..இல்லை… நான் இங்கே. பேப்பர் போடுவதற்காக வந்து போவதுடன் சரி. நான் வேறொரு வீட்டில் குடியிருக்கிறேன்.” என்றான் ராஜாமணி.
அவன் செய்த உதவியை மிகமிகப் பெரிதாக அவள் ஏற்றுக் கொண்டாள். என்றென்றும் தனக்கு அவன் உதவி செய்வான் என்றும் நம்பினாள்.
இரண்டு பேர்களும் பக்கத்துப் பக்கமாக நடந்து சென்றார்கள். ராஜாமணி ஒரு கையினால் சைக்கிளைப் பிடித்திருந்தான். சைக்கிள் இரண்டு பேர்களுக்கும் நடுவே இருந்தது.
மீனா வழி நெடுக கண்ணபிரான் திருவிளையாடல்கள் பற்றி விளக்கிக்கொண்டே வந்தாள். ஆனால் அவர் தன் கழுத்தில் தாலி கட்டியதை மட்டும் சொல்லவில்லை. அதை அவள் மறைத்தாள்.
இந்த வெட்கக்கேடான விஷயத்தை ஒரு வாலிபனிடம் எப்படி பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
அதேசமயத்தில் கண்ணபிரான் தன்னைப் பெண்டாளத் துடிக் கிறார் என்பதை மட்டும் விளக்கத் தவறவில்லை. அவரால் தன் கற்புக்கு எந்த விநாடியிலும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் கூறினாள் வார்த்தைக்கு வார்த்தை அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.
“கண்ணபிரானை எப்படிக் கவனிக்க வேண்டுமோ, அப்படி நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்று சொன்ன ராஜாமணி, “அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறாய்? ஊருக்கே போய்விடப் போகிறாயா?” என்று கேட்டான்
“நான் அங்கே போய். என்ன செய்யப்போகிறேன்? சென்னையிலேயே எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள்”
அவள் ‘வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னதும்’, ராஜாமணி சுற்றுப்புற சூழ்நிலைகளையும், கண்ணபிரானாற் வரப்போகும் ஆபத்து க்களையும் மறந்து வாய்விட்டுச் சிரித்தான். “நீ கேட்ட வேலை எந்த கடையில் விற்கிறது என்று தெரியவில்லை.”
அந்த வேடிக்கையை அவள் புரிந்து கொண்டாள். தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பயங்கரத்தைப் பற்றிய அச்சமும் சிறிது நேரத்துக்கு அவளைவிட்டு அகன்றது. பல வருடங்களாக அவனுடன் நெருங்கிப் பழகியதைப் போன்ற பிரமை. நீண்ட நாட்க ளாகவே அவனுன் ஒன்றாக வாழ்ந்து விட்டதைப் போன்ற எண்ணம். கணநேரப் பழக்கம் அவளை எப்படியெல்லாமே கற்பனை செய்ய வைத்துவிட்டது.
“சிறிது நேர்த்திற்கு முன்னால் வரையில் இந்த உலகத்தில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்திருந்தேன். வாழ்க்கையை கடலோடு முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவும் ஏற்பட்டிருந்தது.இப்பொழுது தான் ஏனோ வாழவேண்டும் என்ற அற்ப ஆசை உண்டாகிறது” என்று அவள் சொல்லிவிட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள்;
அவளுடைய ஏழ்மைத் தோற்றம் – பரிதாப நிலைமை – அன்பு செறிந்த பார்வை ஆகியவை அவனைக் கவர்ந்தன. அவளுக்கு தன்னால் இயன்ற முழு உதவிகளையும் செய்யவேண்டும் என்று மனப் பூர்வமாக எண்ணினான்.
முதல் வேலையாக அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பசியைப் போக்கினான். தேவையான துணிமணிகளையும் கடனுக்கு வாங்கிக் கொடுத்தான்.
அத்துடன் நின்றுவிடாமல் ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்துக்கு வந்து யாருக்கேர் டெலிபோன் செய்தான்.
மீனா வெளியே நின்றவாறு அவன் என்ன செய்கிறான் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
“குட்மார்னிங் மாலினி, நான்தான் ராஜாமணி பேசுகிறேன். உங்களிடமிருந்து எனக்கு. உதவி தேவைப்படுகிறது. செய்யமுடியுமா?” என்று டெலிபோனில் கேட்டான் ராஜாமணி.
“உதவியா? உங்களுக்கா…? நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். செய்து முடிக்கத் தயாராக இருக்கிறேன்.” என்று மறுமுனையிலிருந்து ஒரு பெண் இனிமையாகப் பேசும் குரல் கேட்டது.
அவன் எதிர்பார்த்த மாலினி தான் டெலிபோனில் பேசினாள்.
“உடனே என் ரூமுக்கு வருகிறீர்களா?” என்று அவன் அவசரப்பட்டான்.
“உங்கள் ரூமுச்கா? ஏன்?”
“ரொம்பவும் அவசரம். நீங்கள் வர முடியுமா? முடியாதா?”
“அந்த அவசரமான விஷயத்தை டெலிபோனில்தான் பேசுங்களேன்.”
“நேரில்தான் சொல்ல வேண்டும். டெலிபோனில் பேசினால் ஐந்தாம் படையைச் சார்ந்த யாராவது ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.”
“ஓகே. பத்து நிமிஷத்தில் உங்கள் ரூமில் நான் இருப்பேன்…”
“தாங்க் யூ மாலினி.”
அவன் ரிசீவரைக் கொக்கியில் தொங்கப் போட்டுவிட்டு கீழே இறங்கி வந்தான்.
“மீனா, உன்பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டக் காற்று- வீசத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். மாலினி பெரிய இடத்துப்பெண் அவள் மனது வைத்தால் உனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும்.”
“மனது வைப்பார்களா?”
“என்மேல் அவளுக்கு எல்லையற்ற அன்பு உண்டு. அதனால் நிச்சயம் உனக்கு உதவி செய்வாள் என்று நம்புகிறேன்.”
ராஜாமணி அவளை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றிவிட்டு அவளுக்கு முன்னால் சைக்கிளில் ஏறிச்சென்றான்.
அவனுடைய சிறிய வீடு: நாற்புறமும் மரம் செடிகளுடன் கூடிய தோட்டத்தினுள் இருந்தது. மாதம் எழுபது ரூபாய் வாடகை. குறைந்த வருமானத்தை வைத்துக்கொண்டு அங்கே எளிய முறையில் வாழ்ந்து வந்தான் ராஜாமணி.
கிராமச் சூழ்நிலையைக் கொண்ட அந்த வீடு மீனாவுக்கு நன்றாகப் பிடித்துவிட்டது.
“இந்த வீட்டில் ஏழு ஆண்டுகளாகக் குடித்தனம் இருக்கிறேன்.” என்று சொன்னான் ராஜாமணி, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் உட்கார்ந்து கொண்டே.
எதிரில் கிடந்த பெஞ்சின்மீது மீனா, அவன் வற்புறுத்தியதின் பேரில் அமர்ந்திருந்தாள்.
அவள் வீட்டை நன்றாக ஆராய்ந்தாள். எந்தப்பேரும் சீராக இருக்கவேண்டிய இடத்தில் வைக்கப்படவில்லை – அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்து கிடந்தன.
மீனா எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “உங்கள் மனைவி வீட்டில் இல்லையா?” என்று கேட்டாள்.
தாயாரின் மறைவு நெஞ்சை அடிக்கொருதரம் அழுத்திக் கொண்டிருந்தபோதிலும், ராஜாமணியிடம் ஏற்பட்டிருந்த புதிய நட்பு வேதனையின் பளுவை ஓரளவு குறைப்பதற்கு உதவியாக இருந்தது.
“என் மனைவியா? இன்னும் கொஞ்ச நேரம் போனால் நாலைந்து குழந்தைகளுக்கு அப்பா என்று சொல்வாய் போலிருக்கிறதே! நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி யாரிடம் பெண் கேட்டாலும் கொடுப்பதற்கு மறுத்து விடுகிறார்கள்.” என்று வேடிக்கையாக அவன் சிரித்தான்.
அவன் கல்யாணமானவன் என்பதைத் தெரிந்து கொண்ட தும் மீனா, முதல் வேலையாக எழுந்து அறையைச் சுத்தம் செய்து, எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கவேண்டுமோ, அங்கெங்கே எடுத்து வைப்பாள். அவன் தடுத்தும் கேட்கவில்லை
அவள் பின்புறத்தில் முகத்தையும் கைகளையும் கால்களையும் அலம்பிவிட்டு முன் ஹாலுக்கு வந்தபோது சிரித்த முகத்துடன் ஒரு நாகரீகப் பெண்மணி வந்துகொண்டிருப்பதைக் கண்டு ஏனோ திடுக் கிட்டாள்
இந்தப் பெண்ணின் பெயர்தான் மாலினியா? பணக்கார வீட்டுப்பெண் என்று ராஜாமணி சொன்னது இவளைத்தானா?
“ஹலோ மாலினி கமின் சொன்னதைப் பொலவே தவறாமல் வந்து விட்டீர்களே!” என்று ராஜாமணி சொன்னதும், வந்திருப்பவள் மாலினிதான் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டாள் மீனா?…
அவள் மீனாவைக் கண்டதும் ஒன்றும் பேசத்தோன்றாதவளாக அப்படியே நின்றாள். சிரிப்புடன் கூடிய முகம் திடீரென்று களையிழந்து விட்டது.
பிறகு அவள் உதடுகளில் குறும்புத்தனமான புன்னகை மலர்ந்தது. ”மிஸ்டர் ராஜாமணி, எங்களை எல்லாம் திகைப்பில் ஆழ்த்தவேண்டும் என்பதற்காகத்தான் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்து கொண்டீர்கள் போலிருக்கிறது.”
ராஜாமணிக்கும் அதிர்ச்சி. அதைப்போன்றநிலை மீனாவுக்கும்.
அவன் சற்றும் தாமதிக்காமல், “மீனா. நீங்கள் காத்துக் கொண்டிருப்பது தவறு. நான் அன்றைக்கும் பிரமச்சாரி – இன்றைக் கும் பிரமச்சாரி. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. இந்தப் பெண்ணுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு டெலிபோன் செய்து வரவழைத்தேன்” என்று சொன்னான்.
அவன் நிலைமையை விளக்கியதும் மாலினி ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, “ஐ ஆம் கோ சாரி… மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு என் மனத்தில் பட்டதைச் சொல்லிவிட்டேன்.” என்று சொன்னாள்.
அவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடிகள்தான் என்பதை மீனாவின் உள்ளுணர்வுகள் ஏற்றுக்கொண்டன. அவர்கள் மனப்பூர்வமாக ஒருவரையொருவர் காதலிக்கும் காதலர்களாகத்தான் இருக்கச் கூடும் என்று நம்பினாள்.
ராஜாமணி அவனிடம் மீனாவின் நிலைமையை விளக்கிவிட்டு, “நீங்கள் மனது வைத்தால் உங்கள் ஊறுகாய் கம்பெனியிலேயே ஏதாவது வேலைபோட்டுக் கொடுக்க முடியும்.” என்று சொன்னான்.
“எங்கள் ஊறுகாய் கம்பெனியிலா? நன்றாக யோசனை செய்து பாருங்கள். சித்தப்பா பெரும்பான்மையான நேரங்களில் மனிதனாகவே இருக்கமாட்டார். அவர் தொடர்பு வைத்திருக்கும் கூட்டாளிகளில் யாருமே நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே என்னுடைய கருத்து”.
அவள் இப்படிச் சொன்னதும் ராஜாமணி சிரித்துக்கொண்டு, “கம்பெனிக்கு நீங்கள்தான் எஜமானி என்பதை மறந்துவிட்டீர்களா?” என்று நினைவுபடுத்தினான்.
“எதையுமே நான் மறக்கவில்லை. ஆனாலும் நிர்வாகம் சித்தப்பாவின் கையில் இருக்கிறதே என்றுதான் யோசிக்கிறேன்.” என்று சொன்ன மாலினி ஒரு யோசனை செய்தாள்.
மீனா நேராகவே சென்று அவளுடைய சித்தப்பா குபேரனைச் சந்தித்து வேலை கேட்கவேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம், தேவை என்றால் சிபாரிசு செய்வதற்கும் அவள் தயாராகவே இருந்தாள்.
அவளுடைய எண்ணங்களை ராஜாமணியும் வரவேற்றான். ஒப்புதலும் கொடுத்தான்.
அன்றிரவு மீனா அவனுடைய அறையிலேயே தங்கினாள்; அவளுக்குத் தன்னால் எந்தவிதமான களங்கங்களும் வரக்கூடாது என்பதற்காக ராஜாமணி வெளியே திண்ணையிலே படுத்துக்கொண்டான்.
இரவு முழுவதும் மீனா பயமின்றி தூங்கினாள். கடுமையான அசதியும், ராஜாமணி எநேநரமும் உதவி செய்யத் தயாராக இருக்கி றானே என்ற தெம்பும்தான் அவளுடைய அமைதியான தூக்கத்திற்குக் காரணம்.
அவள் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகமிகக் கடுமையான அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டாள். மனத்தைத் தேற்றிக் கொள்ளவும் செய்தாள்.
மறுநாள் பத்துமணிக்கு ராஜாமணி கொடுத்திருந்த விலா சத்தையும் கையில் எடுத்துக்கொண்டு நேராக ஊறுகாய் கம்பெனிக்கு வந்தாள். தனக்கு வேலை கிடைக்க அவள் வேண்டாத தெய்வங்களே இல்லை.
வெளியே பெரிய இம்பாலா கார் நிறுத்தப்பட்டிருந்தது.
மாலினியாவது, அவளுடைய சித்தப்பா குபேரனாவது அங்கே வந்திருக்கலாம்.
காம்பவுண்டினுள் நுழைந்ததும் காவலுக்கு நின்று கொண்டிருந்த கூர்க்கா ஓடிவந்து, “ஜாவ்…ஜாவ்…” என்று கத்தினான்.
“எனக்கு இந்தி தெரியாது. தமிழில் சொல்லுங்கள்.” என்றாள் மீனா. இதைப்போன்ற கம்பெனிகளில் அல்சேஷியன் நாய்களுக்குப் பதில் கூர்க்காவினரைத்தானே நிறுத்தியிருக்கிறார்கள்,
“பொம்பல…என்ன வேண்டும்?” என்று அவன் இப்பொழுது தமிழை எப்படி யெல்லாமோ வளைத்துக்கொண்டு கேட்டான்.
“மாலினி அம்மா என்னை இங்கே வந்து பார்க்கும்படிச் சொல்லியிருக்காங்க… அதனால் தான் வந்தேன்.” என்று மீனா சொன்னாள்.
அப்பொழுது ஒரு தடியன் உள்ளேயிருந்து ஓடிவந்து, “எஜமான் கூப்பிடுகிறார், வா உள்ளே…” என்று அழைத்தான்.
கூர்க்கா அவனுக்கு ஒரு கும்பிடு போட்டான். அவனுக்கும் இங்கே அதிகச் செல்வாக்கு உண்டுபோலும்.
அவன் தன்னுடைய பெயரை மூக்கன் என்று அறிமுகம் செய்து கொண்டான். “ஆனால் என்னை எல்லோரும் கோட்டு கோதண்டம் என்றுதான் சொல்வானுங்க.”
“கோட்டு கோதண்டமா? ஏன்?” அவனிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் ஒருவேளை பலன் ஏதாவது கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது.
“ரௌடி பசங்களிலேயே நான் தான் இதன் முதலில் கோட்டு கோதண்டம். கோட்டு கோதண்டம்னு சொல்ராங்க.”
“நீங்கள் ரௌடியா?”
அவள் பயந்து விட்டாள். ரௌடி என்று தன்னை பிரமாதமாக விளம்பரம் செய்து கொள்ளும் ஒருவன் நம்பி அவன் பின்னால் எப்படிச் செல்ல முடியும்?
இது உண்மையான ஊறுகாய் கம்பெனிதானா? அல்லது ரௌடிகளின் ஓயாத மடமா?
“ரௌடி என்று சொன்னதுமே பயந்து விடாதே கண்ணு. நான் இப்பொழுது மகா நல்லவன். கோட்டு கோதண்டம் கதையை நீ கேக்கலியே…ஒருநாள் சைதாப்பேட்டையிலே பெரும் கலாட்டா ஒருத்தன். சோடாப்புட்டிகளை எடுத்து ‘சர்சர்’னு வீசிக்கினே இருந்து இருந்தான். யாருமே அவன் பக்கத்தில் போகலே. ஆனால் நான் தெனாவிட்டா ரேக்ளா வண்டியிலே ஏறிப் போனேன், பறந்து வந்த சோடாப்புட்டிகளை எண்ணிக்கினே நின்னேன். பார்த்தானுக நம்ப பசங்க. இவருல்லே பெரிய வாத்தியார்னு நினைச்சு சொந்தமாகவே ஒரு கோட்டை வாங்கி எனக்கு மாட்டிவிடடுட்டானுங்க. அன்னையிலே நான் கோட்டு கோதண்டம்”
அவன் தன்னுடைய பெருமைகள் எல்லாவற்றையுமே வரிசையாக எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
“நான் உங்களை கோட்டு. கோதண்டம் என்று கூப்பிடலாம் அல்லவா?”
வாழ்க்கையில் நொந்து நொறுங்கிய பின்பு எப்படி வேண்டுமானாலும் நெளிந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை அவள் பெற்றிருந்தாள்.
“சீக்கிரமாக நான் இந்தக் கோட்டையே களற்றி எறிந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நீ என்னை மூக்கன் என்றே சொல்லலாம்”.
அவளை மூக்கன் அழைத்துச் சென்று சுழல் நாற்காலியில் மீசையைத் திருகியவாறு உட்கார்ந்திருந்த குபேரனிடம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு, “பாவம், சின்னப்பொன்னு ஏதாவது வேலை. போட்டுக் கொடுங்க.” என்று சொன்னான்.
அவன் பேசிய தோரணை மிரட்டுவதைப் போலிருந்தது.
குபேரன் கோட்டும் சூட்டும் அணிந்து பணத்திலேயே செழித்து வளர்ந்த ஆடம்பர மனிதராகக் காணப்பட்டார். ஐம்பது வயதைக் கடந்துவிட்ட அவர், இன்னும் இளமை குறைவில்லை என் பதை எடுத்துக் காட்டும் விதத்தில் அலங்காரம் செய்திருந்தார்.
அவர் நின்றுகொண்டிருந்த மீனாவை உன்னிப்பாகக் கவனித்தார். உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையில் அணுஅணுவாக ஆராய்ந்தார். பிறகு கறுத்த உதடுகள் இலேசாக நெளிந்தன.
“என்ன வேலை போட்டுக் கொடுத்தாலும் செய்வாய் அல்லவா” அவர் இப்படிக் கேட்டதும், தனக்கு வேலை கிடைக்குமோ, டைக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்த மீனா நம்பிக்கையுடன் நிமிர்ந்து பார்த்தாள். அந்த விநாடி முதல் வேலையை ஒப்புக் கொண்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவதைப் போன்ற பிரமை.
“நிச்சயமாகச் செய்வேன். சொல்லுங்கள் அய்யா.” என்று அவள் ஆர்வத்துடன் துடித்தாள்.
“நாங்கள் என்ன சொன்னாலும் அனுசரித்து நடந்துகொள்வாய் அல்லவா?”
அவர் ‘அனுசரித்து’ என்று சொன்னதின் உட்பொருள் அவளுக்கு விளங்க வில்லை. ஆனாலும் அவள் வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன், “நீங்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்வேன்.” என்று சொன்னாள்.
“கோட்டு.. போய் பத்திரங்களை எடுத்துக்கொண்டு வா. முதலில் எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கிக்கொள்.”
கோட்டு கோதண்டம் என்ற மூக்கன் பத்திரங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் மீனாவின் கையெழுத்தை வாங்கிக் கொண்டான்.
அவன் போனதும் குபேரன் தன் மீசையைத் திருகிக்கொண்டு “உன்னை பாக்கில் டிப்பார்ட்மெண்டில் போட்டிருக்கிறேன். பொறுப் டன் நடந்துகொள்ள வேண்டும்.” என்று சொன்னவர், “சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
“நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதைத் தரலாம்.” என்றாள் மீனா. வேலை கிடைத்துவிட்டதில் அவளுக்கு ஒருவித மன நிம்மதி இருந்தது. இனிமேல் வாழ்நாட்களை நிம்மதியுடன் கடத்திச் செல்லலாமே!
“சம்பளம் முன்னூறு ரூபாய். தங்குவதற்கு இலவசமான வீடு. வழக்கம்போல் போனஸ்களும் உண்டு.”
அவர் இப்படிச் சொன்னதும் தன்னுடைய காதுகளையே நம்ப முடியாமல் திணறினாள் மீனா.
எடுத்த எடுப்பிலேயே சென்னையில் இத்தகைய வசதிகள் கிடைப்பது என்றால்…?
முக்கன் கோட்டை இழுத்துச் சரிசெய்துகொண்டு அங்கே வந்தான்.
“ஏய் கோட்டு… இவளை அழைத்துக்கொண்டு உள்ளே போய் வேலை செய்யும் இடத்தைக் காட்டு. இதோ நானும் நொடிப்பொழுதில் வந்துவிடுகிறேன்.” என்று சொன்னார், குபேரன்.
“வாம்மா கண்ணு.” என்று கோட்டு கோதண்டம்—அதாவது மூக்கன் என்ற பெயரைக் கொண்டவன் சொல்லிவிட்டு முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போனான்.
மீனா தனக்கு வேலை கொடுத்து ஆதரிக்கும் குபேரனை நோக்கிப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு அவன் பின்னால் சென்றாள்.
மலர்ந்த முகத்துடன் குபேரனும் போனார்.
அப்பொழுது பொறியினுள் வைக்கப்பட்டிருக்கும் தேங்காய் துண்டை நோக்கிச் செல்லும் எலியின் கதி தன்னுடையது என்பதை மீனா எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டாள்.
5. கொடூரமான தண்டனை!
உள்ளே பல பெண்கள் வரிசை வரிசையாக உட்கார்ந்து ஊறுகாய்களை புட்டிகளில் அடைக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தார்கள்.
“உனக்கு இந்த செக்ஷனில் வேலை இல்லை. உன்னை நாங்கள் ஸ்பெஷல் ஊறுகாய் பிரிவில் போட்டிருக்கிறோம். அந்த செக்ஷனுக்கே நீதான் தலைவி.” என்று பெருமையுடன் சொன்னான், கோட்டு கோதண்டம் என்ற மூக்கன்.
முன்னால் போய்க்கொண்டிருந்த மீனா புரியாமல் விழித்த போதிலும் விளக்கமாக எதையும் கேட்க விரும்பவில்லை எந்த வகை யிலாவது வேலை என்று கிடைத்தால் போ ம். ராஜாமணிக்காகவா வது சில நாட்கள் வாழவேண்டும் போலிருந்தது.
கடைசியாக மற்ற அறைகளோடு புெ இல்லாத பாதாள அறை ஒன்றிருந்தது. அங்கே அவளை அழைததுச் சென்றார்கள்.
அந்த அறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அங்கே இருந்த ஆண்களும் பெண்களும்கூட அப்படியேதான் இருந்தார்கள். பார்ப்பதற்கு அது வேறு ஓர் உலகம்.
“உனக்கு இங்கேதான் வேலை.” என்று குபேரன் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவன் பரபரப்புடன் ஓடிவந்து “மங்காத்தாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவளை என்ன செய்வது?” என்று கேட்டான்.
மீனா அபாயத்தில் வந்து சிக்கிக் கொண்டவன் போல் என்ன செய்வது என்று தோன்றாதவளாக விழித்தக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு பயங்கரம் நடக்கப் போவதைப் போலவே தோன்றியது.
“அந்த கழுதையை இங்கே தூக்கிக் கொண்டு வாருங்கள். என்னவென்று பார்த்துவிடுவோம்.”
குபேரன் முகம் எப்பொழுதும் போல் களையாக இல்லை. நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கும் ஓநாயாகவே அந்த முகம் தோன்றியது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் இரண்டு தடியர்கள் கொடி போன்ற இளம்பெண் ஒருத்தியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள் அவளுடைய அழகிய உடல் கரை மீன் போல் அவர்களுடைய வலிமை பொருந்திய கைகளின் நடுவே கிடந்து துடித்துக்கொண்டிருந்தது.
மீனா செயலற்றுப்போய் நின்றுகொண்டிருந்தாள். இதுவரை யிலும் அவள் அனுபவித்தறியாத பயம் நெஞ்சைத தாக்கியது.
இந்தப் பெண்ணை இவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ? குபேரனின் முகம் இன்னும் கொடூரமாக மாறியது. அந்த முகத்தை அவளால் பார்க்கவே முடியவில்லை.
அவளை தடியர்கள் கீழே இறக்கிவிட்டார்கள்.
அவள் ஊளையிட்டாள். தலைமுடிகளைக் கலைத்துக்கொண்டும், ஜக்கட்டைக கீழித்துக்கொண்டும் ஆர்ப்பாட்டம் செய்தாள். பலவிதமான குரல்களில் பாட்டுப் பாடினாள் திடீரென்று நடனமும் ஆடினாள். அவனை இன்னும் கூர்மையாக பக்கத்தில் போய் நினறு கொண்டு ஆராய்ந்த குபேரன், “உனக்கு உண்மையிலேயே பைத்தியம் தானா?” என்று கேட்டார்.
அவள் பதில் சொல்லாமல் குரலை உயர்த்திக்கொண்டு பாட்டுப் பாடினாள். பலவிதமான சிரிப்பொலிகளைக் கிளப்பினாள்.
“இவளுக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது எஜமான்.” என்று உறுதி செய்தான் கோட்டு கோதண்டம் என்ற மூக்கன்.
“அப்படியா? இவளுக்குப் பிடித்திருப்பது உண்மையான பைத்தியமா, போலிப் பைத்தியமா என்பதை நாம் வேதனையின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவளை நம்முடைய சோதனை அறைக்குக் கொண்டு போங்கள்.”
குபேரன் கட்டளைக்கு மறுப்பு இருக்க முடியுமா?
அவளை மறுபடியும் தடியர்கள் பந்துபோல் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
“மீனா நீயும் வா… இதைப் போன்ற காட்சிகளை நீயும் நேரிலேயே பார்ப்பது நல்லது. அப்பொழுதுதான் ஒரு விதப் பயம் இருந்துகொண்டே இருக்கும். கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் என்ற அக்கறையும் உண்டாகும்”
குபேரன் பயமுறுத்துவதைப்போல் சொல்லிவிட்டு மீனாவையும் அழைத்துக்கொண்டு பக்கத்து அறையினுள் நுழைந்து நெல் வேக வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மின்சார அடுப்பையுu, அதன் மேல் வைக்கப் பட்டிருக்கும் பெரிய அண்டாவினுள் ஒரு நபர் தாராளமாக மூழ்கிக் குளிக்கமுடியும்.
அண்டாவின் பெரும்பகுதி தண்ணீர் நிரப்ப பட்டிருந்தது. அந்தத் தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது.
”மீனா… நீ அப்பளம் பொரிப்பதைப் பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன். இப்பொழுது இங்கே ஒரு மனித அப்பளத்தையும் பொரித்தெடுக்கப் போகிறோம்” என்று குபேரன் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும் தன்னை யாரோ கொதிக்கும் தண்ணீரில் தூக்கிப் போட்டுவிட்டதைப் போன்ற பீதியை மீனா அனுபவித்தாள். அவள் துடித்துப்போய்விட்டாள். ஏதோ பேசவேண்டும் என்று நினைத்த போதிலும் வார்த்தைகள் தொண்டைக்கு மேல் வர மறுத்துவிட்டன.
தடியர்கள் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து ‘பரபர’ என்று இழுத்து வந்தார்கள்.
உள் பாவாடை- மார்புக்கச்சை ஆகியவை மட்டுமே அந்தப் பேதையின் மானத்தை மறைப்பதற்கு உதவின.
சந்தன நிறத்தைக்கொண்ட அவள் உடல் துடிதுடியாய் துடித்தது. மரணத்தின் கோரத்தைக் கண்டு அஞ்சினாள். இதுவரையிலும் அவளை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த பைத்தியம் எப்படி எங்கே மறைந்ததா என்று தெரியவில்லை.
“ஏ குட்டி… உண்மையிலேயே உனக்குப் பைத்தியம்தானா? எங்கள் எல்லோரையுமே நீ இளிச்சவாயர்கள் என்று நினைத்து விட்டாயா? உண்மையைச் சொல்.” என்று குபேரன் குழங்கினான். அந்தப் பாதாள அறையினுள் வைத்து என்னென்ன அக்கிரமங்கள் நடந்தாலும் ஏன் எதற்கு ஈன்று தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லையே. தட்டிக் கேட்க நினைத்தாலேயே அவர்கள் உயிர்நாடியைத் தட்டி எடுத்துவிடுவானே!
அந்தப் பெண்மணி அலறித் துடித்தவளாய், “எனக்குப் பைத்தியமே இல்லை. சும்மா தமாஷ் செய்யவேண்டும் என்பதற்காக பைத்தியம் பிடித்திருப்பதைப்போல் நடித்தேன். என்னை மன்னித்து விடுங்கள். இன்றைக்கு ஏப்ரல் முதல் தேதி அல்லவா?” என்று சிரித்துவிட்டு சாகஸ வித்தைகள் பல காட்ட முயன்றாள்.
எந்த வித்தையுமே அவரிடம் எடுபடவில்லை. அவர் அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, “”ஓ… ஏப்ரல் முட்டாள் ஆக்கலாம் என்று பார்த்தாயா? இப்பொழுது நாங்களும் உன்னை ஏப்ரல் முட்டாள் ஆக்குகிறோம்.” என்று சொன்னவர், “இவளைத் தூக்கி தொட்டியில் போடுங்கள்.” என்று உறுமினார்.
மீனா நிலை கொள்ளாமல் தவித்தாள். இந்தக் கோரத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவா இங்கே வேலைக்கு வந்திருகிறாள்?
“நான் வெளியே போய் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கே இருந்தால் திடீர் என்று மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.” என்று பதறினாள்.
“பயப்படாதே… உன் உயிரைப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. நீ இதைப் போன்ற வேடிக்கையான காட்சிகளை நேரடியாகவே பார்த்து மகிழவேண்டும்” என்று கூறி அவளை வெளியே போகவிடாமல் தடுத்தார், குபேரன்.
அந்தப் பெண்ணை முரடர்கள் தூக்க எத்தனித்ததும் அவள் விலாங்கு மீனைப்போல் நழுவி ஓடிவந்து அவருடைய கால்களில் விழுந்து அப்படியே தாவிப் பிடித்துக் கொண்டு கதறினாள்.
“முதலாளி… என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்றைக்கு மே நான் தவறு செய்யமாட்டேன்.”
“இன்றைக்கு ஏன் அப்படி நடந்துகொண்டாய்? உன்னுடைய மன மாற்றத்துக்கு யார் காரணம்”
“யாரும் அல்ல; இங்கிருந்து ஓடியிடலாம் என்ற எண்ணத்துடன் நானாகவேதான் பைத்தியம் பிடித்தவள் போல் நடித்தேன்.”
“எனக்கு கண்டபடியெல்லாம் நடிக்கிறவர்களைப் பிடிக்காது. உன்னைப்போன்ற சபல புத்தி படைத்த பெண்கள் உயிரோடு இருந் தால் அதனால் எங்களுக்குத்தான் ஆபத்து உண்டாகும். அதனால் உன்னை இப்பொழுது அப்பளம்போல் பொரித்துவிடப் போகிறோம். இன்னும் சிறிது நேரத்தில் உன் அழகிய உடல் அகோரமாக மாறி விடும். ஒன்றை மட்டும் நீ சாவதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் உயிர் வாழவே முடி யாது. அவர்களுடைய மரணம் மிகமிகக் கொடூரமானதாக இருக்கும். ”
இப்படி உறுமிய குபேரன் வியர்வையால் நனைந்தவாறு நின்றுகொண்டிருக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கொக்கரித்தான்.
அவள் இன்னும் கால்களை விடவில்லை. கெட்டியாகப்பிடித்துக் கொண்டு உயிருக்காக மன்றாடினாள். வாழவேண்டும் போன்ற துடிதுடிப்பு ஒவ்வொரு அசைவுகளிலிருந்தும் பிரதிபலித்தது.
ஆனால் குபேரன் அவளுக்காக இரக்கம் காட்டவேண்டுமே! காலைக் கவ்விக்கொண்டிருந்த அவளை உதறித் தள்ளிவிட்டு, நிமிர்ந்து பார்த்தார்.
அவள் அலங்கோலமான நிலையில் தூரத்தில்போய் உருளைக் கிழங்குபோல் கிடந்தாள்.
“இன்னும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? தூக்கிப்போடுங்கள். வடைபோல் சுட்டு எடுங்கள்.”
குபேரன் இப்படிச் சொன்னதும் தடியர்கள் இருவரும் அவளுடைய கைகளையும் கால்களையும் ஜோடி ஜோடியாக இணைத்துக் கட்டினார்கள்.
அவள் துள்ளினாள் – துடித்தாள் – துவண்டாள். தன் உயிரைக் பாதுகாத்துக் கொள்ளப் போராடினாள். வாய் விட்டுக் கதறினாள். “இனிமேல் தப்பே செய்யமாட்டேன்.” என்று மன்றாடினள்.
ஆனால் எதுவுமே அவர் காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் வெறித்தனம் கொண்டவராக பொங்கிக் கொண்டிருந்தார். அவள் கோரமான முறையில் சாடும் காட்சியைப் பார்த்தாலன்றி வேறு வேலை ஓடாது என்றநிலை ஏற்பட்டது.
அவள் கதறக் ககுறத் தூக்கிக்கொண்டு போனார்கள்.. அவள் நெளிந்தாள்.துள்ளினாள். குதித்தாள்.
அண்டாவில் உள்ள தண்ணீர் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆவி பறந்த வண்ணம் இருந்தது.
மீனா கொதிக்கும் நீரில் இறக்கப்போகும் பெண்ணைப் பார்க்க முடியாதவளாக நிலைதடுமாறினாள்.
அதே நேரத்தில் தடியர்கள் இருவரும் அந்தப் பெண்ணை அப்படியே தூக்கி கொப்பரையில் போட்டார்கள். கொதிக்கும் நீர் சிதறி அடிக்க வீறிட்டு அலறினாள் அவள்.
கண் இமைக்கும் நேரம்தான்.
ஆவி அடங்கியது. உடலெங்கும் பொரிக்கப்பட்ட அப்பளங்கள் போல் புடைத்துக்கொண்டு தள்ளின. அவள் உடல் வெந்த நிலையில் அகோரமாக இறந்து கிடந்தாள்.
அந்தக் கோரக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மீனாவுக்கு நெஞ்சு வெடித்துவிட்டதைப் போலிருந்தது. அவள் மயக்கமடைந்த நிலையில் அப்படியே சாய்ந்து விழுந்தாள்.
6. கயவர்களின் வேட்டை !
மீனா மறுபடியும் கண்விழித்துப் பார்த்தபோது ஏர்கண்டிஷன் அறையினுள் படுத்துக் கிடப்பதை உணர்ந்தாள். ஒரு பெண் அகோர மான முறையில் கொல்லப்பட்ட காட்சியை நேருக்கு நேராகப் பார்த்து விட்டதால் அவள் அதிர்ந்து போயிருந்தாள்.
”மீனா.. பயப்படாதே… இங்கேயுள்ள சில பெண்களுக்கு நல்ல புத்தி சொல்லிக் கொடுக்கவேண்டும். எனபதற்காகவே அவளுக்கு இப்படியொரு சிறு தண்டனையைக் கொடுத்தேன்.” என்று குபேரன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் சிரித்துக்கொண்டே சொன்னார்.
அவள் எழுந்து உட்கார்ந்தாள். சிறு தண்டனையாமே அது! பதினெட்டு வயதுகூட நிரம்பாத ஒருத்தியை அப்படியே கொதிக்கும் நீரில் தூக்கிப் போட்டு பதைக்கப் பதைக்கக் கொல்வதற்குப் பெயரா சிறு தண்டனை? இதை விடவும் ஈவு இரக்கமற்ற கோர மரணம் வேறு எதுவும் இருக்க முடியாதே!
மீனா எதிரில் இருப்பது தன்னுடைய முதலாளி குபேரன் என் புதைத் தெரிந்துகொண்டதும சட்டென்று கட்டிலைவிட்டுக் கீழே இற்றஙகித் தரையில் உட்கார்ந்தாள்.
“பரவாயில்லை, உனக்கு நான் அடுத்த ஸ்தானம் கொடுக்க நினைப்பதால் எழுந்து கட்டிலில் உட்காரலாம் நமக்குள் எந்தவித மான ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது.” என்று அவர் சொன்னார்.
அவள் அங்கிருந்து எழுந்திருக்கவேண்டுமே! இடுப்பு ஒடிந்து விட்டதைப்போல் அல்லவா ஆகிவிட்டது, இப்படியொரு கொடூரமான காட்சியை நேரிலேயே பார்க்க நேரிடும் என்று அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையே.
“நான் சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்வீர்களர்?”. மீனா தான் பரிதாபமாக இப்படிக் கேட்டாள். ஏற்கனவே இறந்துபோன பெண் இன்னும் நீனைவுத்திரையில் வந்தல்லவா பயமுறுததுகிறாள்.
“நியாயமான எதற்கும் என்னிடமிருந்து கோபத்தை எதிச் பார்க்க முடியாது. மொத்தத்தில் நான் லாபம் சம்பாதிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.”
அவருடைய எண்ணம் மிகவும் தெளிவாக வெளிப்பட்டது.
அவள் தட்டுத் தடுமாறிய போதிலும் எப்படியும் பேசித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன், “எனக்கு வேலையே வேண்டாம். நான் ஊருக்கே டோய் விடலாம் என்று நினைக்கிறேன்.” என்று சொன்னாள்.
அவ்வளவுதான்! குபேரன் ‘ஹா ஹா..’ என்ற அட்டகாசமான சிரிப்பொலியுடன் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானார்.
“பைத்தியக்காரப் பெண்ணே! நீ எப்பொழுது பத்திரங்களில் கையெழுத்துப் போட்டாயோ, அந்த விநாடி முதல் நீ எங்களில் ஒருத்தியாகிவிட்டாய். இங்கே நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத் தட்டாமல் வேலை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது. இதில் எதையாவது மீறினால் சிறிது நேரத்திற்கு முன்னால் ஒரு பெண் எப்படிச்செத்தாளோ, அதே முறையில் உன்னையும் பொரித்து எடுக்கப்படும்”
என்னமாதிரியாக அவர் உறுமிவிட்டார். விசித்திரமான ஆள் விழுங்கி மிருகம் ஒன்று ஊளையிடுவதைப் போலவே அது இருந்தது.
அவள் தன்னுடைய நிலையைப் புரிந்து கொண்டவளாய், “நீங்கள் என்னைக் கொல்ல விரும்பினால் தாராளமாகக் கொல்லலாம்” என்று சொன்னாள்.
உடனே அவர் கொடூரமாக நகைத்துவிட்டு, “பேதைப் பெண்ணே! உன்னோடு மட்டும் நான் கதையை முடித்துக்கொள்வேன் என்று எதிர்பார்க்கவேண்டாம். உனக்கு ஒருவன் உதவி செய்கிறான் அல்லவா? அவனைத்தான் அச்சாரமாக முதல் பலிகொடுப்பேன்: அவன் – சாகத்தான் வேண்டும் என்றால் உன் விருப்பப்படி செய்யலாம்.” என்று ஊளையிட்டான்.
தன்னால் — தனக்காக இன்னொரு மனித உயிர்பலி ஆவதா? வேண்டாம். வேண்டாவே வேண்டாம்…
அவள் தன்னை எந்தச் சூழ்நிலைக்கும் தயார்படுத்திக்கொண்டு “நீங்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்கிறேன். உங்கள் சொற்படி நடக்கிறேன். ஆனால் நல்ல இதயம் படைத்த ராஜாமணிக்கு மட்டும் எந்தவிதமான தீங்கும் செய்துவிடாதீர்கள்.” என்று கதறினாள்.
அவளுடைய பலவீனம் எங்கே இருச்கிறது என்பதை குபேரன் கண்டுபிடித்துவிட்டார். இனிமேல் அவருக்கு கவலையே இல்லை. அவளை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்க முடியும்.
அவள் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, ஒரு கிளாஸ் தண்ணீரும் குடித்துவிட்டு தனக்கிடப்பட்ட வேலையைச் செய்வதில் முனைந்தாள்.
மாலையில்
வெளியே அவளுக்காக ராஜாமணி ராஜாமணி சைக்கிளில் காத்துக் கொண்டிருந்தான்.
சரியாக ஆறு மணிக்கு மீனா வெளியே வந்தாள். அவன் உயிரை பயங்கரவாதிகள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக தன்னுடைய முகத்தை மிகவும் தெளிவாக வைத்துக்கொள்ள பகிரதம் பிரயத்தனம் எடுத்துக்கொண்டாள்.
அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்து, “மீனா வேலை கிடைத்துவிட்டதல்லவா?” என்று கூவினான்.
தனக்குக் கிடைத்திருக்கும் ‘அந்த’ வேலையை எப்படி வெளியே சொல்ல முடியும்? சொன்னால் குபேரன் அதைக் கேட்டு வாலை மடக்கிக் கொண்டு சும்மா இருப்பானா?
அவள் தன் மன்த்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அதிர்ஷ்டவசமாக எனக்கு வேலை கிடைத்து விட்டது.” என்று சொன்னாள்.
“ரொம்ப ரொப்ப சந்தோஷம்… முதலில் உன்னுடைய பாராட்டுதல்களை மாலினிக்குத் தெரியப்படுத்து.” என்று அவன் சிரித்துவிட்டு அழைத்துச் சென்றான்.
இரண்டு பேர்களும் மனப்பிடிப்புடன் கூடிய பல விஷயங்கள் பற்றிப் பேசினார்கள். அவள் சிறிது நேரத்திற்குத் துன்பத்தை மறந்து சிரித்தாள்.
“இன்றிரவும் நம்முடைய வீட்டுக்குத்தானே வரப்போகிறாய்?” என்று கேட்டான் அவன்.
“நான் வேறு எங்குமே தங்கக்கூடாதாம். அவர்கள் தனியாக எனக்கு ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.” என்றாள் அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டே.
“ஓ… அதற்குள் உனக்கு வீடே கிடைத்துவிட்டதா? பரவாயில்லையே. நான் கூட வீட்டைக் காலி செய்துவிட்டு உன்னுடன் வந்துவிடலாம் போலிருக்கிறதே.” என்று அவன் சிரித்தான்.
அதற்குள் அவள் பதில் சொல்வதற்குத் தன்னைத். தயார் செய்து வைத்திருந்தாள். “எங்கள் கம்பெனியில் சில கட்டித்திட்டங்கள் இருக்கின்றன. கல்யாணமாகாத பெண்களுக்குத்தான் வேலை. ஆண்களுடன் அதிகப் பழக்கம் வைத்துக்கொள்ளக் கூடாதாம். அப்படியே பழக்கம் வைத்துக் கொண்டால்கூட இரவில் அவர்களுடன் தங்கக்கூடாதாம்.”
“நான்தானே உன்னுடன் தங்க நினைக்கிறேன்.”
“இருந்தாலும் அதனால் சில தொல்லைகள் ஏற்படக்கூடுமோ என்று பயப்படுகிறேன். கொஞ்ச நாட்கள் வரையில் நாம் தனித்தனியாக ஒதுங்கியே இருப்போம்”
“ஒதுங்கி என்றால்…? கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறந்து விடப்போகிறாயா?”
“அப்படிப்பட்ட எண்ணமே எனக்குக் கிடையாது. என் உடலில் கடைசி மூச்சு இருப்பது வரையில் உங்களை நான் மறக்கவே மாட்டேன். எதிர்பாராத விதமாக நான் திடீரென்று இறந்துவிட்டால் கூட உங்களையேதான் சுற்றிக்கொண்டு இருப்பேன்”.
அவள் கண்கள் நீரைச் சிதற அடித்தன. நெஞ்சில் சுமை அழுத்தியதின் காரணமாக விம்மிச் சரிந்தது.
“நான் உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்.:”
“என்னை நீங்கள் கண்ணபிரானிடமிருந்து காப்பாற்றினீர் களே, அந்த ஒன்றே எனக்குப் போதுமானது. அதற்காக நான் உங்கள் அடிமையாக ஆயுள் முழுவதும் இருக்கலாம்.”
“வேண்டாம்.. நீ அடிமைப்பெண்ணாக என்றைக்குமே மாற வேண்டாம். நாம் சரிக்குச் சரியாக நல்ல நண்பர்களைப் போல் பழகுவோம் ”
நன்றி மறப்பது நன்றன்று என்பதைப் போல் முதல்வேலை யாக ராஜாமணி மாலினிக்கு டெலிபோன் செய்து அவளுடைய கம் பெனியில் வேலை கிடைத்திருக்கும் விபரத்தைச் சொன்னான்.
“ஓ அப்படியா? ரொம்ப ரொம்ப சந்தோஷம். சித்தப்பாவுக்குத்தான் நம்முடைய முதல் நன்றியைத் தெரியப்படுத்த வேண்டும்” என்று சொன்னவள், சுமார் பத்து நிமிடங்கள் வரையில் டெலிபோனிலேயே ‘போர்’ அடித்தாள்.
ஒரு மாதம் உருண்டோடியது.
மீனா வழக்கம்போல வே வேலைக்குப் போனாள். மனச்சாட்சிக்கு கொஞ்சம்கூட எவ்வித பிடிக்காத காரியங்களைச் செய்தாள்.
தினசரியும் அவள் ராஜாமணியைச் சந்திக்கத் தவறுவதில்லை. அவனைச் சந்திக்காமல் இருந்தால் இரவில் தூக்கமே வராது.. ஒரு முறையாவது அவன் முகத்தைப் பார்த்துத்தான் ஆகவேண்டும்.
மீனா அவனை உயிராக நேசித்தாள். தன்னையே அவனிடம் எந்த நோத்திலும் ஒப்படைக்கத் தயாராகவும் இருந்தாள். இந்த உலகத்திலேயே அவளுக்கென்று இருக்கும் ஒரே ஆதாரம் அவன் மட்டுப் தானே அவன் இல்லாவிட்டால் அவள் யாருக்காக, ஏன் வாழ வேண்டும்?
நாளாக நாளாக அவர்களுக்கிடையே -இருந்த அன்பு பன் மடங்கு வேகத்தில் வளர்ந்து அப்படியே காதலாகக் கனிந்து மலர்ந் தது. இன்பத்தின் உச்சிக்கே இருவரும் சென்றுவிட்டார்கள்.
ராஜாமணி அவளை மனப்பூர்வமாகக் காதலித்தான். உரிய நேரத்தில் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளவும் தயாராக இருந் தான்.
அவள் பகல் முழுவதும் வேலைக்குச் செல்வாள். இரவில் பத்து மணி வரையில் அவனுடன் சிரித்துச் சிரித்து மகிழ்வாள். கொஞ்சிக் கொஞ்சி ஆனந்தமடைவாள்.
கண்ண பிரானுடைய குறுக்கீடுகளும் அவளுக்கு இடை விடையே உண்டாகத்தான் செய்தன. அவர் மறைமுகமாக மிரட்டி வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்தார்.
ஒருநாள் அவளை வழியில் சந்தித்து, “மீனா, என்னதான் இருந்தாலும் ஒரு உண்மையை மட்டும் நினைத்துப் பார்க்க மறந்து விடக்கூடாது. நான் உன் கழுத்தில் தாலி கட்டிய கணவன்.” என்று நினைவுபடுத்தினார்.
அவள் தரையில் கோபத்துடன் காரி உமிழ்ந்துவிட்டு, “ஒரு பெண்ணின் வாழ்வைச் சீர்குலைக்க உங்களைப் போன்ற பெரியமனிதர் கள் எத்தனை பேர்கள் கிளம்பியிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. உங்களுக்கே இது வெட்கமாக இல்லையா?” என்று சாடினாள்.
“நான் எதற்காக வெட்கப்படவேண்டும்? என் மனைவி பேசும் வார்த்தைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் கேட்டு மகிழத் தானே வேண்டும். என்று அவர் சிரித்தபோது பொய் பற்கள் இரு செட்டும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அவர் சட்டென்று இரண்டையும் சரிசெய்துகொண்டார். பொய்ப் பற்கள் என்பதை அவள் தெரிந்துகொண்டால் மானம் போய்விடுமே.
“நான் மறுபடியும் சொல்கிறேறன், உங்கள் மனைவி அல்ல”.
‘உன் கழுத்தில் நான் தாலி கட்டினேன். தேவைப்படும் போது நான் இதை ராஜாமணியிடமும் சொல்ல முடியும்”.
அவர் இப்படிப் பேசியதும் மீனா கலகலத்துப்போனாள். தன்னுடைய வாழ்க்கையைச் சீரழிப்பதற்கென்றே சிலர் கிளம்பியிருப்பதைக் கவனிக்கும்போது அழுகை அழுகையாக வந்தது.
”நீங்கள் பெரிய மனிதர். என்னோடு தந்தையைப் போல் வாழ்ந்து என்ன சுகத்தைக் காணப்போகிறீர்கள் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். அவரிடம் எதையாவது உளறி என் எதிர் காலத்தையே இருளடையச் செய்துவிடாதீர்கள்.’
அவள் மிகவும் உருக்கமாக மன்றாடிக் கேட்டுக்கொண்டாள்.
ஆனால் அவர் மனமாற்றம் அடைய வேண்டுமே!
“மீனா, நான் கிழட்டுப்புலிதான்! நீ மான்குட்டிதான் ஆனாலும் என்றைக்காவது ஒருநாள் உன்னைச் சுவைத்தே தீருவேன். இது சத்தியம். கண்ணபிரான் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது” என்று அவர் கொக்கரித்தார்.
பாவம் மீனா! கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகி வெலவெலத்த கட்டடம் போலாகிவிட்டாள். +
– தொடரும்…
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை.