விக்டோரியா மகாராணியார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விக்டோரியா ராணியின் காலத்தில், ஒரு சனிக் கிழமை இரவு. பிரிட்டிஷ் பிரதம மந்திரியாய் இருந் தவர் ஒரு கத்தை அரசாங்கக் கடிதங்களுடன் அரண் மனைக்கு வந்தார். இரவு வெகு நேரமாயிற்று.

மகாராணியிடம் கடிதக்கட்டைக்கொடுத்து ‘மிக மிக அவசரத் தபால்களானதால் எப்படியாவது எல்லா வற்றையும் படித்துக் கையெழுத்திடவேண்டும். என்றார்.

நாளை ஞாயிறு அல்லவா என்று ராணி கேட்டார். ஆராதனைக்குப் பின் நீங்கள் வாசித்துக் கையெழுத்திடலாமே’ என்றார் மந்திரி. ‘இன்றியமையாத காரியங் களாகையால் இவ்வாறு உங்களைக் கேட்கிறேன்; நாளை மத்தியானம் 12-30 மணிக்கு வந்து பெற்றுக்கொள் கிறேன்’ என்று சொல்லிச் சென்றார் மந்திரி.

அக்கணமே ஆர்ச் பிஷப்பிற்குக் கடிதம் எழுதி, ‘நாளைக் காலையில் ஓய்வு நாள் ஆசரிப்பு’ என்ற பொருளில்தான் கோயிலில் பிரசங்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் ராணி அம்மையார்.

ஞாயிறு ஆராதனை முடிந்தது. மந்திரி ஞாயிறு இரவு வரை அரண்மனைக்கு வரவேயில்லை. திங்கள் காலை 10 மணிக்கு அரண்மனைக்கு வந்து ராணியிடம் மன்னிப்புக் கேட்டு நின்றார்.

“நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு” [யாத்திராகமம் 16:23]

“தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்” [எபேசியர் 4:4]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *