சாஸ்திரியாரின் துப்பாக்கி
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 213
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வேதநாயகம் சாஸ்திரியார் ஓர் இரவில் காட்டு வழியாக மாட்டு வண்டியில் யாத்திரை செய்தார். அப்பொழுது புலிவந்து விட்டது.
வண்டிக்காரன் பயந்து நடுங்கி, “ஐயா துப்பாக்கி யை எடுங்கள்” என்றான்.
அந்தக்காலம் மிஷனரிமார்களிடம் துப்பாக்கி உண்டென்பது வண்டிக்காரர்கள் அனை வருக்கும் தெரியும்.
சாஸ்திரியாரின் துப்பாக்கி வீணைதான். வீணையை எடுத்து மீட்டினார்.
‘தந்தை சர்வேஸ்பரனே உந்தன்மகன் இயேசுவுக் காய்’ என்ற பாட்டைக் கட்டின காலமது. அப்பாட் டை இனிய தொனியில் பாடினார்.
கோடாங்கி தன் சாமிபெயர்களை வரிசையாகச் சொல்லி உடுக்கடிக்கிறது போல, சாஸ்திரியாரும் ஆண்டவரின்அருமையான நாமங்களை அடுக்கடுக்காகத் தொடுத்துப் பாடினார். கடைசியாக, “வந்த வினையாவும் தீர்த்த” என்ற இறுதி அடிகளையும் இனிமையாகப் பாடி முடித்தார்.
பக்திப்பாடலின் முன் பயங்கரப் புலியும் சக்தி இழந்தது.
புலியும் பாய்ந்து ஓடிற்று.
“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்” (சங். 33:3)
“சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டு களினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்தி சொல்லுங்கள்.” [கொலோசெயர் 3:16]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
