நீண்ட வேண்டுதல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 9,783 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கூட்டு வழிபாடுகளில் நீண்ட ஜெபம் கூடாது. அநேகருக்கு இது விளங்குவதில்லை. சிலருக்கு நீண்ட வேண்டுதல் என்பது ஒரு பழக்கமாகவே போய் விட்டது.

நீண்ட ஜெபம் செய்வோர் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களை மறந்து விடுகிறார்கள். தனி ஜெபத்தில் தெய்வத்தோடு தோய்ந்து அதிகநேரம் உரையாடலாம். ஆனால் பொதுப்பிரார்த்தனை சுருக்கமாகவே இருக்கவேண்டும். ஜெப புத்தகத்தில் ‘சுருக்க ஜெபம்’ என்றுதானே இருக்கிறது? சமயத்திற்கு ஏற்ற ஜெபமே சரியான ஜெபம்.

பேதுரு கடலில் நடந்தபோது பயந்து அமிழ்ந்து போகையில் “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று தானே அலறினார்.

“சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும் மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாத வருமாயிருக்கிறவரே, என்னைக்காப்பாற்றும்” என்று ஆபத்தான அவ்வேளையில் பேதுரு ஜெபத்தை நீட்டி முழக்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பேதுரு அமிழ்ந்து போயிருப்பார்.

“ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அழகாக மூன்றே வார்த்தைகளில் ஜெபித்தார்.

“என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக” [சங்கீதம் 18:14]

“நீங்கள் ஜெபம் பண்ணும்போது..வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்”. [மத்தேயு 6:7]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *