வெற்று நிழல், போக, ஒரு வேத தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 965 
 
 

சின்ன மகள் கல்யாணம் என்ற காட்சி திருவிழாவுக்குத் தயாராகி, இன்றோடு பதினொரு நாளாகிறதுஅப்படியென்றால், ஒரு பெண் பெரியபிள்ளையானால், தான் அவளுக்கு சடங்கு சம்பிரதாயமெல்லாம். இல்லாமல் போனால், பூஜ்யம் என்ற, வட்டத்திற்குள்ளேயே அவள் வாழ்க்கை முடிந்து போகும்.

வாழ்க்கை என்ன பெரிய வாழ்க்கை. அது கிடைத்தால், தான் மகிழ்ச்சி. கொண்டாட்டமெல்லாம் என்று நம்புகிற பேதை மனம் குறித்து, தாரணிக்கு ஆழ்ந்த மனவருத்தமேயுண்டு. உலகம் இன்று வரைக்கும் அவள் காலடியில் இல்லை. புதை குழிதான் எமனால வந்துநிற்கிறது, சராசரி பெண்களைப் போல்பருவக் கோளாறில் அவளுக்கு எந்தக் கனவுமே வந்ததில்லை எனினும் உயிரோட்டமான நல்ல சிந்தனை நல்ல வாழ்க்கை நலம் காக்கும் நல்ல மனிதர்கள் இவைகளையே உலகமென்று நம்புகிற மகா பேதை அவள் பாவம் அதற்குப் பதிலான கொடூர வாழ்க்கை அன்பவங்களே, இன்று அவளுக்கு வெறும் உடலாக வாழ்ந்து விட்டுப் போகிற கதை தான் கல்யானமென்பது உடல் கூடிச் சங்கமிக்க்கிற, தசைவெறியேயென்றான பின் அவள் தன்னை ஒரு கங்கை என பிரகடனப்படுத்திக் கொள்வதில் வீண் மன உளைச்சல் தான் மிஞ்சியது. இனி கங்கை குளித்த, ஆகப் போவதொன்றுமில்லலை.. அவளை தழுவிக் கொள்ள வந்தது தென்றலல்ல சாக்கடை நீர் தான்.

கேடு கெட்ட உலகம்கண்ணைத் திறந்தால், அவள் கணவன் பாபு உட்பட எல்லாம் பூதங்களே. இந்த பூதம் வெறித்த மன்ணில் தான் அவள் மகராசியாகவுமாகியிருந்தாள் எதற்கு யாருக்கு அவள் மகராசியாக இருக்கிறாள். வேறொன்றுமில்லை எல்லாம் பாழாய்ப் போன குழந்தை செல்வங்களே. இதில் செல்வம் வெறும் வெற்றுக் கதை தான் பாபுவோடு கூடி பாசாங்குத் தனமாக வாழ்ந்து களித்ததன் விளைவே இந்த மக்கள் பெருக்கம் குழ்ந்தை பெருகினதே தவிர பாபுவிடமிருந்து அவர்களை நன்றாக வாழ வைப்பதற்காக காசு வாங்குவதேபெரும் சவாலாக இருந்தது எத்தனையோ ஒளிவு மறைவுகள் அவள் அறியாமல், அவன் நடத்திய கொடூர நாடகம் அதில் தேர் ஓடவில்லை சில்லு முறிந்த கதை தான் இதிலே மூன்று பெண் குழ்ந்தைகள் வேறு பட்டிலும் பொன்னிலும் அவர்களைக் குளிப்பாட்டாமல், பாலை வெறித்த மண்ணிலேஇன்று அவர்கள் இரு பெண்கள் ஏற்கெனவே பெரியர்களாகி கடைசிப் பெண் துளசியும் நிலா காய வந்து நிற்கிறாள், நிலா எங்கே வரப் போகுது?அவளை முதலாம் தண்ணீர் வார்ப்பில் சாதரணாமாகவே நடத்தினார்கள் மாமியைக் கூட அழைக்கவில்லை தாரணி போய் முகம் தாட்டி, அழைத்தாலும் பாபுவின் உறவுகளெல்லாம் துருவங்களே. அவர்கள் வாழ்வதற்கே, குப்பாக பாபுவின் டாக்டர் தம்பியை படிக்கவைப்பதற்காக இன்று தாரணி தன் நகைகளையெல்லாம் தாரை வார்த்து விட்டு, வெறும் மூளியாகவே போனாள் மருந்துக்குக் கூட பொட்டுத் தங்கம் கூட இல்லை, அவள் உடம்பில் காதிலும் இமிடேஷன் நகை தான் ஆனால் துளசியை இப்படி விடக் கூடாதுஇரண்டாம், தண்ணீர் வார்ப்பின் போது அவள் கழுத்துக்கு ஒரு தங்கச் சங்கிலியாவது போட வேண்டும் இது நடக்குமா? யார் இதை நிறைவேற்றுவது ஒரு வேளை வீடு, தேடிப் போய்ச் சொன்னால். அவர்கள் வரக் கூடும் பாபுவின் பெரியக்கா மகேசுவரி கரம்பனில் இருந்தாள் பெருந் தோட்டக்காரன் ஒருவனை முடித்து, வீடு வாசல் கொழிக்க நன்றாக இருக்கிறாள் அவளிடம் போவதானால்,ஒருநாள் பயனம் இரு பஸ் எடுத்து போக வேண்டும் புங்குடுதீவு பஸ்ஸில் ஏறினால், நல்ல காற்று வந்தாலும் தலை சுற்றும் .மற்றவள் சுமதி. பாபுவின் கடைத் தங்கை நர்ஸ் கல்லூரியில் படித்து, நர்ஸாக இருக்கிறாள்> கை நிறைய சம்பளம் கிடைக்கிற வேலை தான் சொல்லிப் பார்ப்போம் வருவது கடவுள் விட்ட வழி.

அன்று தான் திருவிழாவெகுநேரமாய் துளசிக்கு அலங்காரம் நடக்கிறது, அவள் பேசாமடந்தையாய் அந்த கணப்பொழுது நாடகம். இதிலும் பாபு ஆதரவுக் கரம் நீட்டாத்தலால், புதுப்ப்ட்டுப் புடவை கூட இல்லை அவளூக்கு. சாரு கட்டிக் கழித்த சேலை. இமிடேஷன் நலைக்கள். அவர்கள்நகைகொண்டுவந்து போடுவார்களென்று, வாசலில் தாரணியின் காத்திருப்புத் தவம். சமையல் முடிந்து வெகு நேரமாகிறது.

யாரிடமோ கடன் வாங்கிஅதையும் கச்சிதமாக முடித்திருந்தாள். எதற்கும் அவர்கள் வந்து சாப்பிட வேண்டுமே அது மட்டுமல்ல துளசி கழுத்துக்கு சங்கிலியும்கொண்டு வந்து போடுவார்கள், இது ஒரு நப்பாசை. கழற்றிக் கொடுத்த நகைகளுக்கெல்லாம் இழப்பீடாகவே, இந்த நகையின் வருகை. போனது நகை மட்டுமல்ல. அவள் வாழ்க்கையில் சோரம் போக இப்படி எத்தனையோ இழப்புகள் இதைக் கணக்கு எடுத்துக் கருவறுக்கத் தொடங்கினால், கடவுளுமில்லை, மாறாக அவள் புத்தி வெளுத்த கடவுளின் தேவதை. சுத்தகருவறுப்புக்கே அங்கு இடமில்லை. அது பளிங்கு மாளிகை அவளைப்பொறுத்தவை மனசெல்லாம் தங்கம். பட்டை தீட்டிய ஒரு மாணிக்க சோதி அவள் .இதற்கு ஈடாக, அவர்கள் கொண்டு வரப் போகிற அந்த சங்கிலிமட்டும் தான் அதைக் கொண்டு வந்து போட்டால், துளசி கூட ஒரு தங்கத் தேவதை தான் , இது நடக்குமா? தெரியவில்லை.

அந்தகிராமத்துப் பாதை வெறிச்சோடிக் கிடந்தது அவர்கள் காலடி மண் படாமல் காட்சிக்கு வராமல், இருந்த வேளையில் தான் அந்த அற்ப்தம் நிகழ்ந்தது.
வெகுநேரம் கழித்து மகேசுவரியும் சுமதியுமாக களாஇத்துப்போய் வந்து சேர்ந்தார்கள் ஒட்டாத உறவின் பிரதிபலிப்பாய், அவர்களின் முகங்களில் இருள் வெறித்துக் கிடந்தது. இந்த நீதி செத்து விட்ட வெறும் ஜடப் பதுமையாய் அவள். அவர்களுக்கு அது ப்ரிந்ததோ?நீதியின் குரல் செவி, மடுக்க முடியாமல் போன, முன் அவர்கள் முன் இருள் வெறித்த சூனியப் பார்வையுடன் அவள் நின்றிருந்தாள் பின்னர் அவர்களுக்கு விருந்தளித்து களித்த பின் தான் அந்த விபரீத நாடகம் அரங்கேறியது,அப்போது பாபுவும் கூட இருந்தான். இரத்த உறவுகள் என்பதால், அவன் முகம் அதீத களையுடன் மின்னிற்று இந்த உறவு நிலையையும் தாண்டி ஓர் உன்னத தரிசனம் . அவர்கள் போக எழுந்த போது நடந்தது போகும் போது துளசி ஓரு அலங்காரத் தேவதையாக வீற்றிருந்தாள் ஹாலுக்குள் திடீரென்று இருள் சூழ்ந்தது துளாசியின் கழுத்தில் விழுந்தது பொன் நகையல்ல. புதிருக்குள் இருந்து பூதம் தான் கிளம்பியது. துளசிக்கு அவர்கள் அளித்தது பெறுமதியான ஒன்றல்ல காசுக் காட்டாவது கொடித்திருந்தால் சந்தோஷமாக, இருக்கும் செலவையும் சமாளிக்கலாம் ஆக நூற்றாம்பது ரூபாய் காசு மட்டுமே அவர்கள் கொடுத்த அன்பளிப்பு செய்த பாவத்துக்கு, இது பரிகார சித்தியல்ல இன்னும் பாவக் கழுவாய் சுமக்கவே அவர்கள் வந்திருப்பதாகப்பட்டதுபாபு இதை ஒரு வேடிக்கை போல தூரத்திலிருந்து அர்த்துக் கொண்௶இருந்தான் அவர்கள் போன பின் துளசி சுமை ஏறிக்கிடந்த தன் உடம்பை, ஆசுவாசப்படுத்திக் கொள்அதற்காக எழுந்து உள்ளே பின் ஹாலில் ஒரு கனத்த அமைதி நிலவிற்றுஅவர்கள் அவளுக்குப் பரிசளித்த அந்தப் பெறுமதி இழந்தகாசைவிரைவாக எடுத்துக் கொண்டு முகம் சிவக்க பாபுவுடமே வந்தாள் அவன் ஒற்றை நிழலில் தூங்கி வழியும் நிலையில் அவள் கேட்டாள்
இதைப் பார்த்தியளே?

அவன் சட்டென்று விழித்து அவளை முறைத்தான்

ஏன் இதுக்கென்ன ? நல்லாய் தானே இருக்கு இந்தக் காசு நீ வேறு விதமாய் நினைத்திருப்பாய் அது ஹான்கோபத்திலை குதிக்கிறாய் அதற்கு தார்மீக எரிச்சல் வர அவள், கேட்டாள் உங்களுக்கு பேசும் சக்தி, நியாய புத்தி இருந்தால், இண்டைக்கு எனரை பிள்ளை மகாரணிதான், அது தான் துளசியைப் பற்றி சொல்ல வாறன் இமிடேஷன் நகையைத் தவிர வேறு ஒன்றூம் அதுக்குப் போடேலை உங்கடை தங்கைச்சிமார் போட்டது இப்ப சந்தி சிரிக்க வந்து நிக்குது உதை அப்பவல்லோ நீ கேட்டிருக்கவேணும் நீ!ரகுவிட்டை கேடிருக்க வேணும்’ ஓ! இது வேறு கதையா? ஆர் இந்த ரகு?

என்ன விளையாடுறாய்? பெரியடாக்டர் அவன் உன்ரை நகை வைச்சு படிச்சு வந்தவன். அப்பவே நீ கேட்டிருந்தால் தந்திட்டு கை கழுவி விட்டிருப்பான்.
அதற்கு சினம் காட்டாமல் பூவாய் உதிர்ந்தது அவல் குரல்.

இப்ப மட்டும் என்ன வாழுது உரவெல்லாம் பிரிஞ்சு வெகு காலமாகுது ஒரு யுகமே போய்விட்டது. இதிலே நீங்கள் ஆர்? நான் ஆர்? எல்லாம் முடிஞ்சு போச்சு என் தலைக்கு மேலே, வெள்ளம் வந்து நான் மூழ்கி கனகாலமாச்சுஇதிலே நீதிகேட்டு புலம்பிற என் மனசை செருப்பால் அடிக்கவேணும். எனக்கு நல்லாய் வேணும் சங்கிலி காப்பு பட்டு பொன் எல்லாம் எனக்கு வெறும் கதைதான் இந்த வெறும் காசை வைத்து குடி மூழ்க்கிப் போகிற அளவுக்குநான் ஒன்றும் பேதையல்ல ஆகயளாவு வாழ்கிற புத்தி எனக்கு தெளிந்த நீரொடை. நான் கங்கைஎன்று குளிச்சு பார்த்தல் தான் தெரியும் நீங்கள் தான் அதுக்கு வரேலை என்றாள் அவள் பதிர்போடும் விதமாக. அவன் அதை அவிழ்க்க முடியாமல், மூச்சுத் திணறியேசெத்து விடுவான் போல், தோன்றியது அப்படியொரு புதர் வந்து மூடியது பதரல்ல புதிர் தான் என்பது கூட புரியாமல் ஒரு வெறும் மனிதனாகவே இப்போது அவன் காட்சிக்கு நின்றான் கனவு தான் வந்தது இப்பவும் அவளைக் கட்டி பிடித்து உச்சி மோந்து உயிர் மயங்கித் தழுவது போல இந்தத் தழுவுதல் ஒன்றே, அவனின் சாணிக்கிய வீரமாக அதை வெறுப்புடன், நினைவு கூர்ந்தாள்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *