பொறுமைமிக்க சிறுமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 28 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் பஞ்சம் நேர்ந்தது. பெரியவர்களும் சிறியவர்களும் வாடினர். 

செல்வனொருவன், அப்பஞ்சம் தீரும்வரை ஒவ் வொரு நாளும் ஒரு கூடை நிறைய அப்பங்கள் சுட்டு, ஊரிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் ஆளுக் கொன்றாய்க் கொடுக்க ஏற்பாடு செய்தான். 

பசியால் வாடிய சிறுவரும் சிறுமியரும், நீ முந்தி, நான் முந்தி என்று மோதுக்கொண்டு வந்து கூடுமானவரை பெரியதாகப் பார்த்து ஒவ்வோர் அப்பம் எடுத்துக்கொண்டு போனார்கள். முதலில் எடுத்தவர்களுக்குப் மிகப்பெரிய அப்பமும் வரவரச் சிறிய அப்பங்களும் கிடைத்தன. கூட்டத்துடன் மோதாமல் தனித்து ஒதுங்கிப் பொறுமையுடன் நின்ற ஒரு சிறுமிக்கு இறுதியில் மீந்திருந்த மிக மிகச் சிறிதான ஓர் அப்பமே கிடைத்தது. 

நாள்தோறும் அச்சிறுமி இப்படி யே காத்திருந்து கடைசிச் சிறு அப்பத்தை எடுத்துக்கொண்டு போவாள். அதனோடு பிற சிறுவரைப்போல் அதை அங்கேயே தின்று விடாது, அவள் அத னைத் தன் மடியில் வைத்துக்கொண்டு போவாள். 

செல்வன் இதனை நன்கு கவனித்து அவள் மீது பரிவு கொண்டான். 

சிறுமி அக்கடைசி அப்பத்தைக்கொண்டு போய் மெலிந்து வாடும் தன் தாய்க்குக் கொடுத்து, அவள் வற்புறுத்திக் கொடுக்கும் சிறு துண்டை மட்டிலுமே தான் தின்று வந்தாள். 

ஓருநாள் வழக்கம்போல் அச்சிறு அப்பத்தை வீட்டிற்குக் கொண்டுபோய்த் தாய் முன் அதைப் பிட்டுப் பார்க்கும்போது உள்ளே யிருந்து ஒரு பொன் காசு விழுந்தது. 

வறியளாயினும் மன நிறைவும் நேர்மையும் உடைய அச்சிறுமியின் தாய், அதனை உடனே செல்வரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினாள். செல்வன் அதனைக் கண்டதும் முன்னிலும் பன் மடங்கு மசிழ்ச்சியும் வியப்பு மடைந்தான். 

“எல்லாப் பிள்ளைகளும் தம் பசியினால் அப்பத்தை உடனே தின்றுவிட நீ மட்டும் ஏன் கொண்டுபோகிறாய்?” என்று அச்செல்வன் கேட்டான். 

அதன் காரணம் அறிந்தபோது அவன் உள் ளம் முன்னிலும் கனிவுற்றது. அவன் அப்பொற் காசை அவளுக்கே கொடுத்ததோடன்றி நாள் தோறும் அப்பஞ்சம் தீரும்வரை ஒவ்வொரு காசு அவள் வீட்டிற்கு அனுப்பிவர ஏற்பாடுஞ் செய்தான். 

சிறுமியும் தாயும் அதனைத் தமக்கெனப் பெற் றுக் கொள்ளாமல் ஏழைகளின் பொருட்டுப் பெற்றுத் தம்மாலியன்ற அளவு ஏழைகட்கு அதனால் உணவிட்டு வந்தனர். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *